அரசியல்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

யாஷிகா ஆனந்த்
பிரீமியம் ஸ்டோரி
News
யாஷிகா ஆனந்த்

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ ஆடியோ ரைட்ஸை ஐந்தரை கோடிக்குப் பேசி முடித்திருக்கிறதாம் ‘சரிகமபதநி’ நிறுவனம். இப்படத்துக்கு ‘மண்டேலா’ பரத் சங்கர் இசையமைக்கிறார்.

நளன் குமாரசாமியிடம் சமீபத்தில் ஒரு கதை கேட்டு அசந்துபோயிருக்கிறார் கார்த்தி. ‘சர்தார்’ படம் பெயர் சொல்லும் அளவில் தப்பித்த திருப்தியிலிருக்கும் கார்த்தி, நளன் குமாரசாமிக்கு உடனே அட்வான்ஸ் கொடுக்கச் சொல்லிவிட்டாராம்.

‘கேப்டன்’ படத்தை முடித்துவிட்டு இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட கதைகளைக் கேட்டிருக்கிறார் ஆர்யா. ஆனால், ஒன்றுகூட அவர் மனதுக்கு திருப்தியாக அமையவில்லையாம். தற்போது முத்தையா இயக்கத்தில் நடித்துவரும் ஆர்யா, அவரிடமே அடுத்த கதையைக் கேட்டுவருகிறாராம்.

யாஷிகா ஆனந்த்
யாஷிகா ஆனந்த்
மிஸ்டர் மியாவ்

ஐந்து கோடி சம்பளம் பேசினாலும், இன்னும் இரண்டு வருடங்களுக்குத் தேதி இல்லை என்கிறார் சமந்தா. முன்னணி நிறுவனங்கள் அணுகினாலும், இதுதான் பதிலாம். விஜய்யின் மேனேஜராகப் பணியாற்றும் ஜெகதீஸ்தான் சமந்தாவின் இந்தக் கிடுகிடு வளர்ச்சிக்கு வியூகம் வகுத்தவராம்.

தமிழில் இப்போது கைகொள்ளாத அளவுக்குப் படங்கள் வைத்திருக்கும் நடிகை, பிரியா பவானி சங்கர்தான். ‘இந்தியன் 2’, ‘அகிலன்’, ‘பத்து தல’, ‘பொம்மை’ உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்திருக்கும் பிரியா, அடுத்தபடியாகத் தெலுங்குப் பக்கமும் கால் வைத்திருக்கிறார். தமிழில் இரண்டு படங்களில் நடித்தால் கிடைக்கும் சம்பளத்தை, தெலுங்கில் ஒரே படத்துக்குப் பேசியிருக்கிறார்களாம்.

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ ஆடியோ ரைட்ஸை ஐந்தரை கோடிக்குப் பேசி முடித்திருக்கிறதாம் ‘சரிகமபதநி’ நிறுவனம். இப்படத்துக்கு ‘மண்டேலா’ பரத் சங்கர் இசையமைக்கிறார். இமான், அனிருத் எனப் பெரிய இசையமைப்பாளர்களோடு சிவா கைகோத்த படங்களுக்குத்தான் இவ்வளவு பெரிய தொகை இதுகாலம் வரை பேசப்பட்டது. முதன்முறையாக அதை உடைத்து, ‘பிசினஸ் என்பது என்னைவைத்து மட்டும்தான்’ என நிரூபித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

மிஸ்டர் மியாவ்

ராஜமௌலியின் `RRR’ படம் ரிலீஸானபோது, அவருக்கும் தீபிகா படுகோனுக்கும் பனிப்போர் நடந்தது. சமூக வலைதளத்தில் ராஜமௌலியுடன் நேரடியாகவே மோதத் தொடங்கினார் தீபிகா படுகோன். இந்த நிலையில் மகேஷ் பாபுவை வைத்து இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் அம்மணியை ஃபிக்ஸ் பண்ணி, மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறாராம் ராஜமௌலி. சம்பளம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

உஷ்...

தடாலடி இயக்குநருக்கும், பிரகாச நடிகருக்கும் இடையேயான மோதல் இன்னமும் முடிவுக்கு வரவில்லையாம். இயக்குநர் இறங்கிவந்து பேசினால், நிமிடத்தில் முடிகிற பிரச்னையாம் இது. ஆனாலும், ‘அப்படியெல்லாம் படம் பண்ணவேண்டிய அவசியமில்லை’ என கெத்துகாட்டி இழுபறியைத் தொடர்கிறாராம் இயக்குநர்!