Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ரெபா
பிரீமியம் ஸ்டோரி
ரெபா

அஜித்தின் ‘வலிமை’ பட ஷூட்டிங், சமீபத்தில் ரஷ்யாவில் நடந்து முடிந்தது. அதனால், தன் படத்தின் ஷூட்டிங்கும் ரஷ்யாவில் நடத்தப்பட வேண்டும் என உறுதியாகச் சொல்லிவிட்டாராம்

மிஸ்டர் மியாவ்

அஜித்தின் ‘வலிமை’ பட ஷூட்டிங், சமீபத்தில் ரஷ்யாவில் நடந்து முடிந்தது. அதனால், தன் படத்தின் ஷூட்டிங்கும் ரஷ்யாவில் நடத்தப்பட வேண்டும் என உறுதியாகச் சொல்லிவிட்டாராம்

Published:Updated:
ரெபா
பிரீமியம் ஸ்டோரி
ரெபா

இன்ஸ்டா புகைப்படங்களில் பிங்க் பியூட்டியாக மிளிர்கிறார் ரெபா மோனிகா ஜான். ‘பிகில்’ படத்தில் சிங்கப்பெண்ணாக அசத்தியவர், அடுத்தடுத்து தமிழில் பெரிய ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால், தமிழில் விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தில் மட்டுமே நடித்து முடித்திருக்கிறார். கன்னடம், மலையாளத்தில் அம்மணி ரொம்ப பிஸி!

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

அஜித்தின் ‘வலிமை’ பட ஷூட்டிங், சமீபத்தில் ரஷ்யாவில் நடந்து முடிந்தது. அதனால், தன் படத்தின் ஷூட்டிங்கும் ரஷ்யாவில் நடத்தப்பட வேண்டும் என உறுதியாகச் சொல்லிவிட்டாராம் சரவணா ஸ்டோர்ஸ் அதிபர். கதையில் ரஷ்யா சம்பந்தப்பட்ட காட்சிகளைச் சேர்த்து இயக்குநர்கள் ஜேடி ஜெர்ரி இருவரும் ஓகே சொல்ல, கடந்த இரு வாரங்களாக சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் ரஷ்யாவில் ஆடிப் பாடியிருக்கிறார். கடந்த இரண்டு வருடங்களாக இழுத்துக்கொண்டே போன ஷூட்டிங், இன்னும் சில நாள்களில் முடியவிருக்கிறதாம்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, சிவகார்த்திகேயன் நிம்மதிப் பெருமூச்சு விடுகிற அளவுக்கு ‘டாக்டர்’ படத்தின் கலெக்‌ஷன் பக்காவாக இருக்கிறதாம். அடக்கி வாசித்திருந்த சிவகார்த்திகேயனின் நடிப்புக்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. நான்கு மாதங்களுக்கு முன்னரே நடிகர் விஜய்க்காக படத்தைப் பிரத்யேகமாகக் காட்டியபோது, ‘பிளாக் காமெடி செய்வதில் நீங்க தனித்தன்மையான இயக்குநர்’ என அப்போதே இயக்குநரை வாழ்த்தினாராம் விஜய். படத்துக்கான விமர்சனங்களும் அப்படியே அமைய, நெகிழ்ந்துகிடக்கிறார் நெல்சன்.

‘அண்ணாத்த’ படத்தின் முதல் பாடலுக்குக் கிடைத்த வரவேற்பைத் தாண்டி, ஜோதிகாவின் ‘உடன்பிறப்பே’ படத்தின் டிரெய்லருக்கு வரவேற்பு கிடைத்திருப்பது பலரையும் வாய்பிளக்க வைத்திருக்கிறது. இசை வெளியீட்டு விழா தொடங்கி, புரொமோஷன் நிகழ்வுகள் நடத்தி வெளியிடப்பட்ட ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ உள்ளிட்ட பாசப் படங்களுக்குக் கிடைத்த வரவேற்பைக் காட்டிலும், எவ்வித முன்னறிவிப்புமின்றி வெளியிடப்பட்ட ‘உடன்பிறப்பே’ பட டிரெய்லருக்கு அதிக வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஐந்து நாள்களில் 90 லட்சம் பேர் அந்தப் படத்தின் டிரெய்லரைப் பார்த்திருக்க, அமேஸான் தளத்துக்கே ஆச்சர்யம் தாங்கவில்லையாம்!

திருமண வாழ்வில் முறிவு ஏற்பட்டதால், சமந்தா சைலன்ட்டாக இருக்கப்போகிறார் எனப் பலரும் நினைத்திருக்க, அதிரடியாகக் கதை கேட்க ஆரம்பித்துவிட்டார். நாக சைதன்யா உடனான திருமண வாழ்வின் முறிவு, எந்தவிதத்திலும் தனக்குச் சறுக்கலாக அமைந்துவிடக் கூடாது என்பதில் சமந்தா உறுதியாக இருக்கிறாராம். சைதன்யா தரப்பிலிருந்து ஒரு பைசாகூட ஜீவனாம்சம் பெற விரும்பவில்லை என்றும் சொல்லிவிட்டாராம்!

உஷ்…

தமிழ்நாட்டின் பக்கமே வராமல், மும்பையே கதியெனக் கிடக்கிறாராம் ஞானியின் இசை வாரிசு. ‘அமர்க்களமான’ நடிகரின் படத்துக்கான பாடலை முடித்துக் கொடுக்கக்கூட அவரை போனில் பிடிக்க முடியவில்லையாம். ‘மாதக்கணக்கில் மும்பையில் அப்படி என்னதான் செய்கிறார்?’ எனப் புரியாமல் புலம்புகிறார்கள் ட்யூனுக்காகக் காத்திருப்பவர்கள். #பறவையே எங்கு இருக்கிறாய்?