சினிமா
Published:Updated:

சினிமா விமர்சனம்: திரெளபதி

சினிமா விமர்சனம்: திரெளபதி
பிரீமியம் ஸ்டோரி
News
சினிமா விமர்சனம்: திரெளபதி

பணம் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக போலியாக நடத்தப்படும் பதிவுத் திருமணங்கள்தான் கதையின் கரு.

போலித் திருமணங்களுக்கு எதிராகக் குரல்கொடுப்பவள் ‘திரௌபதி.’

‘மனைவியையும் அவரின் தங்கையையும் ஆணவக்கொலை செய்தார்’ என்று கைது செய்யப்படுகிறார் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிலம்பாட்ட ஆசிரியரான ரிச்சர்ட். பிணையில் வெளிவரும் அவர் சென்னை யில் ஒரு வழக்கறிஞரையும் அரசியல் கட்சித்தலைவரையும் கொல்கிறார். ஏன் இந்தக் கொலைகள் என்பதற்கான காரணங்கள்தான் மீதிப்படம்.

வழக்கறிஞராக வரும் கருணாஸ் நடிப்பில் ஓகே ரகம். மற்றபடி ரிச்சர்ட், ஷீலா ராஜ்குமார் ஏதோ பரவாயில்லை. மற்ற அனைவருமே சுமாருக்கும் கீழாகவே நடித்திருக்கிறார்கள். படத்தில் சொல்லிக்கொள்ளும்படியாக இருக்கும் இரண்டே விஷயங்கள்... முணுமுணுக்கவைக்கும் ஜுபினின் பின்னணி இசையும் மனோஜ் நாராயணனின் ஒளிப்பதிவும் மட்டும்தான்.

சினிமா விமர்சனம்: திரெளபதி

பணம் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக போலியாக நடத்தப்படும் பதிவுத் திருமணங்கள்தான் கதையின் கரு. ஆனால், அதைச் சாதிய அரசியலோடு இணைத்து, ‘இது ஓர் அரசியல் படம்’ எனப் பிறரும் நம்பவேண்டுமென நிறையவே மெனக்கெடுகிறார் இயக்குநர் மோகன். போலித் திருமணங்களையும் பதிவு அலுவலகத்தின் ஊழல்களையும் அம்பலப்படுத்துவது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், அதெல்லாம் குறிப்பிட்ட ஒருசாராரின் திட்டமிட்ட கூட்டுமுயற்சி எனச் சித்திரிப்பது விஷமப் பிரசாரமே. ஆணவக் கொலைகளுக்கு நியாயச் சாயம் பூசமுயலும் பிற்போக்குத்தனம், திரௌபதியை இன்னமும் அந்நியப்படுத்துகிறது.

படம் நெடுகவே, ‘எந்த வம்சத்தில பிறந்தவ நீ?’, ‘சட்டமே அவங்களுக்கு சாதகமா இருக்கு’ என்றெல்லாம் காட்சிக்குக் காட்சி விஷவிதைகளையும் தூவுகிறார்கள். ஆனால், ரிச்சர்ட் செய்த இரண்டு கொலைகளைப் பற்றிக் காவல்துறையும் நீதிமன்றமும் கடைசிவரை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றன.

படத்தின் முதல்பாதியில் ‘ஆவணப்படம் எடுக்கிறோம்’ என்று சொல்லி ரானியா என்ற பெண் குறும்படம் எடுக்கிறார். இரண்டாம் பாதியில் ஷீலா ராஜ்குமாரின் பல காட்சிகள் அரசாங்கத்தின் ஆவணப்படமாகவே (செய்திப்படம்) படத்தை நகர்த்திச் செல்கின்றன. சம்பந்தமே இல்லாமல் கார்ப்பரேட் எதிர்ப்பு, நிலத்தடி நீர்ப் பாதுகாப்பு எனத் திணிக்கப்பட்டிருக்கும் காட்சிகள் கதையுடன் ஒட்டவே இல்லை.

ரிச்சர்ட்
ரிச்சர்ட்

காதல் திருமணங்களைப் பெற்றோர்கள் அங்கீகரிக்காத சூழலில்தான், சட்டப் பாதுகாப்பாகக் கொண்டுவரப் பட்டவை பதிவுத் திருமணங்கள். ஆனால், ‘அந்தப் பதிவுத் திருமணங்களையும் பெற்றோர் முன்னிலையில்தான் நடத்தவேண்டும்’ என்று வாதிடுவதிலேயே படத்தை எடுத்தவர்களின் ‘நோக்கம்’ வெட்டவெளிச்சமாகிவிடுகிறது.

தன் தரப்பு நியாயத்தை சினிமாவழி பேசுவதில் தவறில்லை. அதற்காக எதிர்த்தரப்பை மிகவும் தரம் தாழ்த்திச் சித்திரித்து, முழு எதிரிகளாக முன்னிறுத்துவது அறமில்லையே!

‘திரௌபதி’ அறம் பேசவில்லை!