Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ரம்யா பாண்டியன்
பிரீமியம் ஸ்டோரி
ரம்யா பாண்டியன்

ரம்யா பாண்டியன், இரண்டு மாடுகளைத் தொலைத்துவிட்டு அல்லாடும் ஏழை சம்சாரியின் மனைவியாகக் கலங்கடித்திருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

ரம்யா பாண்டியன், இரண்டு மாடுகளைத் தொலைத்துவிட்டு அல்லாடும் ஏழை சம்சாரியின் மனைவியாகக் கலங்கடித்திருக்கிறார்.

Published:Updated:
ரம்யா பாண்டியன்
பிரீமியம் ஸ்டோரி
ரம்யா பாண்டியன்

ஒளிப்பதிவாளர் சங்கத்துக்கான தேர்தல் விரைவில் நடக்கவிருக்கிறது. இப்போது பொறுப்பு வகிக்கும் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் நடக்கவிருக்கும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என முடிவெடுத்திருக்கிறாராம். கூடவே, பத்துக்கும் மேற்பட்ட ஒளிப்பதிவாளர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களும் வரும் தேர்தலில் போட்டியிடக் கூடாது என அன்புக்கட்டளை போட்டிருக் கிறாராம். ‘புது ஆட்களுக்கு வாய்ப்பு கொடுப்போம். அவர்களின் நிர்வாகம் எப்படி இருக்கிறது எனப் பார்ப்போம்’ என பி.சி.ஸ்ரீராம் சொல்ல, சீனியர்கள் பலரும் போட்டியிலிருந்து விலகத் தொடங்கியிருக்கிறார்களாம்.

‘அசுரன்’, ‘கர்ணன்’ எனக் கலைப்புலி தாணு தயாரிப்பில் தனுஷ் நடித்த இரண்டு படங்களும் சூப்பர் ஹிட். ஆனாலும் தனக்கு நெருக்கமான நண்பர்களிடம், ‘இனி தாணு சார் படத்தில் நடிக்க மாட்டேன்’ எனச் சொல்லிவந்தார் தனுஷ். இதற்கிடையில் ‘அசுரன்’ படம் சைமா விருதுகளை அள்ள, அதைப் பாராட்டி பிரமாண்ட விளம்பரம் கொடுத்து அசத்தினார் தாணு. இதில் தனுஷுக்குத் தாங்க முடியாத மகிழ்ச்சியாம். நன்றி, பாராட்டு என மீண்டும் துளிர்த்திருக்கும் தாணு - தனுஷ் கூட்டணி விரைவிலேயே அடுத்த படத்தை ஆரம்பிக்கும் என்கிறார்கள்.

‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ படத்தில் புதுமுகம் மிதுன் மாணிக்கத்துடன் இணைந்து நடித்திருக்கும் ரம்யா பாண்டியன், அப்படியே குடிசை வீட்டுப் பெண்ணாக மாறியிருந்தார். கவர்ச்சிப் புகைப்படங்களால் ஆன்லைன் அலப்பறை கொடுக்கும் ரம்யா பாண்டியன், இரண்டு மாடுகளைத் தொலைத்துவிட்டு அல்லாடும் ஏழை சம்சாரியின் மனைவியாகக் கலங்கடித்திருக்கிறார். ‘நான் கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிற ஆள். அதனால்தான் துளிக்கூட மேக்கப் இல்லாமல் குக்கிராமத்தின் பெண்மணியாக நடித்தேன்’ என்கிறார் ரம்யா.

மிஸ்டர் மியாவ்

‘ராட்சசி’ படத்தை இயக்கி கவனம்பெற்ற கௌதம்ராஜ், சற்று இடைவெளிக்குப் பிறகு அருள்நிதியை வைத்துப் படம் இயக்குகிறார். இரண்டாவது படத்திலேயே அடுத்தகட்ட பாய்ச்சலைக் காட்டும்விதமாக தென்மாவட்டங்களின் ரத்தமும் சதையுமான வாழ்வியலைச் சொல்கிற கதையைக் கையிலெடுத்திருக்கிறார் கௌதம் ராம். ‘சக்தி ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனத்தின் சக்திவேல் படத்தை பிரமாண்டமாகத் தயாரிக்கிறார். விரைவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் படத்தின் பூஜை தொடங்கவிருக்கிறது.

சேரன், கௌதம் கார்த்தி இணைந்து நடிக்கும் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ உறவுகளை வலியுறுத்தும் அட்டகாசமான கிராமியப் படமாக வளர்ந்துவருகிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் கிராமத்து மனிதர்களோடு பேசி அவர்களின் வாழ்க்கை குறித்துக் கேட்டறியும் சேரன், அந்த நிகழ்வுகளை அப்படியே தன் சமூக வலைதளப் பக்கங்களிலும் பகிர்ந்துவருகிறார். படத்தின் அப்டேட்டுகளைவிட சேரனின் ஷூட்டிங் ஸ்பாட் அப்டேட்டுகளுக்கு செம ரெஸ்பான்ஸ். ஏழு வருடங்களுக்குப் பிறகு இயக்கும் படம் என்பதால், இயக்குநர் நந்தா பெரியசாமியின் உழைப்பும் வொர்க்கிங் ஸ்டைலும் கலங்கடிப்பதாகவும் சிலிர்க்கிறார் சேரன்.

உஷ்…

மீண்டும் டி.வி நிகழ்ச்சியைக் கையிலெடுக்கும் நாயகன், தனக்கான சம்பளத்தை உயர்த்தச் சொன்னாராம். ‘ரவுண்டாக 100’ என நாயகன் சொல்ல, 75 சி-க்கு ஓகே சொன்னதாம் தயாரிப்புத் தரப்பு. ‘வரவேற்பு அதிகமானால் கூடுதல் தொகை’ என அக்ரிமென்ட் போடப்பட்டிருக்கிறதாம். #வசூல்ராஜா!