Published:Updated:

மனிதனின் முன்முடிவுகள்... இயற்கையின் ஆச்சர்யங்கள்... என்ன சொல்கிறது நிவின் பாலியின்'மூத்தோன்'?!

Moothon and its intense ideology

திரைக்கதை நெடுக இழையோடும் மென்சோகம், இயற்கை குறித்த விளக்கம், அதன் மீது மனிதன் வைத்திருக்கும் முன்முடிவுகள், அவன் வரைந்திருக்கும் விதிகள் என எல்லாவற்றையும் காட்சிப்படுத்தியிருப்பதே 'மூத்தோன்' படத்தின் இயக்குநர் கீத்து மோகன்தாஸ் செய்திருக்கும் ஆகச்சிறந்த முன்னெடுப்பு.

மனிதனின் முன்முடிவுகள்... இயற்கையின் ஆச்சர்யங்கள்... என்ன சொல்கிறது நிவின் பாலியின்'மூத்தோன்'?!

திரைக்கதை நெடுக இழையோடும் மென்சோகம், இயற்கை குறித்த விளக்கம், அதன் மீது மனிதன் வைத்திருக்கும் முன்முடிவுகள், அவன் வரைந்திருக்கும் விதிகள் என எல்லாவற்றையும் காட்சிப்படுத்தியிருப்பதே 'மூத்தோன்' படத்தின் இயக்குநர் கீத்து மோகன்தாஸ் செய்திருக்கும் ஆகச்சிறந்த முன்னெடுப்பு.

Published:Updated:
Moothon and its intense ideology

சில கதைகள் சொல்லப்படும்போது, அவற்றைக் கேட்கும் முதல் நொடி ஏதோ நம் செவி மடல்களை உரசிவிட்டுச் செல்வதாய்த்தான் உணர்வோம். ஆனால், கதை முடிந்ததும் தனிமையில் அமர்ந்து அதை முழுவதும் மீண்டுமொருமுறை மனதில் ஓடவிட்டால் நம்மையும் அறியாமல் அது நம்மை ஏதோ செய்யும். நிவின் பாலியின் `மூத்தோன்' அப்படித்தான் செய்கிறது.

Moothon and its intense ideology
Moothon and its intense ideology

சினிமா ஒரு கதை சொல்லும் கலை என்பதிலிருந்து காட்சி மொழிக் கலையாக மாறப் பல காலம் எடுத்துக்கொண்டது. எல்லாக் கதைகளும் சொல்லி ஆயிற்று, இனி சொல்வதற்குப் புதிய கதைகள் இல்லை என்ற நிலை வரும்போதுதான் அந்தப் பழைய கதைகளைப் புதிய திரைக்கதைகள் மற்றும் கதைசொல்லல் வடிவங்கள் மூலம் புதிய காட்சி மொழிகளுக்குள் அடக்கினர். ஆனாலும், அவ்வப்போது திடீரென நாம் இதுவரைக் கேட்காத கதைகளும் பார்க்காத நிலங்களும் சினிமாவில் வந்துகொண்டுதான் இருக்கின்றன. `மூத்தோன்' காட்சிப்படுத்திய கதையும் நிலமும் அப்படிப்பட்டவை.

தேவதைகளின் கதைகளுக்கும் ஃபேன்டஸி உலகங்களுக்கும் மட்டுமே மலையாள சினிமாவால் நீண்டகாலத்துக்குப் பயன்படுத்தப்பட்டுவந்த நிலம்தான் லட்சத்தீவுகள். அந்தத் தீவிலிருந்து தன் அண்ணனைத் தேடி மும்பைக்குக் கிளம்பும் ஒருவரின் கதையைச் சொல்கிறது இந்தப் படம். ஆனால், அந்த ஒருவரும் அவர் தேடும் தனது அண்ணனும் யார் என்பதுதான் 'மூத்தோனை'ப் புதுமையாக்குகிறது.

Moothon and its intense ideology
Moothon and its intense ideology

திரைக்கதை நெடுக இழையோடும் மென்சோகம், இயற்கை குறித்த விளக்கம், அதன் மீது மனிதன் வைத்திருக்கும் முன்முடிவுகள், அவன் வரைந்திருக்கும் விதிகள் என எல்லாவற்றையும் காட்சிப்படுத்தியிருப்பதே 'மூத்தோன்' படத்தின் இயக்குநர் கீத்து மோகன்தாஸ் செய்திருக்கும் ஆகச்சிறந்த முன்னெடுப்பு. தன் திரைக்கதையின் நோக்கம் இதுதான். இதைத்தவிர வேறெதுவும் சொல்லப்போவதில்லை, அது தேவையுமில்லை என்ற முடிவில் தீர்க்கமாக இருந்துகொண்டு, படத்தின் எல்லாக் காட்சிகளிலும் இயற்கைக்கும் மனிதனுக்குமான முரண்களை மட்டுமே பேசியிருப்பது எல்லாப் படைப்பாளிகளுக்கும் இருக்கவேண்டிய கலைநேர்மை.

இந்தக் கருத்தியலை இன்னும் ஆழமாகப் பேசியிருக்கவேண்டும் என்றெல்லாம் பல இடங்களில் தோன்றியது. மேலோட்டமாகவும் மென்மையாகவுமே எல்லாம் சொல்லப்பட்டிருக்கின்றன என்பதே கொஞ்சம் உறுத்தலாகத்தான் இருந்தது. ஆனால், படத்தின் ஓட்டமும் அது முடிந்த பின்னும் பல மணிநேரங்களுக்குத் தொடர்ந்த அதன் தாக்கமும் அந்த உறுத்தல்களுக்கெல்லாம் தீர்வானது. இயற்கை எதற்குமே விதிகளைக் கட்டமைக்கவில்லை. அது எந்த வட்டத்துக்குள்ளும் அடங்காதது. அதனால் ஆகாத காரியம் என எதுவுமில்லை.

Moothon and its intense ideology
Moothon and its intense ideology

"சும்மா படுத்துக்கிடந்தா மீன் எல்லாம் துள்ளி வந்து படகுல ஏறிக்குமா... வேடிக்கை பாக்காம மீன் புடி" படத்தின் ஒரு காட்சியில் ஒரு கதாபாத்திரம், மீன் பிடிப் படகில் படுத்துக்கொண்டிருக்கும் மற்றொரு கதாபாத்திரத்திடம் சொல்லும் வசனம் இது. அடுத்த சில விநாடிகளில் நிகழ்கிறது இயற்கையின் ஆச்சர்யம். ஆம், மீன்களெல்லாம் கூட்டம் கூட்டமாகத் துள்ளி அவன் படகுக்குள் விழுகின்றன.

இது ஏதோ மாயவித்தையால் நிகழவில்லை. இயற்கையின் இயல்பிலேயே நிகழ்கிறது. மனிதன் தன் மீது வைத்திருக்கும் முன்முடிவுகளையெல்லாம் இயற்கை எப்படி முறியடிக்கிறது என்பதன் ஒரு சிறிய உதாரணமே இந்தக் காட்சி. இப்படிப் பல உதாரணங்கள் 'மூத்தோன்' நெடுக தூவப்பட்டிருக்கின்றன.

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > https://bit.ly/2KccySR

Moothon and its intense ideology
Moothon and its intense ideology

வீட்டின் மூத்தோன் (அண்ணன்) ஏன் ஊரை விட்டுப் போனான் என்பதற்கான முன்கதை சொல்லப்பட்டவிதமும் படமாக்கப்பட்டவிதமும் சிறப்பு. அந்த ஃபிளாஷ்பேக்கில் சொல்லப்படும் காதல் கதை, அதன் அழகியல் என்பதைத் தாண்டி பாலின வேறுபாடு குறித்த பார்வையை ஒட்டுமொத்த சினிமாவும் எப்படி மாற்றிக்கொள்ளவேண்டும் என்பதற்கும் ஒரு பாடமாகிறது.

வெறும் கருத்தியல் பரப்புரை படமாக மட்டுமல்லாது, அதற்கான நிலத்தையும் விளக்கியிருப்பது, நுட்பமான தரவுகளைச் சேர்த்திருப்பதும் படத்தின் அழகியலைக் கூட்டுகிறது. குறிப்பாக படத்தின் கதாபாத்திரங்கள் பேசும் லட்சத்தீவுகளின் தமிழ் கலந்த மலையாளம். அந்த வட்டார வழக்கை நிவின் பாலி, சஞ்சனா, திலீஷ் போத்தன் என ஒவ்வொரு நடிகரும் பேசும் விதமும் கேட்பதற்கும் இருக்கிறது.

Moothon and its intense ideology
Moothon and its intense ideology

குறிப்பாக படத்தின் 'மூத்தோன்' நிவின் பாலி, தன் இரண்டு பரிமாணங்களிலும் இந்த வட்டார வழக்கை வெவ்வேறு தொனியில் பேசி தான் ஏன் ஒரு முழுமையான நடிகன் என்பதை இந்தப் படத்தைப்போலவே போகிறபோக்கில் சொல்லிவிட்டுச் செல்கிறார். முன்கதையில் அவர் வெளிப்படுத்தும் உணர்வுகளுக்கும் நிகழ்காலக் கதையில் அவர் வெளிப்படுத்தும் உணர்வுகளுக்கும் இடையில்கூட அத்தனை வேறுபாடுகள். நிவினின் கதாபாத்திரம் எழுதப்பட்டிருக்கும் விதமே ஒரு தனிக்கதை சொல்கிறது. வெளிச்சத்திலும் கடற்கரையின் ஈரப்பதத்திலும் வாழும்போது தன் வாழ்க்கைக்கான எந்த முடிவையும் தன்னால் எடுக்க முடியாத ஓர் அப்பாவியாக இருப்பவன், இருள் சூழ்ந்த வாழ்வைத் தேர்ந்தெடுக்கிறான். அங்கே அவன் நினைப்பதுதான் அந்த ஊருக்கே சட்டமாகிறது. அவனைத் தாண்டி அங்கே ஒன்றும் நிகழ்ந்துவிடாது என்ற நிலையில் இருக்கிறான்.

அதைப்போலவே முல்லா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சஞ்சனாவின் நடிப்பும் குறிப்பிடவேண்டிய ஒன்று. இந்த ஒட்டுமொத்த திரைக்கதையுமே முல்லா கதாபாத்திரத்தின் தேடலாகத்தான் இருக்கப்போகிறது என்பதாலும், பல ரகசியங்களைத் தன்னுள்ளே வைத்திருப்பதாலுமே இந்தப் பாத்திரம் மிகக் கனமாக இருக்கிறது. அதற்கான தன் பங்கு நடிப்பைக் கொட்டித் தீர்த்திருக்கிறார் சஞ்சனா.

Moothon and its intense ideology
Moothon and its intense ideology

படத்தின் முன்கதைக்கும் நிகழ்காலக் கதைக்கும் என்ன தொடர்பு, அதில் நடக்கும் தவறு இரண்டாம் பாதியில் எப்படிச் சரிசெய்யப்படுகிறது என்பதெல்லாம் கீத்து இந்தச் சமூகத்திடம் உரக்கச் சொல்லவிரும்பும் செய்திகளின் காட்சிவடிவங்கள். ஒரு திரைப்படம், தன் நோக்கத்தை தன் வடிவத்திலேயே முழுக்க முழுக்கப் பேசினால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற எண்ணமே படம் முடிந்ததும் மேலோங்கி நிற்கிறது. அந்த ஒரு கணத்தில்தான், என் வேலை இதனுடன் முடிந்தது, இனி இதைச் செயல்படுத்த வேண்டியது உங்கள் பொறுப்பு என மனதின் ஒரு ஓரத்தில் கீத்துவின் குரலும் ஒலிப்பது கேட்கிறது.