* மாளவிகா மோகனன் - விஜய்யின் ‘மாஸ்டர்’ இன்னும் வெளியாகவில்லை. இருந்தாலும் விஜய் பட நாயகி என்பதால், மாளவிகாவுக்கு இணையத்தில் ரசிகர்கள் படையே உருவாகி விட்டது. அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் விதவிதமான போட்டோக்களைப் பதிவிட்டு லட்சக்கணக்கான ஹார்ட்டின் களைப் பெற்றுவருகிறார். தற்போது கோவாவிலிருக்கும் மாளவிகா, தனது `சூடான’ கடற்கரைப் படங்களை வெளியிட்டுவருகிறார்!
* இந்த வருடம் துல்கர் சல்மானுடன் `வரனே அவஷ்யமுண்டு’ படத்தில் நடித்திருந்தார் கல்யாணி பிரியதர்ஷன். படம் செம ஹிட். மோகன்லால் மகன் பிரணவ்வுடன் மலையாளத்தில் ‘ஹிருதயம்’, தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜெயராம் மகன் காளிதாஸுடன் `புத்தம் புதுக் காலை’ ஆகிய படங்கள் இவர் நடிப்பில் வெளிவரத் தயாராக இருக்கின்றன. சிம்புவுடன் ‘மாநாடு’ வேறு காத்திருக்கிறது. சமீபத்தில் ‘ஸ்கை டைவிங்’ செய்திருக்கும் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, லைக்ஸ் மழையில் நனைந்துவருகிறார் கல்யாணி.

* ‘தடக்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான ஜான்வி கபூரின் இரண்டாவது படம் `குஞ்சன் சக்ஸேனா.’ இது நேரடியாக நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதைத் தொடர்ந்து நிறைய கதைகள் கேட்டுவந்தவர், இரண்டு ரீமேக் படங்களிலும் நடிக்கவிருக்கிறார். ஒன்று, மலையாளத்தில் பயங்கர ஹிட்டான ‘ஹெலன்.’ இன்னொன்று, தமிழில் நயன்தாரா நடித்து நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கோலமாவு கோகிலா.’
* தமிழில் ‘இந்தியன் 2’, ‘அயலான்’ மற்றும் இந்தியில் இரண்டு படங்கள் ரகுல் ப்ரீத் சிங் கைவசம் இருக்கின்றன. தற்போது, டோலிவுட்டில் சிரஞ்சீவியின் தங்கை மகன் வைஷ்ணவ் தேஜ் படத்தில் பக்கா கிராமத்துப் பெண்ணாக நடித்துவருகிறார் ரகுல். தவிர, நிதின் நடிக்கும் த்ரில்லர் படமொன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்தப் படத்தில் இன்னொரு நாயகியாக பிரியா பிரகாஷ் வாரியர் நடிக்கிறார். இது இவரின் முதல் தெலுங்குப் படம்!
* சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற தோனி, தற்போது ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடிவருகிறார். `தோனி என்டர்டெயின்மென்ட்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கும் தோனி, சி.எஸ்.கே அணியைப் பற்றி ‘Roar of the Lion’ என்ற டாக்குமென்டரி சீரிஸைத் தயாரித்தவர், தற்போது அகோரிகளைப் பற்றிய கதையொன்றை தயாரிக்கவிருக்கிறார். தயாரிப்பு நிறுவனப் பணிகள் அனைத்தையும் தோனியின் மனைவி சாக்ஷிதான் கவனித்துக் கொள்கிறார்.
