பிரீமியம் ஸ்டோரி

தமிழில் அட்டகாசமாக வலம்வந்த ரெஜினா கஸாண்ட்ரா, தெலுங்குப் பக்கம் இப்போது தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார். தற்போது, தமிழ் மற்றும் தெலுங்கில் ரெடியாகிவரும் ‘சூர்ப்பனகை’ படத்தை ரொம்பவே நம்பும் ரெஜினா, அங்கிருக்கும் முன்னணி நடிகர்களோடு ஜோடி போட முயன்றுவருகிறார். ரெஜினாவின் அணுகுமுறையும், இடைவிடாத முயற்சியும் தெலுங்கில் அவரை முன்னணி ஹீரோயினாக நிச்சயம் மாற்றும் என்கிறார்கள்.

ஓடிடி தளத்தில் ரிலீஸாகவிருக்கும் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்துக்கு ஏக எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. சமீபத்தில் வெளியான படத்தின் டிரெய்லருக்கு நல்ல வரவேற்பு. இயக்குநர் த.செ.ஞானவேலின் வசனங்களுக்கும், சூர்யாவின் நடிப்புக்கும் ஆன்லைனில் வரவேற்பு அள்ளுகிறது. நீதிபதி சந்துருவின் நீதித்துறை வாழ்வில் நடந்த நிஜ சம்பவம்தான் ‘ஜெய் பீம்’ படமாக உருவாகியிருக்கிறது.

கோடிகளில் சம்பளம் வாங்கும் தமிழ் நடிகைகளில் முக்கியமானவர் கீர்த்தி சுரேஷ். ‘சிங்கிள் டேக் ஆர்டிஸ்ட்’ என்கிற அளவுக்குக் கோடம்பாக்கத்தில் அவரைக் கொண்டாடுவார்கள். தெலுங்கில் மகேஷ் பாபு, நானி உள்ளிட்டவர்களுடன் ஜோடியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ், அங்கே சம்பளத்தை மூன்று விரல்கள் நீட்டிக் கேட்கிறார். அதேநேரம் தமிழ்ப் படங்களை கமிட் செய்யும்போது தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றபடி குறைத்துக்கொள்கிறாராம்.

மிஸ்டர் மியாவ்

அமேசான் ப்ரைமில் வெளியான ‘உடன்பிறப்பே’ அமேசானின் டாப் டென் லிஸ்ட்டில் அமிதாப்பின் ‘செஹ்ரே’வை முந்தி இடம்பெற்றதில், படக்குழுவினர் செம குஷி. பெண்கள் மத்தியில் படம் பரவலாகப் பேசப்பட்டதே இந்த வெற்றிக்குக் காரணம் என்கிறார்கள். இதையடுத்து, சக்சஸ் மீட்டுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள் படக்குழுவினர்!

‘அரண்மனை 3’ படத்தை சுமார் என விமர்சகர்கள் சொன்னாலும், படத்தின் மூலமாக சுந்தர்.சி பார்த்த லாபம் மிகப்பெரிதாம். 28 கோடி ரூபாய்க்கு முதல் பிரதி அடிப்படையில் படத்தைத் தொடங்கியவர், கனகச்சிதமான பட்ஜெட்டில் படத்தை முடித்ததிலேயே நல்ல லாபம் பார்த்தாராம். ‘ `சார்பட்டா’ வெற்றியை அடுத்து ஆர்யா நடிக்கும் படம்’ எனச் சொல்லி உதயநிதியின் ரெட்ஜெயன்ட் நிறுவனத்துக்கும் நல்ல விலைக்குக் கொடுத்தவர், சாட்டிலைட் உரிமை வழங்கியதிலும் அட்டகாச சம்பாத்தியம் பார்த்திருக்கிறாராம்.

உஷ்…

சமீபத்தில் ரிலீஸான ‘ட்ரீட்மென்ட்’ படம் பெரிய அளவில் வெற்றிபெற்றது. ஆனாலும் கல்லாப்பெட்டி கணக்குகளைப் பார்த்தால், ஊரகப் பகுதிகளில் வசூல் குறைவாக இருந்ததாம். ஆளும் வாரிசின் பட நிறுவனம் ரிலீஸ் செய்த படத்துக்காக, பல தியேட்டர்களில் ட்ரீட்மென்ட் படத்தைப் பந்தாடிய விஷயம் இப்போதுதான் தெரிந்ததாம். ஆதங்கம் இருந்தாலும், பெரிய இடத்தோடு மோத வேண்டாம் எனச் சொல்லி மௌனமாகிவிட்டது ‘மருத்துவ’க்குழு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு