Published:Updated:

`மிகப்பெரிய பரிசு!'- யு.ஏ.இ அரசின் கோல்டன் விசா பெற்ற மோகன்லாலும், மம்முட்டியும்!

கோல்டன் விசா பெற்ற நடிகர்கள் மோகன்லால் மற்றும் மம்முட்டி

மலையாள திரையுலகின் ஸ்டார் நடிகர்களான மோகன்லால் மற்றும் மம்முட்டிக்கு யு.ஏ.இ அரசு கோல்டன் விசா வழங்கியதை அவர்களது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் திறமைசாலிகளுக்கு யு.ஏ.இ அரசு பத்து ஆண்டுகளுக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவிப்பது வழக்கம். அந்த வகையில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் புகழ்பெற்ற மலையாள நடிகர் மம்முட்டி ஆகியோருக்கு யு.ஏ.இ அரசு கோல்டன் விசா வழங்கியுள்ளது.

இந்திய சினிமா உலகில் ஷாருக்கான், சஞ்சை தத் ஆகியோர் இதற்கு முன்பு கோல்டன் விசா பெற்றிருக்கிறார்கள். அதுபோல விளையாட்டுத் துறையில் சானியா மிர்சாவுக்கும் கோல்டன் விசா இதற்கு முன்பு வழங்கப்பட்டுள்ளது.

மலையாள சினிமா உலகில் நடிகர்களுக்கு யு.ஏ.இ கோல்டன் விசா வழங்குவது இதுவே முதன்முறை. மோகன்லால், மம்முட்டி ஆகியோருக்கு கோல்டன் விசா வழங்குவதற்கான ஏற்பாடுகளை புலம்பெயர் தொழிலதிபரான லூலூ குரூப் சேர்மன் எம்.ஏ.யூசப் அலி செய்திருந்தார். அபுதாபி பொருளாதார மேம்பாட்டுத்துறை தலைவர் முகமது அலி அல் ஷோறாப் அல் ஹம்மாதி-யிடம் இருந்து கோல்டன் விசாவை மோகன்லால் மற்றும் மம்முட்டி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

நடிகர் மோகன்லாலுக்கு கோல்டன் விசா வழங்கும் நிகழ்வு
நடிகர் மோகன்லாலுக்கு கோல்டன் விசா வழங்கும் நிகழ்வு

கோல்டன் விசாவை வழங்கிய முகமது அலி அல் ஷோறாப் அல் ஹம்மாதி பேசும்போது, "சினிமா துறையில் நடிகர்கள் மோகன்லால் மற்றும் மம்முட்டி ஆகியோரின் பங்களிப்பு மகத்தானது" என்றார். கோல்டன் விசா பெற்ற பிறகு நடிகர் மோகன்லால் கூறுகையில், "இதற்காக முழு முயற்சி எடுத்த யூசப் அலிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கேரளத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுத்தியிருக்கிறார் அவர். அதனுடன் இந்த மாற்றமும் நிகழ்ந்துள்ளது.

யு.ஏ.இ அரசின் கோல்டன் விசா எங்களுக்குக் கிடைத்துள்ளது. இதனால் நிறைய பலன்கள் உண்டு. பத்து ஆண்டுகளுக்கு இந்த விசாவை பயன்படுத்தலாம். அதன்பிறகு இதை புதுப்பித்து, காலத்தை நீட்டித்துக்கொள்ளலாம். இது எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும். இதை மரியாதையாகக் கருதுகிறோம். நமது சினிமா இண்டஸ்ட்ரியை புரமோட் செய்யும் வாய்ப்புகளைக் கண்டிப்பாகத் தருவோம் எனக் கூறியிருக்கிறார்கள். இது அதற்கான வெளிப்பாடு என்றே கூறலாம்" என்றார்.

நடிகர் மம்முட்டிக்கு கோல்டன் விசா வழங்கும் நிகழ்வு
நடிகர் மம்முட்டிக்கு கோல்டன் விசா வழங்கும் நிகழ்வு

நடிகர் மம்முட்டி கூறுகையில், "யு.ஏ.இ அரசு வழங்கிய கோல்டன் விசாவை சந்தோசமாக பெற்றுக்கொண்டோம். கேரள மக்கள் எங்களுக்கு அளித்த மிகப்பெரிய பரிசாக இதைக் கருதுகிறோம். நீங்கள் இல்லாமல் இருந்திருந்தால் எங்களால் இதை அடைந்திருக்க முடியாது. இதை எங்களுக்கு வழங்கிய யு.ஏ.இ அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்" என்றார்.

மலையாள திரையுலகின் ஸ்டார் நடிகர்களான மோகன்லால் மற்றும் மம்முட்டிக்கு யு.ஏ.இ அரசு கோல்டன் விசா வழங்கியதை அவர்களது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.