அரசியல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ரைசா
பிரீமியம் ஸ்டோரி
News
ரைசா

‘ராட்சசன்’ படத்தை மெகா ஹிட் வெற்றியாகக் கொடுத்த இயக்குநர் ராம்குமாரிடம் உடனே கதை கேட்டார் தனுஷ்.

‘சலார்’ படத்தில், பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கப் பல ஹீரோயின்கள் போட்டி போட, எல்லோரையும் பின்னுக்குத் தள்ளி ஸ்ருதி ஹாசன் இடம்பிடித்தார். பிரபாஸ் - ஸ்ருதி ஹாசன் இருவருக்குமான கெமிஸ்ட்ரி படத்தில் பக்காவாக வொர்க்அவுட்டாகி இருப்பதாகச் சொல்லி சிலாகித்த இயக்குநர் பிரசாந்த் நீல், இப்போது பாலிவுட் நடிகையான வாணி கபூரையும் படத்தில் களமிறக்கியிருக்கிறார். ஸ்ருதி ஹாசன், வாணி கபூர் இருவரும் போட்டி போட்டு கவர்ச்சிமழை பொழியப்போவதாகத் தெலுங்குத் திரையுலகம் ஆவலாகக் காத்திருக்கிறது.

‘ராட்சசன்’ படத்தை மெகா ஹிட் வெற்றியாகக் கொடுத்த இயக்குநர் ராம்குமாரிடம் உடனே கதை கேட்டார் தனுஷ். கதை ரொம்பவே பிடித்துப்போக, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜனிடம் சொல்லி அட்வான்ஸ், ஆபீஸ் உள்ளிட்ட அனைத்தையும் செய்துகொடுத்தார். ஆனாலும், ஷூட்டிங் கிளம்ப வருடக்கணக்கில் தாமதமாகிக்கொண்டே போகிறது. இதற்கிடையில் இன்னும் ஐந்து படங்கள் தனுஷின் கையில் இருக்க, ‘இடைப்பட்ட காலத்தில் நம்ம படத்தை ஆரம்பிச்சுடுவோம்’ என ராம்குமாருக்கு தைரியம் கொடுத்திருக்கிறார் தனுஷ்.

‘செத்தும் ஆயிரம் பொன்’, ‘சில்லுக்கருப்பட்டி’ படங்களின் மூலம் நன்கு கவனம் பெற்ற நிவேதிதா சதீஷுக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனாலும் கதைத் தேர்வில் மிகுந்த கவனம்காட்டிக் காத்திருந்த நிவேதிதா சதீஷ், நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனத்தில் உருவாகும் புதிய படத்தில் கமிட்டாகியிருக்கிறார். சவாலான வில்லேஜ் பாத்திரத்தில் நிவேதிதா வெளுத்துவாங்க, ஸ்பாட்டிலேயே பாராட்டியிருக்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி.

மிஸ்டர் மியாவ்

முகம் புதுப்பொலிவு கண்டிருப்பதால், செம குளுகுளு போட்டோக்களை இன்ஸ்டாவில் தட்டிவிட்டு, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார் ரைசா. ஹீரோயின் சென்ட்ரிக் கேரக்டரில் நடித்து முடித்துள்ள ‘தி சேஸ்’ ரிலீஸுக்கு ரெடியாகிவிட்ட சந்தோஷமும் தெரிகிறது ரைசாவின் முகத்தில்.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

விக்ரம் நடிக்கும் 60-வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கிவருகிறார். அசத்தலான அப்பா - மகன் கதையில் விக்ரமையும் அவர் மகன் துருவையும் அப்பா - மகனாகவே நடிக்கவைத்திருக்கும் கார்த்திக் சுப்புராஜ், எடுத்த வரையிலான படத்தை எடிட் செய்து காட்டியிருக்கிறார். விக்ரமுக்குப் படம் பக்கா திருப்தியாம். மூன்றாம் அலைக்குள் படத்தை முடிக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

அஜித்தின் ஃபர்ஸ்ட் லுக்கைக்கூட வெளியே காட்டாமல் ‘வலிமை’ படத்தின் வியாபாரத்தை வெற்றிகரமாக முடித்திருக்கிறார் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர். இன்னும் ஏழு நாள்கள் ஷூட்டிங் மீதமிருக்கும் நிலையில், தமிழக விநியோக உரிமையை கோபுரம் ஃபிலிம்ஸ் அன்புச்செழியனுக்கு வழங்கிய போனி கபூர், சாட்டிலைட், எஃப்.எம்.எஸ்., டிஜிட்டல் எனச் சகல வியாபாரத்தையும் சேர்த்து 200 கோடிக்கு முடித்திருப்பதாகச் சொல்கிறார்கள். அஜித்தின் படங்களிலேயே அதிக விற்பனையாகியிருப்பது `வலிமை’தான். அப்டேட் கேட்டு நச்சரித்த ரசிகர்களுக்குப் படத்தின் விற்பனை விவரங்களையே அப்டேட்டாகக் கொடுத்து அசத்தியிருக்கிறார் போனி கபூர்.

உஷ்…


ஜாலியும் கேலியுமாக இருந்த மணக்கும் நடிகரை, பொறுப்பான ஆளாக மாற்ற ஆன்மிகத்தின் பக்கம் திருப்பினார்களாம் அவருடைய நண்பர்கள். இப்போது மாதத்தில் முக்கால்வாசி நால்கள் விரதம், வழிபாடு, மௌனம் என மணக்கும் நடிகர் அதீத பக்திப் பழமாக மாறிவிட, ‘இதிலிருந்து எப்படி மீட்குறதுன்னு தெரியலையே...’ எனப் புலம்புகிறார்களாம். #சந்தனமா இருந்தாலும் அளவாப் பூசணும்!மிஸ்டர் மியாவ்