அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

கீர்த்தி ஷெட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
கீர்த்தி ஷெட்டி

நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துவரும் ரஜினி, இயக்குநர்கள் தேசிங்கு பெரியசாமி, ‘டான்’ சிபிச்சக்கரவர்த்தி ஆகியோரிடம் கதை கேட்டு ஓகே சொல்லியிருந்தார்.

விஜய்யின் ‘வாரிசு’ படம், ஃபேமிலி ஆடியன்ஸை வளைக்கும் வகையில் ரெடியாகிவருகிறது. அதனால், அஜித்தின் ‘துணிவு’ படத்துடன் மோத எல்லா வகையிலும் தயாராக இருக்கிறார் விஜய். ‘காதலுக்கு மரியாதை’ பட பாணியில் காதல் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவு குடும்பமும் உறவும் முக்கியம் என்பதைப் படம் அழுத்தமாக வலியுறுத்துகிறதாம். அஜித்தின் ‘துணிவு’ படம் முழு ஆக்‌ஷன் பேக்கேஜாக ரெடியாவதால், இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைத்ததாக இருக்காது என்கிறார்கள்.

‘சர்தார்’ படத்துக்குப் பிறகு ராஜு முருகன் இயக்கத்தில் நடிக்கிறார் கார்த்தி. பிரபல நகைக் கடையில் ஓட்டை போட்டுத் திருடிய முருகனின் உண்மைச் சம்பவங்களை மையமாகக்கொண்டு எழுதப்பட்ட கதையாம். நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. “இதுவரை நான் செய்திராத மிக வித்தியாசமான பாத்திரம். ராஜு முருகனுக்கும் இந்தப் படம் உயரிய அங்கீகாரங்களைப் பெற்றுத் தரும்” என நம்பிக்கையோடு சொல்கிறார் கார்த்தி. ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

கீர்த்தி ஷெட்டி
கீர்த்தி ஷெட்டி

நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துவரும் ரஜினி, இயக்குநர்கள் தேசிங்கு பெரியசாமி, ‘டான்’ சிபிச்சக்கரவர்த்தி ஆகியோரிடம் கதை கேட்டு ஓகே சொல்லியிருந்தார். தேசிங்கு பெரியசாமிக்கு கலைப்புலி தாணுவும், சிபிச்சக்கரவர்த்திக்கு லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனங்களும் அட்வான்ஸ் கொடுத்திருக்கின்றன. இந்த நிலையில், த.செ.ஞானவேலிடம் கதை கேட்ட ரஜினி ‘ஜெயிலர்’ படத்துக்குப் பிறகு இதையே தொடங்கலாம் எனச் சொல்லிவிட்டாராம். அதனால், ஞானவேலின் கதையைத் தயாரிக்க ‘நீ, நான்’ எனத் தயாரிப்பாளர்கள் மத்தியில் போட்டி நடக்கிறது.

‘ப்ரின்ஸ்’ படத்தில் 30 கோடி ரூபாய் சம்பளம் பெற்றிருக்கிறாராம் சிவகார்த்திகேயன். ‘மாவீரன்’ படத்தை சிவாவின் நண்பர் அருண் தயாரிப்பதால், சம்பளம் குறித்த விஷயத்தை ரகசியமாக வைத்திருக்கிறார்கள். ‘மாவீரன்’ படத்துக்கு அடுத்து கமிட்டாகும் படங்களுக்கு, 50 கோடியை சிவகார்த்திகேயன் தொடக்கூடும் என்கிறார்கள். டிஜிட்டல் மார்க்கெட் வேல்யூ சிவகார்த்திகேயன் படங்களுக்கு உயர்ந்திருப்பதால், சம்பளத்தையும் உயர்த்த முடிவெடுத்திருக்கிறாராம் சிவா.

உஷ்...

யோகமுள்ள காமெடி நடிகர், தன்னைக் கதாநாயகனாக முன்னிறுத்தும் கதைகளைவிட நகைச்சுவைப் பாத்திரங்களைத்தான் அதிகம் விரும்புகிறாராம். ‘நிறைய படங்களில் நம்ம முகம் தெரியணும் சார்’ என அதற்கு விளக்கமும் சொல்கிறாராம். உண்மையான காரணம், கதாநாயகனாக ஃபிக்ஸ் செய்த தயாரிப்பாளர்கள் சம்பளம் கொடுக்கும் விஷயத்தில் அநியாய கறார் காட்டுவதுதானாம்!