Published:Updated:

மிஸ்டர் மியாவ்

‘கதை வேண்டுமானால் சொல்லுங்கள். ஆனால், அடுத்த ஜூன் மாதம் வரை தேதி இல்லை’ எனச் சொல்கிறார் கீர்த்தி சுரேஷ்.

பிரீமியம் ஸ்டோரி

எந்தத் திரைப்படம் வந்தாலும் துவைத்துத் தொங்கப்போடும் ‘புளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’ ஒருவழியாகத் தணிக்கைப் பிரச்னைகளைக் கடந்து ரிலீஸுக்குத் தயாராகியிருக்கிறது. கரன்ட் டிரெண்டுக்கு ஏற்ற கான்ட்ராவர்ஸி விஷயங்கள் படத்தில் நிறைந்திருப்பதால், தியேட்டர் தரப்பிலிருந்து நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. டீசருக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பைவைத்து மினிமம் கியாரன்டியில் படத்தைக் கொடுக்க விலை பேசிவருகிறார் படத்தின் தயாரிப்பாளர் ஆதம் பாவா. ஓடிடி தளங்கள் நல்ல விலைக்குக் கேட்டும், படத்தைக் கொடுக்க மறுத்துவிட்டார்களாம்.

எந்தப் படத்துக்கு எப்போது தேதி ஒதுக்குவது எனத் தெரியாமல் திண்டாடிக்கொண்டிருந்தார் தனுஷ். அதனால், தனக்குத் தேதி கொடுக்க தாமதமாகும் என நினைத்தார் அவருடைய அண்ணன் செல்வராகவன். அந்த வருத்தத்தையும் வலியையும் நாசுக்கான வரிகளில் ட்வீட் செய்துகொண்டே இருந்தார். இந்நிலையில், தனுஷ் தடாலடியாக மற்ற படங்களை ஒத்திவைத்துவிட்டு செல்வராகவனின் ‘நானே வருவேன்’ படத்துக்குத் தேதி கொடுத்து ஷூட்டிங்கைத் தொடங்கிவிட்டார். ‘ `என்.ஜி.கே’ படத்தின் விமர்சனங்களுக்கு இந்தப் படம் பதில் சொல்லும்’ என்கிறாராம் செல்வராகவன்.

மிஸ்டர் மியாவ்

‘கதை வேண்டுமானால் சொல்லுங்கள். ஆனால், அடுத்த ஜூன் மாதம் வரை தேதி இல்லை’ எனச் சொல்கிறார் கீர்த்தி சுரேஷ். இப்போது மூன்று படங்களில் நடித்துவரும் கீர்த்தி சுரேஷுக்கு விஜய்யுடன் மறுபடியும் கூட்டணி சேர விருப்பமாம். அதனால், அதற்கேற்ற கதைக்காகக் காத்திருக்கிறாராம். அதேநேரம், நயன்தாராவின் ‘அறம்’ பட பாணியிலான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கவும் தீவிரமாகக் கதை கேட்டுவருகிறார் கீர்த்தி.

எக்ஸ்க்ளூசிவ்: யோகி பாபுவை வைத்து ‘மண்டேலா’ ஹிட் கொடுத்த இயக்குநர் மடோன்னே அஸ்வின், அடுத்து இயக்கப்போவது சிவகார்த்திகேயனை. ‘மண்டேலா’ படத்தின் கதை சிவகார்த்திகேயனுக்கு மிகவும் பிடித்துப்போக, தனக்கு ஒரு கதை செய்துதரும்படி கேட்டுக்கொண்டாராம். ஐந்து மாதங்கள் அவகாசம் கேட்ட இயக்குநர் அஸ்வின், அட்டகாசமான கதையைச் சொல்ல, உடனே ஓகே சொல்லியிருக்கிறார் சிவகார்த்திகேயன். ‘டான்’ படத்தை முடித்த பிறகு ஷூட்டிங் ஆரம்பம்.

உஷ்…

சில காலம் ஃபைனான்ஸ் விஷயங்களில் தலையிடாமல், ஒதுங்கியிருந்த மதுரைக்காரர் மீண்டும் பசையை இறக்கிவிடத் தொடங்கியிருக்கிறாராம். ‘100 சி’ டார்கெட்டாம். கூடவே மீண்டும் தயாரிப்பிலும் இறங்கப்போகிறாராம். # ‘அன்பை’ மையமாகக்கொண்ட படங்களைத் தயாரிங்க பாஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு