Published:Updated:

"மோகன்லால் படம் தியேட்டரில்தான் வரவேண்டும்!"- `மரைக்கார்' சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மரைக்கார் படத்தில் மோகன்லால்
மரைக்கார் படத்தில் மோகன்லால்

"மரைக்கார் உள்ளிட்ட சினிமாக்களை தியேட்டர்களில்தான் ரிலீஸ் செய்ய வேண்டும். மெகா ஸ்டார்களின் படங்கள் முதலில் தியேட்டர்களில்தான் ரிலீஸ் செய்ய வேண்டும்" என்றார் அமைச்சர் சஜி செறியான்.

கேரளத்தில் கொரோனா லாக்டெளன் தளர்வுகளின் அடிப்படையில் தியேட்டர்கள் கடந்த 25-ம் தேதியே திறந்துவிட்டன. ஆனால், தியேட்டர்களில் ஐம்பது சதவீதம் இருக்கைகளில் மட்டுமே ரசிகர்கள் அமர்ந்து சினிமா பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பெரிய பட்ஜெட் சினிமாக்களும், பிரபல கதாநாயகர்களின் படங்களும் தியேட்டரில் ரிலீஸ் செய்ய தயங்குகிறார்கள். 50 சதவிகித ரசிகர்களே திரையரங்குகளில் இருப்பார்கள் என்பதால் போட்ட பணம் வசூலாகாது என அஞ்சுகிறார்கள்.

அதிலும் சுமார் நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் கதாநாயகனாக நடித்த 'மரைக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம்' படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வதற்காக ஒரு வருடத்துக்கும் மேலாகக் காத்திருக்கிறார்கள். தியேட்டர் திறக்கப்பட்ட உடன் ரிலீஸ் செய்வோம் என்றவர்கள் இப்போது ரிலீஸ் செய்ய தயங்குகிறார்கள். தற்போதைய நிலையில், வசூல் குறைவாகத்தான் வரும் என்பதால், ஓடிடி பிளாட்பார்ம்களில் 'மரைக்கார்' படத்தை ரிலீஸ் செய்ய அதன் தயாரிப்பாளர்கள் முயன்று வருகிறார்கள்.

அமைச்சர் சஜி செறியான்
அமைச்சர் சஜி செறியான்

இது திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி கருத்து தெரிவித்த கேரள மாநில தியேட்டர் உரிமையாளர்கள் சங்கமான பியோக் அமைப்பின் தலைவர் விஜயகுமார், "தியேட்டர்கள் திறந்த பிறகும் ஓடிடி போன்ற பிளாட்பார்ம்களில் சினிமாவை ரிலீஸ் செய்பவர்கள் எத்தனை பெரிய ஆளாக இருந்தாலும் சரி, அவர்களின் சினிமா எங்களுக்கு வேண்டாம். அவர்களுக்கு அவர்களின் வழி, எங்களுக்கு எங்கள் வழி. அவர்கள் ஓடிடி-யில் மட்டும் தங்கள் படத்தை ரிலீஸ் செய்துகொள்ளட்டும்" எனக் கொந்தளித்துள்ளார்.

சினிமா தயாரிப்பளர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் மத்தியில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதால் கேரள அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது. கேரள கலாசாரத் துறை அமைச்சர் சஜி செறியான் கூறுகையில், "தியேட்டர்கள் திறக்கப்பட்ட நிலையில் புதிய சினிமாக்களை தியேட்டர்களில்தான் வெளியிட வேண்டும். ஓடிடி என்பது தற்காலிக ஏற்பாடு மட்டுமே. வேறு வழி இல்லாமல் இருந்தால் மட்டுமே ஓடிடியில் ரிலீஸ் செய்வது பற்றி யோசிக்க வேண்டும்.

மரைக்கார் படத்தில் மோகன்லால்
மரைக்கார் படத்தில் மோகன்லால்

குறிப்பாக, மரைக்கார் உள்ளிட்ட சினிமாக்களை தியேட்டர்களில்தான் ரிலீஸ் செய்ய வேண்டும். மெகா ஸ்டார்களின் படங்கள் முதலில் தியேட்டர்களில்தான் ரிலீஸ் செய்ய வேண்டும். தியேட்டர் தொழில் நிலைத்து நிற்க வேண்டும். தியேட்டர் உரிமையாளர்களின் பிரச்னைகள் பற்றி விவாதிக்க வரும் செவ்வாய்கிழமை முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு