Published:Updated:

மிஸ்டர் மியாவ்

பாண்டிராஜ் இயக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில், இதுவரை பார்த்திராத சூர்யாவைப் பார்க்க முடியும் என்கிறார்கள்.

பிரீமியம் ஸ்டோரி

நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ முடித்த கையோடு, மீண்டும் லோகேஷ் கனகராஜுடன் இணையவிருக்கிறார் விஜய். அதேநேரம் நெல்சனுடனான நெருக்கத்தையும் விஜய் விடுவதாக இல்லை. ‘எனக்காக இன்னொரு கதை பண்ணுங்க…’ என நெல்சனிடம் சொல்லியிருக்கிறார் விஜய். நெல்சனும் சிவகார்த்திகேயனும் மிக நெருங்கிய நண்பர்கள் என்பதால், ‘டாக்டர்’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் அதே கூட்டணி இணைகிறது. சிவகார்த்திகேயனை வைத்து அடுத்த படத்தை முடித்துவிட்டு, விஜய்க்கான கதையைக் கையிலெடுக்கப்போகிறாராம் நெல்சன்.

மும்பையில் ஷாருக் கானுடன் 15 நாள்கள் செம ஆட்டம் போட்டிருக்கிறார் யோகி பாபு. அட்லி பட ஷூட்டிங் மும்பையில் தொடங்கிவிட்ட நிலையில், யோகி பாபுவுக்குத்தான் முதல் அழைப்பாம். ஷூட்டிங்கில் ஷாருக் கானுடன் அதகளம் செய்த யோகி பாபு, தன் நடிப்பில் வெளியான ‘மண்டேலா’ படத்தைப் பார்க்கும்படி கேட்டுக்கொள்ள, அந்தப் படத்தின் மொத்தக் காட்சிகளையும் விளக்கி விவரித்தாராம் ஷாருக் கான். ஏற்கெனவே அந்தப் படத்தை அவர் பார்த்துவிட்டிருந்தாராம். மகிழ்ச்சியில், சென்னை வந்த பிறகும் ஷாருக் புகழ் பாடிக்கொண்டிருக்கிறார் யோகி!

 ‘டிக்கிலோனா’ அனகா
 ‘டிக்கிலோனா’ அனகா

பாண்டிராஜ் இயக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில், இதுவரை பார்த்திராத சூர்யாவைப் பார்க்க முடியும் என்கிறார்கள். அந்த அளவுக்கு காமெடி நடிப்பில் கதகளி ஆடியிருக்கிறாராம். படத்தில், ஆக்‌ஷன் அளவுக்கு காமெடிக் காட்சிகளுக்கும் குறைவில்லையாம். படத்தில் சூரி செய்யும் காமெடியைக் காட்டிலும் சூர்யா செய்யும் காமெடி பெரிதாக இருக்குமாம். அந்த அளவுக்குத் திரைக்கதையை ரெடி செய்யும்போதே முழுக்க முழுக்க காமெடியாக உருவாக்கினாராம் பாண்டிராஜ்.

எக்ஸ்க்ளூசிவ்: தடபுடலாக அழைக்கிற இடங்களுக்கே செல்லாமல், தனிமை தவமிருக்கும் வழக்கமுடையவர் ரஜினிகாந்த். ஆனால், கடந்த இரண்டு மாதங்களில் ஐந்து முறை கோடம்பாக்கத்திலுள்ள இளையராஜாவின் ஸ்டூடியோவுக்குச் சென்றிருக்கிறாராம். இளையராஜாவுடன் மணிக்கணக்கில் மனம்விட்டுப் பேசியிருக்கிறாராம். “நான் அடிக்கடி இங்கு வருவது உங்களுக்குத் தொந்தரவா இல்லையே…” எனக் கடந்த வாரம் ரஜினி கேட்க, “நீங்க வர்றது எனக்கு அவ்வளவு ஆறுதலா இருக்கு” என்றாராம் இளையராஜா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு