சாதிக்கொடுமைக்கு எதிராகச் சாட்டை சுழற்றும் படங்களின் வரிசையில் சமுத்திரக்கனியின் பங்கு இந்த `நாடோடிகள் - 2.’

சமூக நலனே சொந்த நலன் எனப் போராடும் சசிகுமாருக்கு அதுல்யாவைத் திருமணம் செய்துவைக்கிறார்கள். அன்றிரவே அது கட்டாயப்படுத்தப்பட்ட திருமணம் என்று தெரியவர, அதிரடியாக ஒரு முடிவெடுக்கிறார் சசி. அந்த முடிவும், அதனால் ஏற்படும் விளைவுகளை சசிகுமார் எப்படிச் சமாளிக்கிறார் என்பதுமே இந்தப் படத்தின் கதை.
போராளி வேடத்தில் சசிகுமார். குற்றவுணர்ச்சியில் துவளும்போது கலங்கடிக்கிறார். துடுக்கான இளம்போராளியாக அஞ்சலியின் தேர்வு நச்! பரணி, விக்ரம் ஆனந்த் என அவரது குழுவினரின் கலவையான கதாபாத்திரப் படைப்பும் யதார்த்தம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅதுல்யா ரவி, நமோ நாராயணா, ராமதாஸ், பவன் போன்றவர்கள் ஒருசில காட்சிகளில் மட்டும் கவனிக்க வைக்கிறார்கள். சாதியப்பற்றைக் கண்களில் வெளிப்படுத்தி சகுனி வேலை செய்யும் அதுல்யாவின் அத்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்த சுபாஷினியும் படத்தின் முக்கிய ப்ளஸ். உடுமலை சங்கர் - கௌசல்யா சம்பவத்தைப் படத்தில் பொருத்தியிருக்கும் விதம் சிறப்பு. பாடல்களில் கோட்டைவிட்டாலும் பின்னணி இசையில் திறமை காட்டுகிறார் ஜஸ்டின் பிரபாகரன்.

சமூகம் புனிதப்படுத்தும் விஷயங்களிலிருந்துதான் சாதியப்பற்றும் ஆணவக்கொலையும் முளைக்கின்றன என்ற கருத்தை தைரியமாக முன்வைத்த இயக்குநர் சமுத்திரக்கனிக்குப் பாராட்டுகள். ஆனால் அதைச் சொல்லவரும் கதாபாத்திரங்களின் அரசியல் தெளிவுதான்(?) நம்மைக் குழப்புகிறது - பெரியாருக்கு அருகில் சுந்தர் பிச்சை போட்டோ இருப்பதுபோல!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
முதல் பாதியில் ஏகத்துக்கும் இருக்கும் பிரசார நெடி படத்தின் பிரதான மைனஸ். சாதி ஒழிப்பு பற்றிய புரிதலின் போதாமைகள் பட்டவர்த்தனமாகத் தெரிகின்றன. தேவையே இல்லாத அந்த க்ளைமாக்ஸ் பஸ் சர்க்கஸ் ரொம்பவே உறுத்துகிறது.

பிரசாரத் தொனியைக் குறைத்து, படமாக்கலில் கவனம் செலுத்தி, திரைக்கதையை நேர்த்தியாக்கியிருந்தால் நாடோடிகளை முந்தியிருக்கும் இந்த நாடோடிகள்-2.