அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

நேஹா ஷர்மா
பிரீமியம் ஸ்டோரி
News
நேஹா ஷர்மா

‘சர்தார்’ படத்தின் முதல் பாதி அட்டகாசமாக இருப்பதாக முதற்கட்ட தகவல். ‘நான் சமீபகாலங்களில் நடித்த படங்களில் மிகப் பிடித்த படம்’ என ‘பிரின்ஸ்’ குறித்து சத்யராஜ் சிலாகித்துவருகிறார்.

‘வாடகைத் தாய்’ விவகாரத்தில் நடக்கும் அமளி துமளிகளைப் பற்றி நயன்தாரா கொஞ்சம்கூடக் கவலைப்படவில்லையாம். தமிழக அரசு இது குறித்து விசாரிக்க மூன்று பேர் அடங்கிய குழுவை நியமித்திருக்கும் நிலையில், அது பற்றி மட்டும் வழக்கறிஞர்களிடம் ஆலோசித்தாராம். மொத்தச் சர்ச்சைகளையும் மடைமாற்றும் வகையில், சீக்கிரமே அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிடுகிற திட்டத்தில் இருக்கிறாராம் நயன்தாரா. இந்த மாதிரியான சர்ச்சைகளும் நெருக்கடிகளும், தன் அடுத்த படத்துக்கான எதிர்பார்ப்பையும் லாபத்தையும் அதிகப்படுத்தும் என்றும் நெருக்கமானவர்களிடம் பாசிட்டிவாகச் சொல்கிறாராம் நயன்.

தீபாவளிக்கு கார்த்தியின் ‘சர்தார்’ படமும், சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படமும் நேரடியாக மோதுகின்றன. ‘சர்தார்’ படத்தின் முதல் பாதி அட்டகாசமாக இருப்பதாக முதற்கட்ட தகவல். ‘நான் சமீபகாலங்களில் நடித்த படங்களில் மிகப் பிடித்த படம்’ என ‘பிரின்ஸ்’ குறித்து சத்யராஜ் சிலாகித்துவருகிறார். அதனால், இரு படங்களுமே வகையாக கல்லாகட்டும் என்கிறார்கள். சிறப்புக் காட்சிகளுக்கான அனுமதியைத் தமிழக அரசும் வழங்கத் தயாராகிவிட்டதால், இரு படங்களின் தயாரிப்புத் தரப்பும் தெம்பாக இருக்கின்றன.

நேஹா ஷர்மா
நேஹா ஷர்மா
மிஸ்டர் மியாவ்

மன வருத்தங்களைக் கடந்து ஏ.ஆர்.முருகதாஸ் - சூர்யா மீண்டும் இணையப்போகிறார்கள் என்கிற செய்தி பலமாக அலையடிக்கிறது. மிகப்பெரிய ஹிட் அடித்த ‘கஜினி’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கத்தான் இருவரும் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்களாம். ஆனால், சிறுத்தை சிவாவின் படம், பாலாவின் ‘வணங்கான்’, வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’, சுதா கோங்கராவின் படம் என நீண்ட பட்டியலைக் கையில் வைத்திருக்கும் சூர்யாவால் இப்போதைக்கு முருகதாஸுக்குத் தேதி கொடுக்க முடியாத நிலை. ‘2024-ம் ஆண்டு படத்தைத் தொடங்கலாமா?’ என அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடக்கிறது.

ரஜினியை வைத்து நெல்சன் இயக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் ஷூட்டிங், கடலூர் மாவட்டப் பகுதிகளில் தீவிரமாக நடந்துவருகிறது. ‘ஹைதராபாத் பக்கம் போய்விடலாம்’ என ரஜினி சொன்னபோதும், கடலூரில்தான் ஷூட்டிங் என நெல்சன் உறுதியாக நின்றாராம். கடலூர் பகுதிகளில் ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்க பொதுமக்களும் ரசிகர்களும் திரண்டுவிட, போலீஸ் படாதபாடுபட்டுக் கட்டுப்படுத்தியிருக்கிறது. ‘சன் பிக்சர்ஸ்’ திட்டமிட்ட பட்ஜெட்டுக்குள் படத்தை முடித்துக்காட்டுவதாகச் சொல்லியிருக்கும் நெல்சன், படத்தில் பிரமாண்ட விஷயங்களை வெகுவாகக் குறைத்திருக்கிறாராம்.

மிஸ்டர் மியாவ்

உஷ்...

இதுகாலம் வரை சம்பளமாக மூன்று விரல்களைக் காட்டிய அசுர நடிகர், திடீரென நான்கு விரல்களைக் காட்டுகிறாராம். அதாவது நாற்பது கோடி. இத்தனைக்கும் அவர் நடிப்பில் லேட்டஸ்ட்டாக வெளியான படம், பிரமாண்டத் தயாரிப்பாளரையே நஷ்டத்தில் தள்ளியிருக்கிறதாம். ஆனாலும், சம்பள விஷயத்தில் சமரசமே இல்லை என்கிறாராம் அசுர நடிகர்!