அறிமுக இயக்குநர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடிக்கவிருக்கும் படம், ‘இரும்புத்திரை-2’. விஷாலுக்கு ஜோடியான ஷ்ரதா ஸ்ரீநாத்துக்கு, போலீஸ் கதாபாத்திரமாம். தவிர, நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க, ரெஜினா கஸாண்ட்ரா கமிட்டாகியிருக்கிறார். இந்தப் படத்துக்கு ‘சக்ரா’ எனப் பெயரிட்டுள்ளதாக தகவல்.

நீண்டகாலமாக பி.எம்.டபிள்யூ காரைப் பயன்படுத்திவந்த த்ரிஷா, தற்போது பென்ஸுக்கு மாறியிருக்கிறார். அதிலும் பென்ஸில் விலை அதிகமான `எஸ் கிளாஸ்’ கார்!

சிவாஜி - பிரபு, சிவகுமார் - சூர்யா வரிசையில் விக்ரம் - துருவ் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். துருவ் அறிமுகமாகும் ‘ஆதித்யா வர்மா’ படத்தைத் தயாரித்த அதே நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்கிறது.

இயக்குநர் ஸ்ரீகுமார் மேனனால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார் ‘அசுரன்’ படப்புகழ் மஞ்சுவாரியர். கடந்த 2017-ம் ஆண்டு மஞ்சுவின் தொண்டு நிறுவனத்துக்கும் ஸ்ரீகுமாரின் நிறுவனத்துக்கும் இடையேயான ஒப்பந்தம், சில காரணங்களால் ரத்தானது. அதன் பிறகு, ஸ்ரீகுமார் இயக்கிய ‘ஒடியன்’ படத்தின் ஷூட்டிங்கின்போது தனக்கு அவரால் அச்சுறுத்தல் வந்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார் மஞ்சு.

`காப்பான்’ படத்தையடுத்து, ‘அந்தாதுன்’ தமிழ் ரீமேக்குக்கு திரைக்கதை, வசனம் எழுதுவதில் பிஸியாக இருக்கிறார் பட்டுக்கோட்டை பிரபாகர். இந்தப் படத்தில் பிரசாந்த் நடிக்கவிருக்கிறார். அடுத்து, துல்கர் சல்மான், விக்ரம் பிரபு ஆகியோரை வைத்து ஜே.டி.ஜெர்ரி இயக்கும் படத்திலும் பணியாற்றிவருகிறார் பட்டுக்கோட்டை பிரபாகர்.

‘பல ஆண்டுகளாக எதிரெதிர் துருவங்களாக இருக்கும் பாடல் ஆசிரியரையும் இசை அமைப்பாளரையும் தன் படத்தில் இணைத்துவிடலாம்’ என கனவு கண்டுகொண்டிருந்த சாமி பெயர் கொண்ட இயக்குநருக்கு, பெருத்த ஏமாற்றம்தான் மிஞ்சியதாம். இயக்குநரின் ஆசையை அறிந்த இசைமேதை, அவரை கண்டபடி திட்டித் தீர்த்துவிட்டாராம். அதிலிருந்து இசைமேதையைச் சந்திக்கக்கூடத் தயங்குகிறாராம் இயக்குநர்.