Published:Updated:

மிஸ்டர் மியாவ் - ஐஸ்..!

ஐஸ்வர்யா மேனன்
பிரீமியம் ஸ்டோரி
ஐஸ்வர்யா மேனன்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ் - ஐஸ்..!

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
ஐஸ்வர்யா மேனன்
பிரீமியம் ஸ்டோரி
ஐஸ்வர்யா மேனன்

* நடிகை தான்யா ரவிச்சந்திரனுக்கு ‘கருப்பன்’ படத்துக்குப் பிறகு, பட வாய்ப்புகள் எதுவும் வராமலிருந்தது. சிபி சத்யராஜுடன் நடித்த ‘மாயோன்’ படமும் இன்னும் வெளியாகவில்லை. தற்போது தமிழில் ஒரு படம், தெலுங்கில் ஒரு படம் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். தமிழில் அவர் நடிக்கும் படத்தை ‘சுந்தரபாண்டியன்’ படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்குகிறார். இந்த ஹீரோயின் சென்ட்ரிக் கதையில் தான்யாவுக்கு போலீஸ் கேரக்டராம்.

* `இந்தியன் 2’, `அயலான்’ என ரொம்ப நாள்களுக்கு முன்னால் கமிட்டான இந்த இரண்டு தமிழ்ப் படங்களே ரகுல் ப்ரீத்சிங்கின் வசமுள்ளன. இடையில் பாலிவுட் பக்கம் சென்றவர், தற்போது டோலிவுட்டில் அதிக கவனம் செலுத்தும் முயற்சியிலிருக்கிறார். பக்கா கிராமத்துப் பெண்ணாக ஒரு தெலுங்கு படத்தில் நடித்துவருகிறார். அதன் நாயகனாக சிரஞ்சீவியின் தங்கை மகன் வைஷ்ணவ் தேஜ் நடிக்கிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

* `தமிழ்ப் படம் 2’, `நான் சிரித்தால்’ உள்ளிட்ட படங்களில் நடித்த ஐஸ்வர்யா மேனன், இந்த லாக்டெளனை இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களைப் பதிவிடுவதிலேயே செலவழித்திருக்கிறார். கிளாமராகவும் இருக்கும்; ஆனால், ஹைஸோன் கிளாமராக இருக்காது என்பதுதான் இவர் புகைப்படங்களின் ஸ்பெஷல். அசோக் செல்வனுடன் ‘வேழம்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். விரைவில் அந்தப் படம் வெளியாகவிருக்கிறது. தவிர, படங்கள், வெப் சீரிஸ் என எல்லாத் தளங்களில் உருவாகும் படைப்புகளுக்கான கதைகளும் இவருக்கு வருகின்றனவாம்.

மிஸ்டர் மியாவ் - ஐஸ்..!

* ‘நடிகையர் திலகம்’ படத்தை இயக்கிய நாக் அஷ்வின், தற்போது பிரபாஸ் - தீபிகா படுகோன் ஆகியோரைவைத்து சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதையொன்றைப் படமாக்கவிருக்கிறார். அந்தப் படத்தின் கதை விவாதம், கதை மேற்பார்வை உள்ளிட்ட விஷயங்களில் பழம்பெரும் இயக்குநர் சிங்கீதம் நிவாச ராவ் பணியாற்றவிருக்கிறார்.

மிஸ்டர் மியாவ் - ஐஸ்..!

*மலையாளத்தில் ஹிட்டான ‘ஜோசப்’ படத்தின் தமிழ் ரீமேக்கை பாலா தயாரித்திருக்கிறார். ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பூர்ணா நடித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை, மலையாள வெர்ஷனை இயக்கிய பத்மகுமாரே இயக்கியிருக்கிறார். படத்துக்குப் பெயர் ‘விசித்திரன்.’

* ‘ஜகஜால கில்லாடி’, ‘ஆயிரம் ஜென்மங்கள்’ என இரண்டு படங்கள் இயக்குநர் எழில் இயக்கத்தில் தயாராகி, வெளியாகாமல் இருக்கின்றன. தற்போது முதன்முறையாக த்ரில்லர் கதையொன்றை இயக்கவிருக்கிறார் எழில். அதில் பார்த்திபனும் கெளதம் கார்த்திக்கும் லீட் ரோலில் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கவிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism