Published:Updated:

சினிமா விமர்சனம்: நம்ம வீட்டுப் பிள்ளை

Aishwarya Rajesh, Sivakarthikeyan
பிரீமியம் ஸ்டோரி
Aishwarya Rajesh, Sivakarthikeyan

உறவுகளிடம் நெருக்கம் காட்டவும் தங்கைக்கு நல்ல வாழ்க்கை அமைக்கவும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட `நம்ம வீட்டுப் பிள்ளை!’

சினிமா விமர்சனம்: நம்ம வீட்டுப் பிள்ளை

உறவுகளிடம் நெருக்கம் காட்டவும் தங்கைக்கு நல்ல வாழ்க்கை அமைக்கவும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட `நம்ம வீட்டுப் பிள்ளை!’

Published:Updated:
Aishwarya Rajesh, Sivakarthikeyan
பிரீமியம் ஸ்டோரி
Aishwarya Rajesh, Sivakarthikeyan

பாசமலர் தங்கை துளசிக்கு நல்லதொரு கணவனைத் தேர்ந்தெடுத்துத் திருமணம் செய்துவைப்பதையே லட்சியமாகக் கொண்டிருக்கிறான் அரும்பொன். ஒரு மினி கிராமம் அளவுக்கு எண்ணிக்கை கொண்ட உறவினர்களுக்குத் தேவையான மரியாதையை அரும்பொன் அளித்தாலும் ஒவ்வொரு சொந்தத்துக்கும் ஒவ்வொரு ஈகோ. அரும்பொன்னை ஏற்றுக்கொண்டாலும் அவர்கள் துளசியை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். காரணம் என்ன? சிக்கல்கள் துளசி திருமணத்துக்கு முன், திருமணத்துக்குப் பின் தீர்ந்ததா இல்லையா என்பதை எக்கச்சக்க நட்சத்திரக் கூட்டங்கள் வழியாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
சினிமா விமர்சனம்: நம்ம வீட்டுப் பிள்ளை

அண்ணன் அரும்பொன்னாக சிவகார்த்திகேயன். நகைச்சுவையை அடக்கிவாசித்து சென்டிமென்ட் காட்சிகளில் உருக்கம் காட்டுகிறார். சில இடங்களில் பாஸ்மார்க் வாங்குகிறார். சில இடங்களில் ‘இன்னும் எதிர்பார்க்கி றோம்’ சொல்லவைக்கிறார். தங்கை துளசியாக ஐஸ்வர்யா ராஜேஷ். சிறப்பான தேர்வு, மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். சூரியும் சூரியின் மகனாக வரும் அன்பும், பல இடங்களில் கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள். சொந்த பந்தங்களாக நடித்திருப்ப வர்களின் பெயர்களை மட்டும் எழுதினாலே அடிஷனல் ஷீட் வாங்க வேண்டும். அத்தனைபேரும் தனக்குக் கொடுத்த பாத்திரங்களில் கச்சிதமாக நடித்துக்கொடுத்திருக்கி றார்கள். அரும்பொன்னின் மாமன் மகள் மாங்கனியாக அனு இமானுவேல். அத்தை மகனுக்கான காதல் நெருக்கம் காட்டியிருக்கிறார்.

சினிமா விமர்சனம்: நம்ம வீட்டுப் பிள்ளை

ஒவ்வொரு விசேஷத்தின் போதும் வெடிக்கும் குடும்பப் பிரச்னைகள், அவ்வளவு எளிதாய் பார்வை யாளர்களைப் படத்துக்குள் ஈர்த்துவிடுகின்றன. படம் ஆரம்பித்து முதல் ஐம்பது நிமிடத்திற்கு, கதைக்குள் போகமாட்டேன் என அடம்பிடிக்கிறார்கள். அந்த ஐம்பது நிமிடம், வெறும் இருபது நிமிடமாகியிருந்தால் இரண்டாம் பாதியில் இரண்டு கொட்டாவிகள் வந்திருக்காது. கதாபாத்திர வடிவமைப்பில் தென்படும் ஒருவித செயற்கைத்தன்மையும், பார்த்துப் பழகிப்போன கதையும் பெரிய திரையில் சின்னத்திரை பார்க்கும் உணர்வை ஆங்காங்கே தருகிறது. எத்தனை படங்களில்தான் பாசக்கார தங்கச்சிகளுக்கு வில்லங்கமான மாப்பிள்ளைகள் அமைவார்களோ?

சினிமா விமர்சனம்: நம்ம வீட்டுப் பிள்ளை

இமானின் இசையில் `காந்தக் கண்ணழகி’ மட்டும் ரிப்பீட் மோடில் கேட்கலாம். நீரவ்ஷாவின் வண்ணமயமான ஒளிப்பதிவு, படத்திற்கு விழாக்கோலம் சூட்டியிருக்கிறது.

நீளத்தைக் குறைத்து விறுவிறுப்பைக் கூட்டியிருந்தால் இன்னும் நல்ல பிள்ளையாக இருந்திருப்பார்.