Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ரகுல் பிரீத் சிங்
பிரீமியம் ஸ்டோரி
News
ரகுல் பிரீத் சிங்

‘உடலுக்கு யோகா… மனதுக்குத் தோழிகள்’ என்பதுதான் ரகுலின் ஃபிட்னெஸ் ரகசியமாம்!

ரகுல் பிரீத் சிங் வெளியிட்டிருக்கும் ஏரியல் யோகா வீடியோக்கள், ஆன்லைன் ரசிகர்களை வாய்பிளக்க வைத்திருக்கின்றன. யோகாக்கள் குறித்து டிப்ஸ் கொடுக்கவும் தயங்காத ரகுல் பிரீத் சிங், “உடற்பயிற்சி மட்டுமே உடலை வலிமையாக்கிவிடாது. எப்போதும் மகிழ்வாக இருக்கிற மனம்தான் முக்கியம்” என்றும் சொல்கிறார். ‘உடலுக்கு யோகா… மனதுக்குத் தோழிகள்’ என்பதுதான் ரகுலின் ஃபிட்னெஸ் ரகசியமாம்!

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

பெரும்பாலும் சர்ச்சை, வதந்தி என எதிலும் சிக்கிக்கொள்ளாமல் கிரேட் எஸ்கேப் ஆகிறவர் நடிகர் சசிகுமார். இவர் ‘டிக் டாக்’ புகழ் ஜி.பி.முத்து, ரௌடி பேபி சூர்யா ஆகியோருடன் இணைந்து நடிப்பதாக ஆன்லைனில் இப்போது பயங்கர அலப்பறை. உண்மையில் ஜி.பி.முத்து, சூர்யா போன்றோரை சசிகுமார் பார்த்ததுகூடக் கிடையாதாம். இதற்கிடையில், ‘எங்களுக்கும் வாய்ப்பு கொடுங்க சார்’ என டிக் டாக் பிரபலங்கள் பலரும் சசிகுமாருக்குக் கோரிக்கைவைக்க, மனிதர் படாதபாடுபடுகிறார்!

அனுதீப் இயக்கும் படத்தின் மூலம் முதன்முறையாகத் தெலுங்கில் கால்வைக்கிறார் சிவகார்த்திகேயன். தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடிபோட பல முன்னணி நடிகைகள் வலைவீசினார்கள். இவர்களில் ராஷ்மிகா மந்தனா முந்திக்கொண்டு இடம்பிடித்துவிட்டாராம். எதற்கு மீடியேட்டர்கள் துணை என நினைத்தவர், சிவகார்த்திகேயனுக்கே போன் பண்ணிவிட்டாராம். விரைவில் முறைப்படி அறிவிப்பு வரும் என்கிறார்கள்.

விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்கிற பட்டியலில் பாண்டிராஜ் தொடங்கி ‘மண்டேலா’ அஸ்வின் வரை பல இயக்குநர்களின் பெயர்கள் அடிபட்டன. ‘பீஸ்ட்’ படத்தை இயக்கும் நெல்சனே மீண்டும் விஜய் படத்தை இயக்கப் போவதாக இப்போது பரபரப்பு கிளம்பியிருக்கிறது. ஷூட்டிங்கில் மட்டுமல்ல… ஷூட்டிங் இல்லாத நேரத்திலும் விஜய்க்கு நிழலாக மாறிவிட்டாராம் நெல்சன். விஜய் வீட்டிலேயேதான் பெரும்பாலும் நெல்சனைப் பார்க்க முடிகிறதாம். நெல்சனின் வெகுளியான பேச்சும் கலகலப்பும் விஜய்க்கு ரொம்பவே பிடித்துப்போய்விட்டதாகச் சொல்கிறார்கள். அஜித்-ஹெச்.வினோத் கூட்டணியைப்போல் விஜய்-நெல்சன் கூட்டணி ஸ்ட்ராங்க் ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

உஷ்…

சக்சஸ் இயக்குநர் முதன்முறையாக ஞானியுடன் இணைகிற சுதந்திரப் படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு. ஆனால், பாடல் பதிவில் இருவருக்கும் ஏக மோதலாம். பாடல் வரிகளில் ஞானியானவர் தலையிட, இயக்குநருக்கோ கோபம் பொத்துக்கொண்டு வந்ததாம். ‘நான் ஓகே செய்த வரிகளை மாற்ற முடியாது’ எனக் கறாராகச் சொல்லிவிட்டாராம்!