Published:Updated:

Nayanthara: `மாடல்' டு `லேடி சூப்பர் ஸ்டார்'; டயானா மரியம் நயன்தாராவாக மாறிய பயணம்; ஒரு ரீ-விசிட்!

நயன்தாரா

நயன்தாரா ஹீரோயினாக நடிக்க முதலில் மறுப்பு தெரிவித்திருக்கிறார். பிறகு `ஒரு படம் மட்டும் பண்ணிப் பார்க்கலாம்' எனத் தயக்கத்தோடு மலையாளப் படத்தில் நடிக்கிறார்.

Nayanthara: `மாடல்' டு `லேடி சூப்பர் ஸ்டார்'; டயானா மரியம் நயன்தாராவாக மாறிய பயணம்; ஒரு ரீ-விசிட்!

நயன்தாரா ஹீரோயினாக நடிக்க முதலில் மறுப்பு தெரிவித்திருக்கிறார். பிறகு `ஒரு படம் மட்டும் பண்ணிப் பார்க்கலாம்' எனத் தயக்கத்தோடு மலையாளப் படத்தில் நடிக்கிறார்.

Published:Updated:
நயன்தாரா
ரசிகர்களுக்கு விருப்பமான `லேடி சூப்பர்ஸ்டார்' நயன்தாரா தனது வாழ்வின் அடுத்த அத்தியாயத்துக்குள் இன்று காலடி எடுத்து வைத்திருக்கிறார். இயக்குநர் விக்னேஷ் சிவன் உடன் `நானும் ரவுடி தான்' படப்பிடிப்பு தளத்தில் மலர்ந்த காதல் இன்றைக்கு திருமணமாக நிகழ்ந்திருக்கிறது. இந்த நேரத்தில் நயன்தாராவின் சினிமா பயணம் குறித்த ஒரு சின்ன ரீ-விசிட்!

* டயானா மரியம் குரியன் தான் நயன்தாராவின் இயற்பெயர். சினிமாவுக்காக 30 பெயர்கள் மேல் பரிசீலிக்கப்பட்டு கடைசியில் 'நயன்தாரா' என்பதைத் தேர்ந்தெடுத்தார். இந்த வார்த்தையின் அர்த்தம் 'நட்சத்திர கண்கள்' என்பதாம். பொருத்தமாகத் தானே உள்ளது!

* கல்லூரி படிக்கும் போது மாடலிங் செய்து கொண்டிருந்தார். இயக்குனர் சத்யன் அந்திக்காடு 'Manassinakkare' படத்தில் நடிக்க அழைப்பு விடுத்தார். நயன்தாரா முதலில் மறுப்பு தெரிவித்திருக்கிறார். பிறகு `ஒரு படம் மட்டும் பண்ணிப் பார்க்கலாம்' எனத் தயக்கத்தோடு தன் முதல் மலையாள படத்தில் நடிக்கிறார் நயன்தாரா.

* தமிழில் முதல் அறிமுகம் 'ஐயா' படம். சரத்குமாருக்கு ஜோடியாக நடித்த படம் அவருக்கு பெரிய வெற்றியைக் கொடுத்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நயன்தாரா
நயன்தாரா

* நயன்தாராவின் அடுத்த தமிழ் படமே சூப்பர் ஸ்டார் உடன். சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்த் உடன் நடித்த நயன்தாராவுக்கு அந்தப் படம் மிகப் பெரிய வெற்றியையும் பெயரையும் பெற்றுக்கொடுத்தது.

* சூர்யாவுடன் நடித்த 'கஜினி' படம் சூப்பர் டூப்பர் ஹிட். அடுத்தடுத்து படங்களில் ஹீரோயின் ஆக நடித்த போதும் விஜய்யின் 'சிவகாசி' படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடமாடினார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

* தெலுங்கு ஸ்டார் வெங்கடேஷ் உடன் நடித்த 'லக்ஷ்மி' படம் தான் நயன்தாராவுக்கு முதல் தெலுங்கு படம். படம் டோலிவுட்டில் பயங்கர ஹிட்.

* பில்லா, யாரடி நீ மோகினி, ஏகன், வில்லு என தொடர்ச்சியாக முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

நயன்தாரா
நயன்தாரா

* தெலுங்கில் சீதையாக இவர் நடித்திருந்த 'ஸ்ரீ ராமராஜ்ஜியம்' படத்திற்கு பிலிம்பேர் விருது, நந்தி விருது கிடைத்தன.

* கொஞ்ச நாட்கள் ஒதுங்கியிருந்தவர் மீண்டும் திரைக்கு வந்தபோது ஹீரோயின் சென்ட்ரிக் படங்களாகக் கொடுத்து அதில் வெற்றியும் பெற்று காட்டினார்.

Nayanthara: `மாடல்' டு `லேடி சூப்பர் ஸ்டார்'; டயானா மரியம் நயன்தாராவாக மாறிய பயணம்; ஒரு  ரீ-விசிட்!

* 2014-ல் வெளியாகிய 'அனாமிகா' படம் பை-லிங்குவலாக வெளியானது. அவர் நடிக்கத் தொடங்கிய ஹீரோயின் சென்ட்ரிக் படத்தின் ஆரம்பம் அதுதான்.

* தனி ஒருவன், ராஜா ராணி, நானும் ரவுடி தான், விஸ்வாசம், பிகில், தர்பார், அண்ணாத்த படங்களில் டாப் ஹீரோக்களோடு நடித்து தன் நம்பர் 1 இடத்தையும் தக்க வைத்து கொண்டார்.

* மாயா, டோரா, கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள், ஐரா, கொலையுதிர் காலம், நெற்றிக்கண் இப்படி இவரை மையமாக கொண்ட படங்களின் லிஸ்ட் பெரிது.

* அறம் படத்தில் கண்ணியம் மிகுந்த கலெக்டராக அவர் நடித்தது பலருக்கும் பிடித்திருந்தது.

* மூக்குத்தி அம்மன் படத்தில் ஒரு ஜாலியான அம்மன் கதாபாத்திம். இப்படி புதிய முயற்சிகளுக்கு அவர் ஒருபோதும் தயங்குவதில்லை.

*நயன்தாராவின் சினிமா பயணம் மாடலிங் தொடங்கி `லேடி சூப்பர் ஸ்டாரில்' உச்சம் பெற்று இன்றைக்கு நல்ல படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளராகவும் தன்னை சினி இண்டஸ்ட்ரியில் உருவாக்கிக் கொண்டிருப்பவருக்கு அந்த டைட்டில் பொருத்தமானதுதான்.

வாழ்த்துகள், நயன் - விக்னேஷ்!

நயன்தாரா நடிப்பில் உங்களுக்குப் பிடித்த படத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism