Published:Updated:

மிஸ்டர் மியாவ்: உடன்பிறப்பே... எக்ஸ்க்ளூசிவ்

ஜோதிகா
பிரீமியம் ஸ்டோரி
ஜோதிகா

#Jo50

மிஸ்டர் மியாவ்: உடன்பிறப்பே... எக்ஸ்க்ளூசிவ்

#Jo50

Published:Updated:
ஜோதிகா
பிரீமியம் ஸ்டோரி
ஜோதிகா

60-க்கும் மேற்பட்ட தலைப்புகளைப் பரிசீலித்து ஜோதிகாவின் 50-வது படத்துக்கு ‘உடன்பிறப்பே’ எனத் தலைப்பு வைத்திருக்கிறார்கள். பாரம்பர்ய குடும்பத்தின் பாசப் போராட்டம்தான் கதையாம். முன்னணி இயக்குநர் ஒருவரிடம் கதை கேட்டு, அதை 50-வது படமாக அறிவிக்க நினைத்திருந்தார்களாம் ஜோதிகாவும் சூர்யாவும். இதற்கிடையில் ‘கத்துக்குட்டி’ பட இயக்குநர் இரா.சரவணன் சொன்ன கதை ரொம்பவே பிடித்துப்போக, அதையே 50-வது படமாக டிக் செய்திருக்கிறார்கள்.

மிஸ்டர் மியாவ்: உடன்பிறப்பே... எக்ஸ்க்ளூசிவ்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாஞ்சையான வார்த்தை ‘உடன்பிறப்பே.’ “ஜோதிகாவின் 50-வது படத்துக்கு இப்படித் தலைப்பு வைத்தால் ஆளுங்கட்சியை ஆதரிப்பதுபோல் ஆகிவிடாதா?” என சூர்யாவுக்கு நெருக்கமான சிலர் கேட்டிருக்கிறார்கள். “படத்தைப் பார்த்தால் இந்தக் கேள்வியை நீங்கள் கேட்க மாட்டீர்கள்…” எனச் சொல்லி ‘உடன்பிறப்பே’ தலைப்பில் உறுதியாக நின்றாராம் சூர்யா. அம்பேத்கரின் குரலாக ‘ஜெய் பீம்’, கருணாநிதியின் குரலாக ‘உடன்பிறப்பே’ என சூர்யா செய்யும் சூட்சுமம், அரசியல் வட்டாரத்திலும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜோதிகாவுக்கு அண்ணனாக சசிகுமாரும், கணவராக சமுத்திரக்கனியும் நடித்திருக்கிறார்கள். அண்ணனுக்கும் கணவருக்கும் இடையே அல்லாடுகிற மாதங்கி என்கிற பாத்திரம் ஜோவுக்கு. புதுக்கோட்டை கதைக்களத்தில் இரட்டை மூக்குத்தி போட்டு, திருமண் பூசி அச்சு அசல் கிராமத்துப் பெண்மணியாகவே மாறியிருக்கிறார் ஜோதிகா. ‘கிராமத்துக் கதைகளில் பெரிதாகத் தலைகாட்டாத ஜோதிகாவுக்கு இந்தப் படம் பெரிய அடையாளமாக அமையும்’ என்கிறார்கள் கெட்டப் பார்த்து அசந்துபோனவர்கள்.

இந்தப் படத்தின் ஷூட்டிங்குக்காகத்தான், தஞ்சாவூர் அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனைக்குப் போனார் ஜோதிகா. பெரிய கோயிலுக்கு அருகிலிருக்கும் அந்த மருத்துவமனையின் சுகாதாரச் சீர்கேடுகள் குறித்து ஜோதிகா ஆதங்கப்பட, அதுதான் அவருக்கு எதிரான சர்ச்சையாக மாறியது. ஆதங்கத்தோடு நிற்காமல் அந்த மருத்துவமனை மேம்பாட்டுக்கு 25 லட்சம் ஒதுக்கிக் கொடுத்தார் ஜோதிகா. இதனால் தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட மக்களிடம் ஜோதிகாவுக்கு இப்போது செம செல்வாக்கு என்கிறார்கள்.

மிஸ்டர் மியாவ்: உடன்பிறப்பே... எக்ஸ்க்ளூசிவ்

ஜோதிகா, சசிகுமார், சமுத்திரக்கனி கூட்டணியில் கலையரசன், சிஜா ரோஸ், சூரி, ‘ஆடுகளம்’ நரேன், வேல ராமமூர்த்தி எனப் பெரிய நடிகர் பட்டாளமே களமிறங்கியிருக்கிறது. இசை இமான், ஒளிப்பதிவு வேல்ராஜ், எடிட்டிங் ரூபன் என வலிமையான தொழில்நுட்ப டீம். ‘சொல்லிவெச்சு ஹிட் அடிக்கிற அசத்தல் கதை’ என எடிட்டர் ரூபன் சொன்ன வார்த்தைகள் வைரலாகி, படத்துக்கான டாக் பெரிதாகியிருக்கிறது.

குடும்பம், பாசம் என்று மட்டுமல்லாமல் அரசியல், தாதாயிசம், அடித்தட்டு வாழ்க்கை எனப் பலவிதமான விஷயங்களின் கலவையாக ‘உடன்பிறப்பே’ படம் உருவாகியிருக்கிறதாம். நிலத்தடி நீர் சுரண்டப்படுகிற வேதனையையும் படம் முன்வைக்கிறதாம். இந்த அளவுக்குச் சமூக அக்கறை மிகுந்த கதை என்பதால்தான், தனது 50-வது படமாக இதைத் தேர்ந்தெடுத்தாராம் ஜோதிகா!