Published:Updated:

மிஸ்டர் மியாவ்

டாப்ஸி
பிரீமியம் ஸ்டோரி
டாப்ஸி

காதல் தோல்வி குறித்து ஸ்ருதி ஹாசன்...

மிஸ்டர் மியாவ்

காதல் தோல்வி குறித்து ஸ்ருதி ஹாசன்...

Published:Updated:
டாப்ஸி
பிரீமியம் ஸ்டோரி
டாப்ஸி
  • விஜய் சேதுபதியுடன் ‘லாபம்’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் ஸ்ருதி ஹாசன், பேட்டி ஒன்றில் தனது காதல் தோல்வி குறித்துப் பேசியிருக்கிறார். ‘இப்போதும் என்னிடம் எந்த ஃபார்முலாவும் இல்லை. நல்லவர்கள் நன்றாகத்தான் நடந்துகொள்கிறார்கள். சில சமயங்களில் தவறும் செய்கிறார்கள். அதற்காக நான் வருத்தப்படவில்லை. ஒரு சிறந்த காதலைத் தேடிக்கொண்டிருக்கிறேன். அது வரும்போது, உலகத்துக்கு அறிவிக்கக் காத்திருக்கிறேன்!’ என்று குறிப்பிட்டிருக்கிறார் ஸ்ருதி.

ஸ்ருதி ஹாசன்
ஸ்ருதி ஹாசன்
  • வித்தியாசமான கதைகளில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா, தற்போது ராதாமோகன் இயக்கும் படத்தில் நடித்துவருகிறார். பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்துக்கு ‘பொம்மை’ எனப் பெயரிட்டிருக்கிறார்கள். இசை, யுவன் ஷங்கர் ராஜா.

  • ‘தனுசு ராசி நேயர்களே’, ‘கசடதபற’, ‘தாராளப் பிரபு’ உள்ளிட்ட படங்களில் நடித்துவரும் ஹரீஷ் கல்யாண், அடுத்ததாக சசி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
டாப்ஸி
டாப்ஸி
  • தனது 50-வது படமான ‘மகா’வுக்குப் பிறகு, மீண்டும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கதையில் நடிக்கவிருக்கிறார் ஹன்சிகா. திகில் - காமெடி ஜானரில் உருவாகும் இந்தப் படத்தை, ‘அம்புலி’ பட இயக்குநர்கள் ஹரி ஷங்கர் - ஹரீஷ் நாராயண் இயக்குகிறார்கள். வில்லனாக, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் நடிக்கவிருக்கிறார். ஸ்ரீசாந்துக்கு, தமிழில் இது முதல் படம்.

  • ‘கோமாளி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் அஹமத் இயக்கத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி. ஹீரோயின் டாப்ஸி. ‘காலா’வில் அதிரவைத்த பாலிவுட் நடிகர் நானா படேகர்தான் இந்தப் படத்தின் வில்லன்.

ம்யூட்

  • தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகர் நடித்த வரலாற்றுப் படத்தில் நம்பர் நடிகையைவிட, மில்க் நடிகைக்குத்தான் நடிக்கும் வாய்ப்பு அதிகமாக இருந்தது. இப்போது அவருக்கு ஏராளமான தெலுங்குப் பட வாய்ப்புகள் அணிவகுப்பதால், நம்பர் நடிகையை ஓரம்கட்டுகிறார்கள் தயாரிப்பாளர்கள்.

  • டாப் நடிகரின் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதால், தனது படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறது என்ற வருத்தத்தில் இருக்கிறார் மன்னர் நடிகர். ‘அவர் படத்தைவிட எந்தவிதத்தில் என் படம் குறைந்துபோய்விட்டது?’ எனப் புலம்பிக்கொண்டிருக்கிறாராம்.