அரசியல்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

டிம்பிள் ஹயாதி
பிரீமியம் ஸ்டோரி
News
டிம்பிள் ஹயாதி

தமிழில் பெரிய அளவு ரவுண்ட் வர உடல் கொஞ்சம் சதை போட வேண்டும், மூக்கு எடுப்பாக இருக்க வேண்டும் என பூஜா ஹெக்டேயிடம் யார் அறிவுரை சொன்னார்களோ

சசிகுமார் நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு புதூரிலுள்ள கோயிலில் நடந்தது. ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே பிறந்தநாள் கொண்டாடியிருக்கிறார் சசிகுமார். அதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கேக்கில் ‘தி பிரசிடென்ட் சசிகுமார்’ என டிசைன் செய்யப்பட்டிருந்ததாம். பெரும்பாலும் அரசியல் விஷயங்களில் தவறியும் தலையிடாதவர் சசி. ஆனாலும், ஜனாதிபதி ரேஞ்சுக்கு அவரை உயர்த்தி பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்தப்பட்டது பலரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது. சசிகுமாருக்கும் அரசியல் ஆசை வந்துவிட்டதோ என முணுமுணுப்புகள் கிளம்பியிருக்கின்றன.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் வெளியாகி, நல்ல கலெக்‌ஷன் பார்த்த படம் ‘திருச்சிற்றம்பலம்.’ அந்தப் படத்தின் ஷூட்டிங்கை 33 நாள்களிலேயே முடிக்கும்விதமாக ஷெட்யூல் போட்டுக்கொடுத்து அசத்தியவர் தனுஷ்தானாம். படத்தின் இயக்குநர் மித்ரன் ஜவஹர்தான் என்றாலும், ‘சரியாகத் திட்டமிட்டால் இந்தப் படத்தை ஒரே மாதத்தில் முடித்துவிட முடியும்’ எனச் சவால்விட்டுச் சொன்னாராம் தனுஷ். சொன்னபடியே ஷெட்யூலை முடித்தும் கொடுத்தாராம். இந்த விஷயம் இப்போதுதான் லேசாகக் கசியத் தொடங்கியிருக்கிறது. திரைக்கதையைக் கொடுத்தால், ஷெட்யூல் போடுவதில் அவ்வளவு கில்லாடியாம் தனுஷ்.

டிம்பிள் ஹயாதி
டிம்பிள் ஹயாதி
டிம்பிள் ஹயாதி
டிம்பிள் ஹயாதி
டிம்பிள் ஹயாதி
டிம்பிள் ஹயாதி

தமிழில் பெரிய அளவு ரவுண்ட் வர உடல் கொஞ்சம் சதை போட வேண்டும், மூக்கு எடுப்பாக இருக்க வேண்டும் என பூஜா ஹெக்டேயிடம் யார் அறிவுரை சொன்னார்களோ… அம்மணி இப்போது உணவுக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி மனம் விரும்பியபடி சாப்பிடத் தொடங்கியிருக்கிறாராம். வெளிநாட்டுக்குப் போய் மூக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்போகிறாராம். விஜய்யுடன் பூஜா ஹெக்டே ஜோடி போட்ட ‘பீஸ்ட்’ படம் சரியாகப் போகாததால், ‘கவனம் ஈர்த்தே தீருவது’ என்கிற உறுதியுடன் மறுபடியும் விஜய்யுடன் கைகோக்க நினைக்கிறாராம் பூஜா.

‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லன் பாத்திரம் செய்து தமிழில் கவனம் ஈர்த்தவர் அனுராக் காஷ்யப். மீண்டும் நம்மூர் இயக்குநர்கள் போய் கதவைத் தட்டிய நிலையிலும் அனுராக் காஷ்யப் அவ்வளவு சீக்கிரம் அசைந்து கொடுக்கவில்லை. இந்நிலையில், ‘இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் கைகோக்க விரும்புகிறேன்’ என நூல் விட்டிருக்கிறார் அனுராக் காஷ்யப். சர்ச்சை மன்னனே தன்னுடன் இணைய விரும்பியதில் லோகேஷுக்கு செம்ம மகிழ்ச்சி.

உஷ்...

உச்ச நடிகர், ஹெல்த் செக்கப்புக்காக இந்நேரம் வெளிநாட்டில் இருந்திருக்க வேண்டுமாம். ஆனாலும் பயணத்தைத் தள்ளிப்போட்டுவருகிறாராம். இல்லத் தரப்பில் வற்புறுத்திய நிலையில், ‘இப்போது செய்யும் படத்தின் ஷூட்டிங் முடியட்டும்’ எனச் சொல்லிவிட்டாராம்!