அரசியல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

அமலா பால்
பிரீமியம் ஸ்டோரி
News
அமலா பால்

சூரியை ஹீரோவாக்கி ‘விடுதலை’ படத்தை இயக்கிவரும் வெற்றிமாறன், முதன்முறையாக இந்தப் படத்தில் இளையராஜாவுடன் இணைகிறார்.

அடுத்தடுத்து சர்ச்சை வளையத்திலேயே இருந்த விஷ்ணு விஷால், வெளியே தெரியாமல் ‘மோகன்தாஸ்’, ‘எஃப்.ஐ.ஆர்’ என இரண்டு படங்களை அட்டகாசமாக முடித்துக்கொடுத்திருக்கிறார். இந்த இரு படங்களும் விஷ்ணு விஷாலுக்குப் பெரிய அளவில் பெயர் சொல்லும்விதமாக அமையும் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். கூடுதல் தகவல்: விரைவில் தனது தம்பியையும் ஹீரோவாக்கவிருக்கிறார் விஷ்ணு விஷால். கதை கேட்கும் படலம் தீவிரமாக நடக்கிறது.

சூரியை ஹீரோவாக்கி ‘விடுதலை’ படத்தை இயக்கிவரும் வெற்றிமாறன், முதன்முறையாக இந்தப் படத்தில் இளையராஜாவுடன் இணைகிறார். பாடல்கள் விஷயத்தில் எப்போதுமே தனிக்கவனம் காட்டும் வெற்றிமாறன் இளையராஜாவுடன் பல மணி நேரத்தைச் செலவிடுகிறாராம். மூன்று முத்தான பாடல்களை இளையராஜா முடித்துக்கொடுக்க, வெற்றிமாறனுக்கு அவ்வளவு நிம்மதியாம்.

‘விருமன்’ படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் தேனியில் நடந்து முடிந்திருக்கிறது. படத்தில் அறிமுகமாகும் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி எப்படி நடிக்கப்போகிறார் என்பதைப் பார்க்க யூனிட்டே ஆவலோடு காத்திருக்க, கிராமத்து வட்டார வழக்கு வசனத்தை அசால்டாகப் பேசி சிங்கிள் டேக்கில் ஓகே வாங்கியிருக்கிறார் அதிதி. மொத்த யூனிட்டும் கைதட்டிப் பாராட்ட, அதிதிக்கு ஏக நிம்மதி. அழைப்புகள் நிறைய வந்தாலும், ‘இந்தப் படத்தை முடித்துவிட்டுத்தான் அடுத்த படம்’ என்பதில் தெளிவாக இருக்கிறாராம்.

அஜித்தின் ‘வலிமை’ படம் பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தையும் அன்றே ரிலீஸ் செய்ய வேலைகள் தீவிரமாக நடக்கின்றன. ‘பீஸ்ட்’ படத்தில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளே மிச்சமிருக்கும் நிலையில், எடுத்த வரையிலான காட்சிகளுக்கு போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளைத் தீவிரமாகச் செய்யத் தொடங்கிவிட்டார்கள். சாதாரணமாகவே அஜித் - விஜய் ரசிகர்களுக்கு இடையே மோதல் தூள் பறக்கும். இருவருடைய படங்களும் ஒரே நாளில் ரிலீஸானால் ஆன்லைன் தொடங்கி தியேட்டர் வரை ரணகளத்துக்குக் குறைவிருக்காது.

சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்தை முடித்துவிட்டு விக்னேஷ் சிவனுடன் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் கைகோத்திருக்கும் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர், விரைவில் இயக்குநர் அவதாரம் எடுக்கவிருக்கிறார். முழுக்க முழுக்க காதல் நிரம்பி வழியும் கதைக்கு இளமையான ஹீரோவைத் தேடிக்கொண்டிருக்கிறார் கதிர்.

மிஸ்டர் மியாவ்

இன்ஸ்டாவில், பிகினி உடையில் தன்னுடைய படத்தை வெளியிட்டு வைரலாக்கியிருக்கிறார் அமலா பால். உடலுக்கு ஜிம்மில் உடற்பயிற்சிகள், மனதுக்கு யோகா என்று எப்போதும் தன்னை உற்சாகமாக வைத்துக்கொண்டிருக்கும் அமலா பால், அந்த இன்ஸ்டா போஸ்ட்டில் தன்னை ட்ரோல் செய்பவர்களுக்கு பதிலடியும் கொடுத்திருக்கிறார்!

மிஸ்டர் மியாவ்

உஷ்!

மீண்டும் இளைய மகளுக்காக ஒரு படம் நடித்துக்கொடுக்கச் சம்மதித்திருக்கிறாராம் சூப்பர் நடிகர். அளவான பட்ஜெட்டில் படம் பண்ணக்கூடிய இயக்குநரைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி அறிவுரையும் வழங்கியிருக்கிறாராம். ‘முதலில் இளைய மகள்... அடுத்து மூத்த மகள்’ எனத் தேதி கொடுக்கத் திட்டமிட்டிருக்கிறாராம். #ஏழாம் எட்டில் காணாதது ஓய்வுமல்ல!