Published:Updated:

மிஸ்டர் மியாவ்

தமன்னா

வருடத்துக்கு ஒரு படம் ஹீரோவாக நடிக்க முடிவெடுத்திருக்கிறார் யோகி பாபு.

மிஸ்டர் மியாவ்

வருடத்துக்கு ஒரு படம் ஹீரோவாக நடிக்க முடிவெடுத்திருக்கிறார் யோகி பாபு.

Published:Updated:
தமன்னா

ஒரு ஃபைட்டுக்காக ‘வலிமை’ டீம் ரஷ்யாவுக்குக் கிளம்பிப் போய்விட்டது. ‘ஷூட்டிங் ஸ்பாட்டின் லொகேஷனை அனுப்புங்க. நானே வந்துடுறேன்’ எனச் சொல்லி, தினமும் பைக்கிலேயே ஸ்பாட்டுக்கு வந்து யூனிட்டைத் திகைக்கவைத்திருக்கிறார் அஜித். ஏற்கெனவே சென்னையிலிருந்து ஹைதராபாத்துக்கு பைக்கிலேயே வந்து ஷாக் கொடுத்த அஜித், ரஷ்யாவில் சுதந்திரமாக பைக்கில் வலம்வந்தாராம். தயாரிப்பாளர் போனி கபூர் ரஷ்யாவில் ஏற்பாடு செய்த பாதுகாப்பு டீமைத் தவிர்த்துவிட்டு, பைக்கில் பறந்த அஜித்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடியிருக்கிறது படக்குழு.

வருடத்துக்கு ஒரு படம் ஹீரோவாக நடிக்க முடிவெடுத்திருக்கிறார் யோகி பாபு. ஓவர் ஹீரோயிசம் இல்லாமல், கதைக்கு முக்கியத்துவம் இருக்கும்படி பார்த்துக்கொள்கிறாராம். ‘மண்டேலா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஓடிடி தளங்களும் அவரிடம் `எங்களுக்கு ஒரு படம் பண்ணுங்க’ என அதிகமாக வற்புறுத்துவதால், தனக்கு ஏற்ற நல்ல கதைகளைத் தீவிரமாகக் கேட்டுவருகிறார் யோகி பாபு.

தமிழில் பெரிய ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப் பட்டவர் கன்னக்குழி நடிகை ஸ்ருஷ்டி டாங்கே. சரியான வாய்ப்புகள் அமையாத வருத்தத்தில் சற்றே வெயிட் போட்ட ஸ்ருஷ்டி, இப்போது பக்காவாக இளைத்திருக்கிறார். நடிகர் அர்ஜூன் தொகுத்து வழங்கும் ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் ஸ்ருஷ்டி டாங்கே பங்கேற்கிறார். காட்டுக்குள் நடக்கும் சிக்கல்களைத் தனி ஆளாகச் சமாளித்து வெல்லும் இந்த நிகழ்ச்சியில் தனக்குப் பெரிய கவனம் கிடைக்கும் என நம்புகிறார் ஸ்ருஷ்டி.

ராம் சரணிடம் தேதி வாங்கிய இயக்குநர் ஷங்கர், அவருக்கான கதை அமையாமல் தவித்தார். கார்த்திக் சுப்புராஜ் தன்னிடம் ஒரு கதை இருப்பதாகச் சொல்ல, அதைக் கேட்ட ஷங்கருக்கு ரொம்பவே பிடித்துப்போய்விட்டது. ‘கதைக்கு என் பெயர் வேண்டாம். உங்கள் பெயரையே போட்டுக்கொள்ளுங்கள்’ என்று கார்த்தி சுப்புராஜ் சொல்ல, ‘இவ்வளவு பெருந்தன்மையான ஆளா இருக்காரே...’ என வியந்திருக்கிறார் ஷங்கர். அதற்குப் பரிசாக 2 சி கொடுத்தாராம். இதற்கிடையில், ‘அது என்னுடைய கதை’ என கார்த்திக் சுப்புராஜின் உதவியாளர் செல்லமுத்து கொந்தளிக்க, ஷங்கருக்கு பயங்கர ஷாக்! விவகாரம் இப்போது யூனியன் பஞ்சாயத்து வரை பரபரக்கிறது.

தமன்னா
தமன்னா

லைஃப் ஸ்டைல் கோச் Luke Coutinho-வுடன் இணைந்து, தமன்னா எழுதியுள்ள ‘Back to the Roots’ பெங்குவின் பதிப்பகத்தால் ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த நூலில், நம் நாட்டின் பழம்பெருமை வாய்ந்த பழக்கவழக்கங்களால் உடலுக்கும் மனதுக்கும் கிடைத்த பலன்களை எழுதியிருக்கிறார் தமன்னா. இதற்கிடையில், ஜெமினி டி.வி-யில் ‘மாஸ்டர் செஃப்’ தெலுங்கின் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் அம்மணி பிஸியாக இருக்கிறார்!

உஷ்…

மெர்சலான நடிகரைக் கேட்காமல் எதையும் செய்வதில்லையாம் ‘திலக’ நடிகை. படங்களில் நடிக்க மட்டுமல்ல, ஷாப்பிங் போகக்கூட அவருடைய அனுமதியைக் கேட்கிறாராம். இந்த அளவு பேரன்பு எதில் போய் முடியுமோ எனப் பதறுகிறார்கள் இருவருக்கும் நெருக்கமானவர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism