நடிகர் சங்கக் கட்டடப் பணிகள் முடிந்த பிறகே தன்னுடைய திருமணம் நடைபெறும் என அறிவித்திருந்தார் நடிகர் விஷால். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் விஷாலுக்கும் தொழிலதிபர் மகள் அனிஷாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமணத்துக்கு நாள் குறிக்கப்படாமல் இருந்ததால், திருமணம் நின்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்துப் பேசிய விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி, ‘`நடிகர் சங்கக் கட்டட வேலைகள் முடிந்தவுடன் விஷாலின் திருமணம் சிறப்பாக நடைபெறும்’’ என்று கூறி, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படம்மூலம் கதாநாயகனாக அறிமுகமான ரியோ, அடுத்து பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் நடிக்கிறார். ஜோடி, ரம்யா நம்பீசன். இசை, யுவன் ஷங்கர் ராஜா.

‘பிகில்’ படம், தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரவிருக்கிறது. இதை சீனாவிலும் வெளியிட முடிவுசெய்திருக்கிறது படக்குழு. ‘தங்கல்’, ‘மாம்’ படங்களைத் தொடர்ந்து தற்போது ‘பிகில்’ படமும் சீனாவில் வெளியாகவிருக்கும் செய்தி, விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநரும், நடிகை ரம்யா கிருஷ்ணனின் கணவருமான வம்சி, ‘வந்தே மாதரம்’ என்ற படத்தைத் தொடங்கியிருக்கிறார். இதில் முக்கிய கேரக்டர்களில் பிரகாஷ்ராஜும் ரம்யா கிருஷ்ணனும் நடிக்கிறார்கள்.

சமீபத்தில் வெளியான மூன்றெழுத்து நடிகரின் நான்கெழுத்து படம் தோல்வியடைந்தது. பாலிவுட்டில் வெற்றிபெற்ற படத்தை, தமிழில் ரீமேக் செய்து நடிக்கவிருந்த நடிகர், முந்தைய படத்தில் பணிபுரிந்த எழுத்தாளரையே இந்தப் படத்துக்கும் பயன்படுத்தலாம் என நினைத்திருந்தாராம். ஆனால், தோல்வி கொடுத்த பயத்தால் படத்திலிருந்து எழுத்தாளரை நீக்கிவிடலாமா என்ற முடிவில் இருக்கிறதாம் படக்குழு.

வரலாற்றுப் படத்தில் உலக அழகி நடிகையும் லேடி சூப்பர் ஸ்டாரும் நடிக்கிறார்கள். இவர்களுக்கு துணையாக இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட பல துணை நடிகைகள் அவர்களைவிட இளமையான தோற்றத்திலேயே இருப்பதால், அவர்கள் அனைவரையும் நிராகரித்துவிட்டு, மறுபடியும் தேடலைத் தொடங்கியிருக்கிறது படக்குழு. இயக்குநரின் இந்த முடிவுக்கு நடிகைகள் கொடுத்த அழுத்தமும் முக்கிய காரணமாம்.