Published:Updated:

சினிமா விமர்சனம்: மூக்குத்தி அம்மன்

மூக்குத்தி அம்மன்
பிரீமியம் ஸ்டோரி
மூக்குத்தி அம்மன்

அம்மன் வேடத்திற்காகவே வார்த்தெடுத்ததுபோல மின்னுகிறார் நயன்தாரா.

சினிமா விமர்சனம்: மூக்குத்தி அம்மன்

அம்மன் வேடத்திற்காகவே வார்த்தெடுத்ததுபோல மின்னுகிறார் நயன்தாரா.

Published:Updated:
மூக்குத்தி அம்மன்
பிரீமியம் ஸ்டோரி
மூக்குத்தி அம்மன்

டவுளின் தூதன் எனச் சொல்லிக் கொள்ளும் சாமியாரும் பெண் தெய்வ மும் மோதிக்கொள்ளும் முரணே இந்த மூக்குத்தி அம்மன்.

குடும்பத்தை நிராதரவாக விட்டுவிட்டுப் போன தந்தை, கடந்தகாலத்தை நினைத்தே குமையும் அம்மாஞ்சி அம்மா, குடும்பத்தைச் சுமக்கும் தலைமகன், அவரை நம்பி மூன்று தங்கைகள் எனத் தமிழ் சினிமாவுக்கே உரிய டெம்ப்ளேட் குடும்பம் ஆர்.ஜே பாலாஜியுடையது. அவருக்கு தரிசனம் தருவதுடன் டாஸ்க்கும் கொடுக்கும் அம்மன், கார்ப்பரேட் சாமியாரின் சதிகளை எப்படி முறியடிக்கிறது என்பதை நாடக பாணியில் சொல்லியிருக்கிறார்கள் இயக்குநர்கள் ஆர்.ஜே.பாலாஜி - சரவணன்.

சினிமா விமர்சனம்: மூக்குத்தி அம்மன்

அம்மன் வேடத்திற்காகவே வார்த்தெடுத்ததுபோல மின்னுகிறார் நயன்தாரா. கோபக்கார அம்மன்களையே பார்த்த கோலிவுட் ரசிகர்களுக்கு ஜாலியான அம்மன் நயன்தாரா வழியே நல்வரவு. இந்த வாரம் ஊர்வசி வாரம். சென்டிமென்ட் காட்சிகளில் கலங்க வைப்ப தென்றாலும் சிரிக்கவைப்ப தென்றாலும் இரண்டிலும் கலக்கல். ஆர்.ஜே பாலாஜி தொடக்கத்தில் சில காட்சிகள் சிரிக்க வைத்தாலும் கிரிக்கெட் கமென்ட்ரியைப் போல் லொடலொட என்று பேசி எரிச்சலூட்டுகிறார். ‘லீவு வேணும்’ என்கிற காட்சியில் நெகிழ வைக்கிறார் ஸ்மிருதி. மெளலி போன்ற நடிகரே சும்மா வந்து போகும்போது மற்றவர்களெல்லாம் எம்மாத்திரம்? முதல் பாதியில் ஆர்.ஜே பாலாஜி தரும் சலிப்பை இரண்டாம் பாதியில் கடன் வாங்கி நமக்குக் கொடுக்கிறார் பகவதி பாபாவாக வரும் அஜய் கோஷ்.

மதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் நடக்கும் அநீதிகளைத் தோலுரிப்பது ‘பராசக்தி’ காலத்திலிருந்தே நடந்தாலும் சமகால நிகழ்வுகளைத் தொட்டுக்காட்டும் துணிச்சலுக்குப் பாராட்டுகள். ஆனால் அதிகார பலமும் தந்திரமும் மிக்க கார்ப்பரேட் சாமியாரை கோமாளியாகக் காட்டியிருப்பது படத்தின் பலவீனம். ‘தமிழ்நாட்டில் மட்டும்தான் மதத்தை வெச்சு மக்களைப் பிரிக்கமுடியலை’ என்ற வசனம் நிகழ்கால யதார்த்தம். கடவுள் மறுப்பைப் பிரசாரம் செய்யலாம். ஆனால் ‘கடவுள் மறுப்பு போராட்டம்’ நடத்துவதாகக் காட்டுவது அபத்தக்காட்சி. கார்ப்பரேட் சாமியார் சதிகளை இன்னும் புத்திசாலித்தனமாக முறியடித்திருக்கலாம். அம்மன் வெறுமனே பன்ச் டயலாக்குகள் மட்டுமே பேசுவது, அதை டிவியில் பார்த்து ஒட்டுமொத்த ஊரும் திருந்துவது போன்ற காட்சிகள் எல்லாம் ‘ஏதோ பண்ணப்போறாங்க’ எனக் காத்திருக்கும் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமே!

தனித்தனிக் காட்சிகளாக அடுக்காமல், திரைக்கதையில் இன்னமும் கவனம் செலுத்தியிருந்தால் மூக்குத்தி அம்மனை தரிசிக்க கூட்டம் எக்கச்சக்கமாய்க் கூடியிருக்கும்.

- விகடன் விமர்சனக் குழு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism