அரசியல்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ரைசா வில்சன்
பிரீமியம் ஸ்டோரி
News
ரைசா வில்சன்

கோலார் தங்கவயலில் உயிரை அடமானம்வைத்துப் பாடுபட்ட, ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் கதைதான் இது என்பது உறுதியாகிவிட்டது.

விஜய்யின் ‘வாரிசு’ பக்கா ஃபேமிலி படமாகவும், அஜித்தின் ‘துணிவு’ ஆக்‌ஷன் படமாகவும் பொங்கல் போட்டியில் இறங்குகின்றன. அஜித்தின் ‘துணிவு’ படத்திலும் ஃபேமிலி சென்டிமென்ட் காட்சிகள் ஏராளம் என்பதைப் படக்குழு ரகசியமாக வைத்திருக்கிறதாம். தன் மனைவி மற்றும் குழந்தைக்காக அஜித் எடுக்கும் ரிவெஞ்ச்தான் ‘துணிவு’ படத்தின் கதையாம். குழந்தையைக் காப்பாற்ற ஒரு தகப்பனாக அஜித் போராடும் காட்சிகள் ஃபேமிலி ஆடியன்ஸைச் சிலிர்க்கவைக்கும் வகையில் படமாக்கப்பட்டிருக்கின்றனவாம். அதனால், ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த பக்கா ஃபேமிலி படம்தான் ‘துணிவு’ என்கிறார்கள்.

ரைசா வில்சன்
ரைசா வில்சன்
ரைசா வில்சன்
ரைசா வில்சன்
ரைசா வில்சன்
ரைசா வில்சன்

விக்ரம் - பா.இரஞ்சித் கைகோத்திருக்கும் படத்துக்கு ‘தங்கலான்’ எனப் பெயரிட்டிருக்கிறார்கள். கோலார் தங்கவயலில் உயிரை அடமானம்வைத்துப் பாடுபட்ட, ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் கதைதான் இது என்பது உறுதியாகிவிட்டது. ஏற்கெனவே கோலார் தங்கவயலைப் பற்றி கே.ஜி.எஃப் இரண்டு பாகங்களாக வந்துவிட்ட நிலையில், ‘தங்கலான்’ எப்படி வித்தியாசம் காட்டப்போகிறது என்கிறார்கள் பலரும். இதே கேள்வி விக்ரம் மனதிலும் இருந்திருக்கிறது. ஆனால், முழுக்கதையையும் கேட்ட விக்ரம், ‘இது வேற லெவல் படம்’ எனச் சொல்லி முதற்கட்டமாக 100 நாள்களை ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார்.

சூர்யா - ‘சிறுத்தை’ சிவா இணையும் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. முதற்கட்டப் படப்பிடிப்பு மட்டுமே நிறைவடைந்திருக்கும் நிலையில், படத்தின் டிஜிட்டல் ரைட்ஸை வாங்க அமேசான் தொடங்கி நெட்ஃபிளிக்ஸ் வரை கடுமையான போட்டி நடக்கிறதாம். படத்துக்குத் திட்டமிடப்பட்டிருக்கும் மொத்தச் செலவை டிஜிட்டல் ரைட்ஸிலேயே சரிக்கட்டிவிடக்கூடிய அளவுக்கு வியாபாரம் தீவிரமாகியிருக்கிறதாம். இதுவரை சூர்யா நடித்த படங்களிலேயே டிஜிட்டல் ரைட்ஸ் அதிக விலைக்குப் போகும் படம் இதுவாகத்தான் இருக்கும் என்கிறார்கள்.

சிவகார்த்திகேயனின் ‘ப்ரின்ஸ்’ படத்தின் தமிழக விநியோக உரிமையை மொத்தமாக வாங்கியவர் மதுரை ஃபைனான்ஸியர் அன்புச்செழியன். மாற்று விமர்சனங்களைக் கடந்தும் படம் நல்ல ஷேர் வாங்கும் நிலையில், அன்புச்செழியன் உற்சாகமாக இருக்கிறாராம். ‘ப்ரின்ஸ்’ படத்தில் சிவகார்த்திகேயனின் பெயர் அன்புச்செழியன். இதைச் சொல்லிச் சொல்லிச் சிலிர்க்கும் அன்புச்செழியன், படத்தின் லாப நட்டத்தைத் தாண்டி, சிவகார்த்திகேயன் மீது மதிப்புகொண்டிருக்கிறாராம். தன்னுடைய கோபுரம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயனை நடிக்கவைக்க அடுத்தகட்ட முயற்சிகளைத் தொடங்கியிருக்கிறார் அன்புச்செழியன்.

உஷ்...

பொங்கலுக்கு ரிலீஸாகும் மெர்சலான நடிகரின் படத்தை, ஆளுங்கட்சி நிறுவனத்துக்குக் கொடுக்கக் கூடாது என முடிவெடுத்தார்களாம். ‘தியேட்டர் போடுவதில் சிக்கல்கள் வர வாய்ப்பிருக்கே…’ என நெருக்கமானவர்கள் தயங்க, ‘நான் பார்த்துக்குறேன்’ என மெர்சலான நடிகரே தைரியம் கொடுத்து, மூன்றெழுத்து விநியோகஸ்தர் கையில் ஒப்படைத்தாராம்!