Published:Updated:

மிஸ்டர் மியாவ் - சாரீ கீமா!

இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்கள் பதிவிட்டு, அன்றைய வைரல் கன்டென்ட்டாக மாறுவது நடிகை மாளவிகா மோகனின் ஹாபி

பிரீமியம் ஸ்டோரி

* ரஜினியுடன் ‘அண்ணாத்த’, ‘மிஸ் இந்தியா’, ‘குட்லக் சகி’ என இரண்டு ஹீரோயின் சென்ட்ரிக் படங்கள், தெலுங்கில் நிதினுடன் ‘ரங்தே’, செல்வராகவனுடன் ‘சாணி காகிதம்’ என கீர்த்தி சுரேஷ் சென்னைக்கும் ஹைதராபாத்துக்கும் பறந்துவருகிறார். தற்போது, மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக ‘சர்க்காரு வாரிபாட்டா’ எனும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். மகேஷ்பாபுவும் கீர்த்தியும் இணையும் முதல் படம் இது.

* கடந்த வருடம் ஜெய், அதுல்யா ஆகியோரைவைத்து ‘கேப்மாரி’ என்ற படத்தை இயக்கினார் எஸ்.ஏ.சந்திரசேகர். அதற்குப் பிறகு, `தான் படம் இயக்கப்போவதில்லை!’ என்று கூறியிருந்தார். ஆனால், தற்போது சமுத்திரக்கனியை நாயகனாகவைத்து ஆக்‌ஷன் கதையொன்றை இயக்கவிருக்கிறார். இதன் நாயகியாக சாக்‌ஷி அகர்வால் நடிக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் - அதுல்யா
கீர்த்தி சுரேஷ் - அதுல்யா

* இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்கள் பதிவிட்டு, அன்றைய வைரல் கன்டென்ட்டாக மாறுவது நடிகை மாளவிகா மோகனின் ஹாபி. நடிப்பைத் தாண்டி போட்டோகிராபி, பைக் ரைடிங் என்றால் அத்தனை பிரியமாம். தற்போது, ராயல் என்ஃபீல்டு புல்லட்டை எடுத்துக்கொண்டு லடாக் வரை சென்றிருக்கிறார் மாளவிகா. லடாக்கில் மிக ஸ்டைலிஷ்ஷாக அவர் புல்லட்டுடன் இருக்கும் புகைப்படங்கள்தான் இந்த வார வைரல் மெட்டீரியல்!

* டோலிவுட்டில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்து, தற்போது ஹீரோயினாக வளர்ந்து நிற்கிறார் ரீது வர்மா. தமிழில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்துக்குப் பிறகு, ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடித்திருக்கிறார். தெலுங்கிலிருந்து இவருக்கு வாய்ப்புகள் குவிகின்றன. நானியுடன் ‘டக் ஜெகதீஷ்’ படத்தில் நடித்துவருகிறார். தவிர, ரவிதேஜாவுடன் ஒரு படம், நாக செளர்யாவுடன் ஒரு படம் என டோலிவுட்டில் ரீது செம பிஸி!

மாளவிகா மோகன் - ரீது வர்மா
மாளவிகா மோகன் - ரீது வர்மா

* ‘அந்தாதுன்’ படத்தின் தமிழ் ரீமேக்கை மோகன் ராஜா இயக்குவதாக இருந்தது. ஆனால், அதில் சில மாற்றங்கள் நடந்து இப்போது, ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை இயக்கிய ஜே.ஜே. ஃப்ரெட்ரிக் இயக்குகிறார். ஆயுஷ்மான் குரானா நடித்த கேரக்டரில் பிரசாந்த் நடிக்கிறார். தபு, ராதிகா ஆப்தே நடித்த கேரக்டர்களில் முன்னணி நடிகைகளை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. குறிப்பாக, தபு நடித்த கேரக்டரில் நடிக்க ஐஸ்வர்யா ராய் முக்கியமான ஆப்ஷனாக இருக்கிறாராம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு