அரசியல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ் - இனி... ஆ!

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிக்கும் ‘த்ரிஷ்யம் 2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது.

* ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் வெற்றிபெற்ற முகென் நடிக்கும் முதல் படத்தை ‘வெப்பம்’ படத்தை இயக்கிய அஞ்சனா அலிகான் இயக்குகிறார். அதில் முகெனுக்கு ஜோடியாக ‘மிஸ் இந்தியா 2018’ பட்டம் வென்ற அனுகீர்த்தி வாஸ் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இவருக்கும் இதுதான் முதல் திரைப்படம்.

* மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிக்கும் ‘த்ரிஷ்யம் 2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. முதல் பாகத்திலிருந்த த்ரில்லர் விஷயங்களெல்லாம் இந்தப் பகுதியில் இருக்காது என்கிறார்கள். இது முழுக்க முழுக்க ஃபேமிலி டிராமா ஜானர்தானாம்.

மிஸ்டர் மியாவ் - இனி... ஆ!

* கோலிவுட்டில் ஏகப்பட்ட ஆந்தாலஜி கதைகள் உருவாகிக்கொண்டிருக்கின்றன. அப்படி, உருவாகும் அனைத்திலும் இயக்குநர் கெளதம் மேனன் பெயர் நிச்சயம் இருக்கும். சிட்டி சப்ஜெக்ட்டில் சிக்ஸர் அடிக்கும் இவருக்கு, கிராமத்துக் கதையொன்றைப் படமாக்க ஆசையாம். அதனால், ‘சீவலப்பேரி பாண்டி’ கதையை வெப் சீரிஸாக இயக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறாராம்.

* ‘வாகை சூடவா’ படத்தில் அறிமுகமான நடிகை இனியா, தமிழ்ப்படங்கள் தவிர, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துவந்தார். தற்போது ஹீரோயினாக மட்டுமல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துவருகிறார். அடிக்கடி இன்ஸ்டாகிராமில் தன் புகைப்படங்களைப் பதிவிடுவது இவர் வழக்கம். ஓர் அருவிக்கு அருகேயுள்ள நீரோடையில் படுத்தபடி இருக்கும் புகைப்படம் இணையத்தில் செம வைரல். காரணம், அவர் அணிந்திருந்த பிகினியும் வெள்ளை நிற உடையும்தான்.

மிஸ்டர் மியாவ் - இனி... ஆ!

* ‘அந்தாதுன்’ எனும் இந்திப் படத்துக்கு, கடந்த ஆண்டு மூன்று தேசிய விருதுகள் கிடைத்தன. ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடித்த இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ரீமேக் ஆகிறது. இந்தியில் தபு நடித்த கேரக்டரில் தெலுங்கில் தமன்னா நடிக்கிறார். ‘தபு நடித்த கேரக்டரில் நடிப்பது தனக்குப் பெருமை’ எனக் கூறியிருக்கிறார். அதன் தமிழ் ரீமேக்கில் யார் நடிக்கவிருக்கிறார்கள் என்பதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்கள்.