Published:Updated:

மிஸ்டர் மியாவ்

த்ரிஷா
பிரீமியம் ஸ்டோரி
த்ரிஷா

‘தர்பார்’ படத்தில் ஐ.பி.எஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் ரஜினிகாந்த்.

மிஸ்டர் மியாவ்

‘தர்பார்’ படத்தில் ஐ.பி.எஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் ரஜினிகாந்த்.

Published:Updated:
த்ரிஷா
பிரீமியம் ஸ்டோரி
த்ரிஷா
  • மீண்டும் த்ரிஷா! இந்தமுறை புயல் மையம்கொண்டிருப்பது, பக்கத்து மாநிலங்களில். கொரட்டலா சிவா இயக்கும் சிரஞ்சீவியின் அடுத்தப் படத்தில் த்ரிஷாதான் ஜோடி. ஜீத்து ஜோசப் இயக்கும் மலையாளப்படத்தில் மோகன் லாலுடன் நடிக்கிறார் த்ரிஷா.

  • கமல்ஹாசன் தனது 65-வது பிறந்தநாளை வரும் நவம்பர் 7-ம் தேதி கொண்டாடுகிறார். அவரின் தந்தை ஸ்ரீநிவாசன் தேசிகன் நினைவு தினமும் அதே நாளில்தான் வருகிறது. ஆனால், இதை இவ்வளவு காலம் வெளியில் சொல்லாத கமல், இந்த ஆண்டு தந்தையின் நினைவாக பரமக்குடியில் சிலை ஒன்றை நிறுவுவதற்குத் திட்டமிட்டிருக்கிறார். இதற்கான விழா சென்னையில் நவம்பர் 7-ம் தேதி நடைபெறுகிறது. இதில் ரஜினி உட்பட தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்கிறார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
  • ‘தர்பார்’ படத்தில் ஐ.பி.எஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். ‘மூன்று முகம்’ அலெக்ஸ் பாண்டியன் போன்று டெரர் போலீஸாம். இதில் அவர் பெயர், ஆதித்யா அருணாசலம். தன் மகன் ஆதித்யா, தன் தந்தை அருணாசலம் ஆகியோரின் பெயர்களை இணைத்து ரஜினி கேரக்டருக்கு பெயர் சூட்டியிருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.

  • ‘பிகில்’ முடித்த கையோடு பாலிவுட் பறக்கிறார் இயக்குநர் அட்லி. தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக தோல்விப்படங்களையே கொடுத்திருக்கும் ஷாரூக்கான், மிகப்பெரிய ஹிட் கொடுக்கவேண்டும் என்கிற கனவில் இருக்கிறார். அந்தக் கனவுக்கு அவர் தேர்ந்தெடுத்திருக்கும் இயக்குநர்தான் அட்லி. டிசம்பரில் ஷூட்டிங் ஸ்டார்ட்டிங்!

த்ரிஷா
த்ரிஷா
  • தனுஷ் நடித்த படங்களிலேயே ‘அசுரன்’ படம்தான் தியேட்டர் கலெக்‌ஷன், ஆடியோ உரிமை, டிவி உரிமை, இணையதள உரிமை என எல்லாவற்றையும் சேர்த்து 100 கோடி ரூபாயைத் தாண்டியிருக்கிறது.

  • மகன் அமீனை முன்னிலைப்படுத்துவதில் மும்முரம் காட்டுகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். தற்போது 11-ம் வகுப்பு படித்துவரும் அமீனை பெரிய இசையமைப்பாளராக உருவாக்க வேண்டும் என்பதுதான் ரஹ்மானின் கனவாம்.

ம்யூட்

  • செலவுகளை எக்கச்சக்கமாக ஏற்றிவிட்ட இயக்குநர்மீது கடும் கோபத்தில் இருக்கிறதாம் தயாரிப்புத் தரப்பு. இதனால் இயக்குநருக்குப் பேசப்பட்ட சம்பளத்தில் சில கோடிகளைக் குறைக்கப்போகிறோம் என்று தயாரிப்பாளர் சொல்ல, இயக்குநர் கத்திப் பேச... பேச்சுவார்த்தை ‘சண்டை மைதானம்’ ஆகிவிட்டதாம்!

  • ஆன்மிக நாட்டம் கொண்ட நடன நடிகர் தன்னுடன் நடித்த ‘கல்’ நடிகை சரியான ஒத்துழைப்புத் தராததால் பெரும் குடைச்சல் கொடுத்துவிட்டாராம். அவரிடமிருந்து தெறித்து ஓடிவந்த நடிகை, ‘அவரை நம்பாதீங்க’ எனப் பார்ப்பவர்களிடம் எல்லாம் புலம்பித் தீர்க்கிறாராம்.