அரசியல்
சமூகம்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ஜான்வி கபூர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜான்வி கபூர்

பி.எஸ்.மித்ரன் இயக்கும் ‘சர்தார்’ படத்தை ரொம்பவே நம்புகிறார் கார்த்தி.

சம்பள விஷயத்தில் சரியாகச் செயல்படும் தயாரிப்பாளர்களை மட்டுமே தேர்வுசெய்வதை வழக்கமாகவைத்திருக்கிறார் அஜித். அந்த வகையில் அஜித்தின் அடுத்த படத்தை லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிக்கிறார். அதற்கு அடுத்தபடியாக ‘சிறுத்தை’ சிவாவின் கதையை ஓகே செய்துவைத்திருக்கும் அஜித், சத்யஜோதி ஃபிலிம்ஸ், லைகா, ஏ.ஜி.எஸ் ஆகிய நிறுவனங்களில் ஒன்றைத் தேர்வுசெய்வார் எனச் சொல்லப்பட்டது. ஆனால், இந்த நிறுவனங்களைத் தாண்டி அஜித்தை வளைத்திருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இதுவரை அஜித் வாங்காத பெரிய சம்பளத்தைப் பேசி முடித்திருக்கிறதாம் சன் பிக்சர்ஸ்.

ஜான்வி கபூர்
ஜான்வி கபூர்

கோடம்பாக்கத்தில் சைலன்ட்டாக முன்னேறிவரும் நடிகை, பிரியா பவானி சங்கர். நல்ல கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் பிரியா, ‘இந்தியன் 2’ படத்தில் கமலுடன் கைகோக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார். சம்பள விஷயத்தில் கறார் காட்டாதது, ஷூட்டிங் ஸ்பாட்டில் பந்தா பண்ணாதது என இவருடைய பாசிட்டிவ் விஷயங்களைப் பட்டியல் போட்டுச் சொல்லும் சினிமாப் புள்ளிகள், ஒரு முன்னணித் தமிழ் நடிகையின் இடத்தை பிரியா பவானி சங்கர் பிடித்துவிட்டதாகவும் பரப்புகிறார்கள். அவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஜான்வி கபூர்
ஜான்வி கபூர்

‘தப்பாட்டம்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் ‘நிலா’ சுதாகர். பின்னர் சற்குணம் இயக்கத்தில் ‘களவாணி -2’ படத்தில் வில்லனாக கவனம் ஈர்த்தார். இப்போது சசிகுமார், அதர்வா, விமல் உள்ளிட்ட முக்கிய நாயகர்களுடன் சரியான பாத்திரங்களைத் தேர்வுசெய்து நடித்துவருகிறார். சமீபத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் சுதாகரின் நடிப்பை சசிகுமார் பாராட்ட, ‘இந்த மாதிரி இன்னும் நாலு பேர்கிட்ட நல்ல பெயர் வாங்கினால் போதும் சார்…’ என்று சிலிர்க்கிறார் சுதாகர்.

பி.எஸ்.மித்ரன் இயக்கும் ‘சர்தார்’ படத்தை ரொம்பவே நம்புகிறார் கார்த்தி. திட்டமிட்டதைத் தாண்டி படத்தின் பட்ஜெட் எகிறிய நிலையிலும், தன் நண்பரும் தயாரிப்பாளருமான லஷ்மணனிடம் சொல்லி, படத்தைத் தொடரச் சொன்னாராம் கார்த்தி. இருவிதமான பாத்திரங்களில் இந்தப் படத்தில் தோன்றும் கார்த்தி, ஒரு பாடலையும் பாடியிருக்கிறார். “நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் கொடுக்கும் மெகா ஹிட் படமாக ‘சர்தார்’ இருக்கும்” என நெருக்கமானவர்களிடம் நம்பிக்கையாகச் சொல்லிவருகிறார் கார்த்தி.

ஜான்வி கபூர்
ஜான்வி கபூர்

உஷ்...

சீரியல் பக்கமிருந்து சினிமாவுக்கு வந்த இளம் நடிகை, வெற்றியைப் பெயராகக்கொண்ட நடிகரிடம் ரொம்பவே அன்பு பாராட்டுகிறாராம். கதை கேட்பது தொடங்கி ஷூட்டிங் வரை நடிகரிடம் கலந்து பேசியே முடிவெடுக்கிறாராம். ‘நட்பைத் தவிர வேறில்லை…’ என இல்லத் தரப்புக்கு விளக்கம் சொல்லியிருக்கிறாராம் நடிகை!