‘கல்வி என்பது மனப்பாட இயந்திரங்களாக மாணவர் களை மாற்றுவதல்ல; சுயசிந்தனையாளர்களை உருவாக்குவதே’ என்கிறான் `ஹீரோ.’

ப்ளஸ் டூ-வில் திருநெல்வேலி மாவட்டத்திலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சியடைந்தாலும் சமூக அவலம் காரணமாக, போலிச்சான்றிதழ்களை உருவாக்கும், கல்லூரிகளுக்கு ஆள்பிடித்துக் கொடுக்கும் தரகராய் மாறிய சக்தி, தனித்துவமான ஐடியாக்களை அழிக்கும் கல்வி வியாபாரி மஹாதேவ், மாற்றுக் கல்வி மையம் அமைத்து இளம் கண்டுபிடிப் பாளர்களை உருவாக்கும் மூர்த்தி - இந்த மூவரையும் இணைக்கும் புள்ளியைத் தொட்டு சூப்பர் ஹீரோ கதை சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் பி.எஸ்.மித்ரன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSகலகலப்பான காட்சிகளில் ஹெலிகாப்டர் ஷாட்களைப் பறக்கவிடும் சிவகார்த்திகேயன், எமோஷன் ஏரியாவுக்குள் சிங்கிள் தட்டிவிட்டு நான் ஸ்ட்ரைக்கராகிவிடுகிறார். `ஜென்டில் மேன்’ கிருஷ்ணமூர்த்தி கதாபாத்திரத்தின் நீட்சிதான். சீசன்-2விலும் கலக்கியிருக்கிறார் அர்ஜுன்.

ஹீரோயின் கல்யாணி பிரியதர்சன், காமெடிக்கு ரோபோ சங்கர். படத்தில் என்னனென்னவோ கண்டுபிடிப்புகளைக் காட்டியிருக்கிறார்கள். இரண்டாம்பாதியில் ரோபோ சங்கரைப்போலவே காணாமல் போய், க்ளைமாக்ஸுக்கு முன்பு தலைகாட்டும் கல்யாணி பிரியதர்சன், கவரவில்லை. இரண்டே வசனங்களை மீண்டும் மீண்டும் பேசிக் கடுப்பைக் கிளப்பும் வில்லனாக அபய் தியோல். இவானா, குமரவேல், அழகம் பெருமாள் மற்றும் சூப்பர் ஹீரோவை உருவாக்கும் ஐந்தாறு சிறுவர்கள் சிறப்பாக நடித்திருக்கி றார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஜார்ஜ் சி.வில்லியம்ஸின் ஒளிப்பதிவும் யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசையும் சிறப்பு. படத்தொகுப்பாளர் ரூபன், நீளத்தை இன்னும் குறைத்திருக்கலாம்.
வி.செல்வகுமாரின் கலை வடிவமைப்பும், திலீப் சுப்பராயனின் சண்டை வடிவமைப்பும் கவனம் ஈர்க்கின்றன.
நான்கு சிறுவர்களால் சாட்டிலைட்டை ஹேக் பண்ண முடியுமா, அவ்வளவு தூரம் பயிற்சிகளும் சிறப்பான கருவிகளும் கொண்ட சூப்பர் ஹீரோ, வில்லனின் அடியாள்கள் நாலு தட்டுத்தட்டினால் கீழே விழுந்துவிடுகிறாரே என்று அடிஷனல் ஷீட் வாங்கும் அளவுக்குக் கேள்விகள்.

கல்விப் பிரச்னையைக் கதைக்களமாக எடுத்துக்கொண்டதற்காகவும் அதில் நடித்ததற்காகவும் பி.எஸ்.மித்ரனுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் பாராட்டுகள். ஆனால் தியேட்டரை வகுப்பறையாக மாற்றி, கருத்துகளை வசனங்களாக அள்ளிக் கொட்டுவதும் எக்கச்சக்கமான லாஜிக் மீறல்களும் இல்லாமல் இருந்தால் ‘ஹீரோ’வை ‘சூப்பர் ஹீரோ’ என்று சொல்லியிருக்கலாம்தான்.