அரசியல்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ஷில்பா மஞ்சுநாத்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷில்பா மஞ்சுநாத்

யோகி பாபு நடித்த ‘மண்டேலா’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், இன்னமும் அடுத்த படத்தை அறிவிக்காமல் அமைதிகாக்கிறார் இயக்குநர் மடோன்னே அஸ்வின்.

தற்போது வெளிப்படங்களில் நடித்துவரும் நயன்தாரா, இனிமேல் சொந்தப் படங்களில் மட்டுமே நடிக்க முடிவெடுத்திருக்கிறாராம். திருமண நேரத்தில் தேதி ஒதுக்கீடு தொடங்கி மற்ற வேலைகளைச் செய்ய முடியாது என்பதால்தான் இந்த முடிவாம். அதனால் அவருடைய ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் கதை கேட்கும் பணிகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறது. ‘அறம்’ படத்தைப் போல் சமூக அக்கறை மிகுந்த கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கச் சொல்லியிருக்கிறாராம் நயன்!

‘ராட்சசன்’ என்கிற வெற்றிப் படத்தைக் கொடுத்த சூட்டோடு, தனுஷுக்குக் கதை சொல்லி சத்யஜோதி நிறுவனத்தில் கையெழுத்திட்டார் இயக்குநர் ராம்குமார். அப்போது தனுஷ் பல படங்களில் பிஸியாக இருக்க, ‘ஒரு வருடம் கழித்து வந்தாலும் ஓகே’ எனச் சொல்லிக் காத்திருந்தார் ராம்குமார். ஒரு வருடம் பல வருடங்களாக மாற, சத்யஜோதி நிறுவனமே தனுஷிடம் ‘தேதி உண்டா இல்லையா?’ எனக் கேட்டது. தனுஷ் சரியான பதிலைச் சொல்லாததால், வேறு ஹீரோவை புக் பண்ண முடிவெடுத்துவிட்டார்களாம். இயக்குநரும் நிறுவனத்தின் முடிவுக்குத் தலையாட்டிவிட்டாராம்.

மிஸ்டர் மியாவ்

நட்டி நடராஜுடன் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் ஷில்பா மஞ்சுநாத் நடிக்கும் ஒரு படம் மட்டும்தான் கைவசம் இருக்கிறது. ஆனால், அடுத்தடுத்து வெப் சீரீஸ் வாய்ப்புகளுக்காகக் கதை கேட்டுக் கொண்டிருக்கிறார் ஷில்பா. இடையில் இன்ஸ்டாவிலும் அம்மணி செம பிஸி.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

யோகி பாபு நடித்த ‘மண்டேலா’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், இன்னமும் அடுத்த படத்தை அறிவிக்காமல் அமைதிகாக்கிறார் இயக்குநர் மடோன்னே அஸ்வின். ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்யுடன் நடிக்கும் யோகி பாபு, ‘விஜய் சாருக்கு கதைவெச்சிருந்தா சொல்லுப்பா… நான் டைம் வாங்கிக் கொடுக்கிறேன்’ என அஸ்வினிடம் கேட்டாராம். “இப்போதான் கதை ரெடி பண்ணிட்டு இருக்கேன். கதை முடிவானதும் யார் பண்ணலாம் என்பதைச் சொல்லிடுறேன்” என்றாராம்.

ஜோதிகாவின் 50-வது படமாக உருவாகியிருக்கும் ‘உடன்பிறப்பே’, வரும் 14-ம் தேதி ஓடிடி தளத்தில் ரிலீஸாகிறது. அதே தேதியில் ‘ரத்த சம்பந்தம்’ என்கிற தலைப்பில் இந்தப் படத்தைத் தெலுங்கிலும் ரிலீஸ் செய்கிறார்கள். சென்டிமென்ட், ஆக்‌ஷன் இரண்டும் இருப்பதால் தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என இந்த ஏற்பாடாம். சூர்யா, கார்த்தி இருவருக்கும் தெலுங்கில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், ‘ரத்த சம்பந்தம்’ மூலமாக ஜோதிகாவுக்கும் அங்கே பெரிய ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என்கிறார்கள்!