அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

லாஸ்லியா
பிரீமியம் ஸ்டோரி
News
லாஸ்லியா

நகைச்சுவை நடிகர் சூரி தன் பிறந்தநாளில் வெளியிட்ட சிக்ஸ் பேக் வீடியோ, பல ஹீரோக்களையும் வாவ் சொல்ல வைத்துவிட்டது

எக்ஸ்க்ளூசிவ்: அதிர்ந்து போகாதீர்கள்… விஜய் சேதுபதி இன்னும் ஒன்றரை வருடங்களுக்குள் முடித்துக் கொடுப்பதாக கமிட்டாகியிருக்கும் படங்களின் எண்ணிக்கை 26. நல்ல கதையை யார் சொன்னாலும் மறுக்காமல் ஓகே சொல்லும் விஜய் சேதுபதி ஒரு நாள், இரண்டு நாள்கள் எனத் தேதி கேட்பவர்களிடமும் மறுப்பு சொல்வதில்லை. இப்படி ஒருசில நாள்களுக்கு மட்டும் தேதி கேட்பவர்களுக்கு அவர் கேட்கும் சம்பளம் ‘ஒரு நாளைக்கு ஒரு கோடி’!

நகைச்சுவை நடிகர் சூரி தன் பிறந்தநாளில் வெளியிட்ட சிக்ஸ் பேக் வீடியோ, பல ஹீரோக்களையும் வாவ் சொல்ல வைத்துவிட்டது. பெரும்பாலும் இந்தி, தெலுங்கு, கன்னட ஹீரோக்கள் ஃபிட்னெஸ் விஷயத்தில் அக்கறை காட்டுவார்கள். தமிழில் விக்ரம், ஆர்யா உள்ளிட்ட மிகச்சிலர் ஃபிட்டாக இருப்பார்கள். இந்தநிலையில் செம ஃபிட்டாக, ஸ்டைலாக வீடியோ வெளியிட்ட சூரி, ‘இனி நான் டஃப் ஃபைட் கொடுக்கும் ஹீரோ’ எனச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார். வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்துக்குப் பிறகு அட்டகாசமான மாஸ் கதை ஒன்றை ஓகே செய்துவைத்திருக்கிறாராம் சூரி.

‘சாணிக் காயிதம்’ படம் ரிலீஸுக்கு ரெடியாகியிருக்கும் நிலையில், செல்வராகவனுக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்திலும் செல்வராகவனுக்கு அட்டகாசமான வில்லன் பாத்திரம். கூடவே, படம் முடியும் வரை வேறு படங்களில் நடிக்கக் கூடாது எனச் சொன்னார்களாம். அதற்கு விலையாக செல்வராகவன் இரண்டு விரல்களைக் காட்டி சம்பளம் கேட்க, டபுள் ஓகே சொல்லிவிட்டதாம் ‘பீஸ்ட்’ டீம்!

ஹர்பஜன் சிங், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் ஆகியோருடன் ‘ஃப்ரெண்ட்ஷிப்’ படத்தில் நடித்த லாஸ்லியா, அடுத்து ‘கூகுள் குட்டப்பா’வில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் ஹிட்டடித்த ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’தான் தமிழில் ‘கூகுள் குட்டப்பா’வாக வருகிறது. கே.எஸ்.ரவிகுமார் அதன் ரீமேக் உரிமையை வாங்கி அவரே நடிக்கவும் செய்கிறார். இந்தப் படத்தை லாஸ்லியா பெரிதும் எதிர்பார்த்திருக்க, அடுத்ததாகப் பெண்களை மையப்படுத்திய கதை ஒன்றிலும் கமிட்டாகியிருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

ஒரு வழியாக நடிகர் வடிவேலு மீதான ‘ரெட்’ உடைந்திருக்கிறது. இயக்குநர் ஷங்கருடனான பிரச்னையில் அறிவிக்கப்படாத தடையைப் பிறப்பித்து, வடிவேலுவைப் படங்களில் நடிக்கவிடாமல் செய்த தயாரிப்பாளர்கள் சங்கம், இப்போது பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்திருக்கிறது. முதல்வர் ஸ்டாலினை வடிவேலு நேரில் சந்தித்தபோதே தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கறார் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாம். அதையடுத்து இயக்குநர் ஷங்கர், ‘லைகா’ சுபாஷ்கரன் உள்ளிட்டவர்களிடம் பேசி வடிவேலு பிரச்னைக்கு எண்ட் கார்டு போட்டிருக்கிறார்கள். அடுத்து சுராஜ் இயக்கத்தில் ‘நாய் சேகர்’ என்கிற படத்தில் நடிக்கவிருக்கிறார் வடிவேலு. தயாரிப்பு ‘லைகா’ சுபாஷ்கரன்!

உஷ்…

விரல் நடிகரின் தாய் இந்த அளவுக்கு வீராவேசம் காட்டுவார் எனப் பஞ்சாயத்துப் பேசிய படப்புள்ளிகள் யாருமே நினைக்கவில்லையாம். அதனால் சங்கத் தரப்பில் பேசியவர்களும் சைலன்ட்டாகிவிட்டார்களாம். பல கோடி கடனில் நிற்கும் தயாரிப்பாளர், அரசியல் செல்வாக்கு இருந்தும் ஆதரவுக்கு ஆளின்றி நிற்பதுதான் வேதனை!