Published:Updated:

மிஸ்டர் மியாவ்

பிரியா பவானி சங்கர்
பிரீமியம் ஸ்டோரி
பிரியா பவானி சங்கர்

படங்கள்: கிரண்ஷா

மிஸ்டர் மியாவ்

படங்கள்: கிரண்ஷா

Published:Updated:
பிரியா பவானி சங்கர்
பிரீமியம் ஸ்டோரி
பிரியா பவானி சங்கர்

* கடந்த ஆண்டு நிவின் பாலியுடன் ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ என்ற மலையாளப் படத்தில் நடித்திருந்தார் நயன்தாரா. இதைத் தொடர்ந்து, மற்றொரு மலையாளப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ‘நிழல்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் குஞ்சாக்கோ போபன்தான் ஹீரோ. தவிர, ‘நெற்றிக்கண்’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘அண்ணாத்த’, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என இவரது கைவசம் தமிழ்ப் படங்களும் இருக்கின்றன.

மிஸ்டர் மியாவ்

* ஹீரோயின், வில்லி என வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு குறிப்பிட்ட இமேஜை வைத்துக் கொள்ளாத வரலட்சுமி சரத்குமார், தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். அதில் இவர்தான் நாயகி. ‘கண்ணாமூச்சி’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தை தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது; சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.

* ‘இந்தியன் 2’, ‘பொம்மை’, ‘குருதி ஆட்டம்’, ‘களத்தில் சந்திப்போம்’, ‘ஓ மணப்பெண்ணே’, தெலுங்கில் ஒரு படம் எனப் பல படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார் பிரியா பவானி சங்கர். அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் தனது க்யூட் புகைப்படங்களைப் பதிவிட்டுவரும் இவர், சமீபத்தில் பதிவிட்ட நீச்சல் குள புகைப்படங்கள்தான் இந்த வார வைரல் மெட்டீரியல். ஒரு தெலுங்குப் படத்தில் கமிட்டானவுடன் பிரியா கிளாமருக்குத் தயாராகிறாரோ என்ற கமென்ட்டுகளும் வருகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிஸ்டர் மியாவ்

*`அருவி’ படத்தில் நடித்த அதிதி பாலன், கடந்த வாரம் சுற்றுலாவுக்காகக் கொடைக்கானல் சென்றிருந்தார். அப்போது சுகாதாரத்துறை அதிகாரிகள், அவரது காரை நிறுத்திச் சோதனையிட்டபோது, அவர் முகக்கவசம் அணிய வில்லையாம். எனவே, 200 ரூபாய் அபராதம் செலுத்துமாறு அதிகாரிகள் கூறவே, ‘முடியாது’ என மறுத்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார் அதிதி. அவர்தான் வழக்கறிஞர் ஆயிற்றே... எனவே வாதம் பலமாக இருந்திருக் கிறது. இருப்பினும், அவரின் வாதம் அதிகாரிகளிடம் எடுபடவில்லை. அபராதம் செலுத்திவிட்டே சென்றிருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

* தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் அனு இமானுவேல் நன்கு பரிச்சயம். தெலுங்குப் படத்தில் நடித்தால் கிளாமர் மோடை ஆன் செய்துவிடுவார் அனு. ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தில் நடித்ததைத் தொடர்ந்து, ‘அல்லுடு ஆதர்ஸ்’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்துவருகிறார். தவிர, ஷர்வானந்த், சித்தார்த் ஆகியோர் நடிக்கும் ‘மஹாசமுத்திரம்’ என்ற தமிழ் - தெலுங்கு பைலிங்குவல் படத்தில் அதிதி ராவுடன் இணைந்து மற்றொரு நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism