அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

 கேத்தரின் தெரசா
பிரீமியம் ஸ்டோரி
News
கேத்தரின் தெரசா

விஜய் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி

  • ‘காமராஜ்’ திரைப்படத்தைத் தயாரித்து இயக்கிய டீம், தற்போது அதை வெப்சீரிஸாகத் தயாரிக்கவுள்ளது. திரைப்படத்தில் காமராஜராக நடித்த பிரதீப் மதுரமே வெப்சீரிஸிலும் நடிக்கிறார்!

  • தனது 64-வது படத்தில் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். ஹீரோவாக நடிப்பதற்கு வாங்கும் சம்பளத்தைப்போல இரண்டு மடங்கு தொகையை இந்தப் படத்துக்கு சம்பளமாக விஜய்சேதுபதி பேசியிருக்கிறாராம்.

விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர்
விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர்
  • ‘மான்ஸ்டர்’ படத்தை அடுத்து எஸ்.ஜே.சூர்யா நடிக்கவிருக்கும் படத்தை இயக்கப்போகிறார் ராதாமோகன். இந்தப் படத்திலும் ‘மான்ஸ்டர்’ ஹீரோயின் பிரியா பவானி சங்கரே அவருக்கு ஜோடி என்பதுதான் விசேஷம்!

  • ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் திடீர் பரபரப்பு. காரணம், இந்தி நடிகர் அனில் கபூர். எதிர்பாராதவிதமாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அனில் கபூர் வந்ததால், அவரும் அந்தப் படத்தில் நடிக்கலாம் என்று தகவல்கள் பறக்கின்றன.

 கேத்தரின் தெரசா
கேத்தரின் தெரசா
  • `மெட்ராஸ்’ படத்துக்குப் பிறகு தமிழில் பெரிய அளவிலான கேரக்டர்கள் கிடைக்காத வருத்தத்தில் இருந்த கேத்தரின் தெரசா, இப்போது உற்சாகத்தில் இருக்கிறாராம். ` ‘அருவம்’ படத்துக்குப் பிறகு நீ பெரிய ரவுண்டு வருவ’ என்று படத்தின் ஹீரோவான சித்தார்த்தே அவரைப் பாராட்டியதில், பார்ட்டி படுகுஷி!

ம்யூட்

  • ஸ்டைலிஷ் இயக்குநரின் இரண்டு படங்கள் பணப்பிரச்னை காரணமாக இன்னும் ரிலீஸாகாமல் இருக்கும் நிலையில், அடுத்தாக உச்ச நடிகரை வைத்து படம் எடுக்க கதை எழுதிக்கொண்டிருக்கிறாராம். மேலும், இந்தப் படத்தில் உச்ச நடிகரின் மகளாக ‘அச்சமில்லாத’ நடிகை நடிப்பார் எனவும் கூறப்படுகிறது.

  • விளம்பரப் படங்களில் டாப் நடிகைகளோடு ஜோடி சேர்ந்து மற்றவர்களை பொறாமையில் பொசுங்க வைத்துவரும் பிசினஸ் பிரமுகர், விரைவில் வெள்ளித்திரையிலும் ஜொலிக்க இருக்கிறாராம். அங்கும் அவருடன் ஜோடி சேர, முன்னணி நடிகைகள் முட்டி மோதுகிறார்களாம்.