அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ் - சாய்ந்து சாய்ந்து...

சாய் பல்லவி
பிரீமியம் ஸ்டோரி
News
சாய் பல்லவி

‘ஒரு அடார் லவ்’ மலையாளப் படத்தில் ரொம்பவே சென்சேஷனாகி... அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார் பிரியா பிரகாஷ் வாரியர்.

* `டப்ஸ்மாஷ்’ செய்து பாப்புலராகி, `சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் மிருணாளினி. `கோப்ரா’, `எம்.ஜி.ஆர் மகன்’ ஆகிய படங்கள் இவர் நடிப்பில் வெளியாகக் காத்திருக்கின்றன. தற்போது, ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தின் வில்லன் ஆர்யா என்பது கூடுதல் தகவல். ‘அவன் இவன்’ படத்துக்குப் பிறகு, விஷாலும் ஆர்யாவும் இணைந்து நடிக்கும் படம் இது.

மிருணாளினி
மிருணாளினி

* தெலுங்கில் நாகசைதன்யாவுடன் ‘லவ் ஸ்டோரி’, ராணாவுடன் ‘விராட பர்வம்’ என இரு படங்கள் சாய் பல்லவியின் வசமுள்ளன. தவிர, சிரஞ்சீவி நடிக்கும் ‘வேதாளம்’ பட ரீமேக்கில் அவருக்குத் தங்கையாக நடிக்கவிருக்கிறார். தற்போது, மறைந்த நடிகை செளந்தர்யாவின் பயோபிக்கில் நடிக்கவைக்கவும் சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது.

* தெலுங்கு நடிகர் சர்வானந்த், சித்தார்த் ஆகியோர் இணைந்து நடிக்கும் படம், ‘மஹாசமுத்திரம்.’ தமிழ், தெலுங்கு என பைலிங்குவலாக உருவாகும் இந்தப் படத்தை ‘RX 100’ படத்தை இயக்கிய அஜய் பூபதி இயக்குகிறார். இந்தப் படத்தின் நாயகியாக அதிதி ராவ் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

* துல்கர் சல்மான் தயாரிப்பில் அனுபமா பரமேஷ்வரன் நடித்த ‘மணியாரயிலே அசோகன்’ திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியானது. அதர்வாவுடன் இவர் நடித்த ‘தள்ளிப் போகாதே’ திரைப்படமும் விரைவில் வெளியாகவிருக்கிறது. தற்போது, தெலுங்கில் ‘ஷியாம் சிங்க ராய்’ என்ற படத்தில் நானிக்கு ஜோடியாக நடிக்கப் பேசிவருகிறார்கள். ஏற்கெனவே, ‘கிருஷ்ணார்ஜுனா யுத்தம்’ என்ற படத்தில் இருவரும் இணைந்து நடித்திருக்கின்றனர்.

சாய் பல்லவி
சாய் பல்லவி

* ‘ஒரு அடார் லவ்’ மலையாளப் படத்தில் ரொம்பவே சென்சேஷனாகி... அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார் பிரியா பிரகாஷ் வாரியர். தற்போது, இவர் நடிப்பில் ‘ஸ்ரீதேவி பங்களா’ என்னும் இந்தித் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. `விஷ்ணுப்ரியா’ என்ற படத்தின் மூலம் கன்னடத்திலும் அறிமுகமாகவிருக்கிறார் பிரியா. தவிர, தெலுங்கில் நிதின் நடிக்கும் ‘செக்’ என்ற படத்தில் ரகுல் ப்ரீத்சிங்குடன் இணைந்து நடித்துவருகிறார். பாலிவுட், டோலிவுட், சேண்டில்வுட் என அம்மணி காட்டில் செம மழை!l