Published:Updated:

சினிமா விமர்சனம்: நான் சிரித்தால்..!

ஆதி, ஐஸ்வர்யா மேனன்
பிரீமியம் ஸ்டோரி
ஆதி, ஐஸ்வர்யா மேனன்

நிறைய கதாபாத்திரங்கள். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒவ்வொரு இலக்கு.

சினிமா விமர்சனம்: நான் சிரித்தால்..!

நிறைய கதாபாத்திரங்கள். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒவ்வொரு இலக்கு.

Published:Updated:
ஆதி, ஐஸ்வர்யா மேனன்
பிரீமியம் ஸ்டோரி
ஆதி, ஐஸ்வர்யா மேனன்

துன்பம் வருங்கால் சிரிப்பு வரும் விநோத வியாதி `நெர்வஸ் லாஃபர்.’ அதனால் வேலையை இழந்து, காதலை இழந்து, வாழ்க்கையையே இழக்கும் நிலைக்குத் தள்ளப்படும் காந்தி, மீண்டும் அத்தனையும் மீட்டெடுக்கிறானா, நோயிலிருந்து மீண்டானா, மாணிக்கம் ; மாணிக் பாட்ஷாவாக மாறினானா என்பதே `நான் சிரித்தால்’.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கெக்கபெக்க காந்தியாக ‘ஹிப்ஹாப்’ ஆதி. அவரின் இயல்பான துறுதுறுப்பு படத்தின் பரபரப்புக்கு பலமாய் உதவியிருக்கிறது. என்ன, அவர் சிரிக்கும்போது நமக்கும் சிரிப்பு வருவது ஓகே; அவர் சீரியஸாக நடிக்கும்போதும் நமக்கு வருவதுதான் வருத்தம். காந்தியின் காதலி அங்கிதாவாக, ஐஸ்வர்யா மேனன்.

ஆதி, ஐஸ்வர்யா மேனன்
ஆதி, ஐஸ்வர்யா மேனன்

சுந்தர்.சி பட ஹீரோயின்களின் அச்சுபிசகாத கதாபாத்திரம். நடிப்பதற்கான இடத்தையும் குறைத்து, உடுத்துவதற்கான உடையையும் குறைத்து நடமாடவிட்டிருக்கிறார்கள். வில்லனாக கே.எஸ்.ரவிக்குமார், அவரது டிரேட் மார்க் தெனாவட்டு உடல்மொழியில் உறுத்தல் இல்லாத நடிப்பை வழங்கியிருக்கிறார். கிடைக்கும் ஆட்டோ கேப்பில் பஸ்ஸே ஓட்டியிருக்கிறார் `படவா’ கோபி. ரவிமரியா, முனீஷ்காந்த் மற்றும் சிவஷாரா மூவரும் தங்களால் முடிந்தளவுக்கு சிரிக்கவைக்க முயன்றிருக்கிறார்கள். சில நிமிடங்களே வந்தாலும், தன் வேலையைப் பொறுப்பாக முடித்துக்கொடுத்திருக்கிறார் யோகிபாபு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நிறைய கதாபாத்திரங்கள். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒவ்வொரு இலக்கு. அதைத்தேடி அலையும் பயணத்தில், அனைவரும் ஒருங்கிணைக்கும் ஒற்றைப் புள்ளி. அது அத்தனையும் நாயகனுக்கு சாதகமாகி, வில்லனுக்குப் பாதகமாகும் அதே சுந்தர்.சி பாணி திரைக்கதைதான். அதை உருட்டுக்கட்டை இல்லாமல் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ராணா. நீளமான இன்டர் வெல் பிளாக்கும், எல்லாவற்றையும் கோத்த க்ளைமாக்ஸ் காட்சியும் சிறப்பு. அதீத பாப்-கல்ச்சுரல் காமெடிகளையும், யூ-டியூப் தன்மை யையும் விலக்கி, இயக்குநருக்குக் கைகூடி வந்திருக்கும் கற்பனைத்திறனை இன்னும் ட்யூன் செய்திருந்தால் 32 பற்களும் தெரிய சிரித்திருக்கும் இந்தப் படம்.

சினிமா விமர்சனம்: நான் சிரித்தால்..!

டில்லிபாபு - சக்கரதாஸ் இருவருக்கும் இடை யிலுள்ள பகைமையைச் சொல்லித் தொடங்கும் படம், கடைசிவரையிலும் அந்தப் பகைமை என்னவானது எனச் சொல்லாமலே முடிந்து போகிறது. படம் முழுக்க நாயகியை கிளாமருக்கு மட்டுமே பயன்படுத்தி, மூடநம்பிக்கைகளையும் நியாயப்படுத்தி, இறுதியில் பாயின்ட், பாயின்ட்டாக ஒரு பக்கத்துக்கு சமூக அக்கறை க்ளாஸ் எடுப்பதெல்லாம் கடுப்பு ப்ரோ.

வாஞ்சிநாதன் முருகேசனின் ஒளிப்பதிவு பாடல் காட்சிகளில் பிரமாதம். ஸ்ரீஜித் சாரங்கின் படத்தொகுப்பு படத்தின் பரபரப்புக்கு உதவி யிருக்கிறது. ஹிப்ஹாப் தமிழாவின் இசையில், பாடல்கள் எல்லாம் கேட்டதும் பிடித்துவிடும்; பிடித்ததும் மறந்துவிடும் ரகம். பின்னணி இசையில், தனக்கும் படத்திற்கும் ஒருசேர மாஸ் கூட்டியிருக்கிறார்.

முடிவில் நமக்கு வயிறு வலிக்கவில்லை என்றாலும், மனதை வலிக்கச் செய்யாமல் அனுப்பி வைக்கிறது `நான் சிரித்தால்.’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism