Published:Updated:

மிஸ்டர் மியாவ் - அக்‌ஷ்!

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

தென்னிந்திய சினிமாவில் பாப்புலர் நாயகியாக மாறிவிட்டார் ராஷ்மிகா மந்தனா.

மிஸ்டர் மியாவ் - அக்‌ஷ்!

தென்னிந்திய சினிமாவில் பாப்புலர் நாயகியாக மாறிவிட்டார் ராஷ்மிகா மந்தனா.

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

* வைபவ், வாணி போஜன் நடித்திருந்த ‘லாக்கப்’ ஜீ 5 தளத்தில் வெளியாகி, நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தைத் தயாரித்த நிதின் சத்யா, தன்னுடைய அடுத்த படத்தைத் தொடங்கிவிட்டார். அறிமுக இயக்குநர் இயக்கும் இந்த காமெடி ஜானர் கதையில் மஹத் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘சில்லுக்கருப்பட்டி’, ‘மகளிர் மட்டும்’ படத்தில் நடித்த நிவேதிதா சதீஷ் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

* ‘ஆக்‌ஷன்’ படத்தில் தமிழில் அறிமுகமான ஐஸ்வர்யா லட்சுமி, தனுஷுடன் ‘ஜகமே தந்திரம்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மலையாளத்தில் நிவின் பாலிவுடன் ‘பிஸ்மி ஸ்பெஷல்’, ஹீரோயின் சென்ட்ரிக் கதையான ‘அர்ச்சனா 31 நாட் அவுட்’ என அடுத்தடுத்து படங்கள் இவர் கைவசமிருக்கின்றன. இந்தநிலையில், மலையாளத்தில் டொவினோ தாமஸுக்கு ஜோடியாக ‘காணக்காணே’ என்ற புதிய படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இந்த ஜோடி ஏற்கெனவே இணைந்து நடித்த ‘மாயநதி’ நல்ல ஹிட்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

* தென்னிந்திய சினிமாவில் பாப்புலர் நாயகியாக மாறிவிட்டார் ராஷ்மிகா மந்தனா. அடிக்கடி இன்ஸ்டாகிராம் லைவ்-ல் ரசிகர்களுடன் உரையாடுவது, குறும்புத்தனமான சேட்டைகள் செய்வது எனச் சுட்டித்தனமாக ஏதாவது செய்துகொண்டே இருப்பார். தற்போது அவர் கடற்கரையில் வொர்க்அவுட் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவிட்டது. கார்த்தி நடிக்கும் ‘சுல்தான்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகவிருக்கிறார்.

மிஸ்டர் மியாவ் - அக்‌ஷ்!

* ‘துப்பாக்கி’, ‘ஆரம்பம்’, ‘போகன்’ உள்ளிட்ட படங்களில் நடித்த அக்‌ஷரா கெளடா, தற்போது கார்த்திக் ராஜூ இயக்கும் ‘சூர்ப்பனகை’ படத்தில் ரெஜினா கஸாண்ட்ராவுடன் இணைந்து நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் என குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார். இவர் அடிக்கடி போட்டோஷூட் செய்து இன்ஸ்டாகிராம்வாசிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பது வழக்கம். அப்படி தற்போது நீச்சல் குளத்தில் சிவப்பு நிற பிகினியில் தான் இருக்கும் புகைப்படங்களைப் பதிவிட்டிருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய்ப் பரவிவருகின்றன.

* தமிழ் சினிமாவில் பல ஆந்தாலஜி கதைகள் உருவாகிவருகின்றன. சுஹாசினி மணிரத்னம், ராஜீவ் மேனன், கெளதம் மேனன், சுதா கொங்கரா, கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் இணைந்து தனித்தனிக் கதைகளை இயக்கி முடித்திருக்கிறார்கள். `புத்தம் புது காலை’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இதில் நம்பிக்கை, மறுவாழ்வு ஆகியவைதான் பேசப்பட்டிருக்கின்றனவாம். இது, வரும் அக்டோபர் 16-ம் தேதி அமேஸான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism