அலசல்
சமூகம்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

நந்திதா
பிரீமியம் ஸ்டோரி
News
நந்திதா

சத்யராஜ், சிபிராஜ் படத்தில் நந்திதா...

  • ‘இந்தியன்-2’ முடிந்ததும் ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தை இயக்கி, நடிக்கவிருக்கிறார் கமல்ஹாசன். படத்தில் வடிவேலுக்கு முக்கிய ரோல் இருக்கிறதாம். இசை, ஏ.ஆர்.ரஹ்மான்!

  • கமர்ஷியல் படங்களில் நடித்துவந்த நடிகர் விஷால், இனி கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க முடிவுசெய்திருக்கிறார்.

  • ‘8 தோட்டாக்கள்’ ஸ்ரீகணேஷ் எடுக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார் விஷால். அதர்வா, பிரியா பவானி சங்கர் ஆகியோரைவைத்து ‘குருதி ஆட்டம்’ படத்தை ஸ்ரீகணேஷ் எடுத்து முடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிஸ்டர் மியாவ்
  • ‘ஜாக்சன் துரை’ படத்துக்குப் பிறகு சத்யராஜ், சிபிராஜ் மீண்டும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். இந்தப் படத்தை ‘சைத்தான்’, ‘சத்யா’ படங்களை எடுத்த பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். படத்தின் ஹீரோயினாக, நந்திதா நடிக்கவிருக்கிறார்.

  • ‘டெவில்ஸ் நைட்’, ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த டெல் கணேசன் நிறுவனம் ‘டிராப் சிட்டி’ என்ற ஹாலிவுட் படத்தைத் தயாரித்துவருகிறது. இதில் ப்ராண்டன் டி ஜாக்சனுடன் நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் மூலம் ஜி.வி முதல்முறையாக ஹாலிவுட்டுக்குச் செல்கிறார்.

ம்யூட்

  • அரசியல் வாரிசு நடித்த படத்துக்கு, சீனியர் ஒளிப்பதிவாளர் ஒப்பந்தமானார். அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், படத்தில் ஐந்து நாள்கள் மட்டுமே வேலை செய்துவிட்டு தன்னுடைய உதவியாளரை படத்தின் ஒளிப்பதிவாளராக கமிட் செய்தார். தற்போது படத்தின் புரமோஷனுக்காக சீனியர் ஒளிப்பதிவாளர் பெயரை டைட்டிலில் பயன்படுத்தியிருக்கிறது படக்குழு. இதனால் கோபமடைந்த சீனியர் ஒளிப்பதிவாளர், தன் பெயரை டைட்டிலில் பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம்.

  • தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், மேடையில் பேசும்போது சமூக அக்கறையுடன் செய்திகளைப் பகிர்ந்து கொள்கிறார். ஆனால், உண்மை அப்படியல்ல. சமீபத்தில் நடைபெற்ற அவருடைய பட நிகழ்ச்சி காரணமாக அவசரத்துக்கு ஆம்புலன்ஸ்கூட அந்த வழியில் செல்ல முடியவில்லை என்கிறார்கள்.