Published:Updated:

சினிமா விமர்சனம்: OH MY கடவுளே

அசோக் செல்வன், ரித்திகா
பிரீமியம் ஸ்டோரி
அசோக் செல்வன், ரித்திகா

சின்னச்சின்ன ரியாக்‌ஷன்களால் அசரடிக்கிறார் விஜய் சேதுபதி.

சினிமா விமர்சனம்: OH MY கடவுளே

சின்னச்சின்ன ரியாக்‌ஷன்களால் அசரடிக்கிறார் விஜய் சேதுபதி.

Published:Updated:
அசோக் செல்வன், ரித்திகா
பிரீமியம் ஸ்டோரி
அசோக் செல்வன், ரித்திகா

கொஞ்சம் காதல், கொஞ்சம் கடவுள், கொஞ்சம் காமெடி, கொஞ்சம் சண்டை எல்லாம் கலந்த காதல் காக்டெய்ல்தான் ‘ஓ மை கடவுளே!’

அசோக் செல்வன், ரித்திகா, ஷா ரா மூவரும் பள்ளி நாள்களிலிருந்தே நண்பர்கள். கொண்டாட்டமும் குதூகலமுமாய் இளமையைக் கழிக்கிறார்கள். ஒருகட்டத்தில் ரித்திகாவிற்கு அவர் அப்பா மாப்பிள்ளை பார்க்க, ‘`யாரோ ஒரு தெரியாதவனைக் கல்யாணம் பண்றதுக்கு உன்னையே கல்யாணம் பண்ணிக்கவா?’’ என அசோக்கிடம் கேட்கிறார். அசோக்கும் ஓகே சொல்ல, கேட்டட் கம்யூனிட்டியின் டாப் ஃப்ளோரில் ஆடம்பரமாக செட்டில் ஆகிறார்கள். ஆனால், தோழியாய்ப் பார்த்த ரித்திகாவை மனைவியாய் நெருங்கமுடியாமல் அசோக் தவிக்க, ரித்திகாவோ நினைத்தமாதிரி திருமணவாழ்க்கை நடக்காததில் அப்செட்டாக, இவர்களுக்கு இடையில் ஸ்கூல் சீனியரான வாணி போஜன் க்ராஸ் ஆக, அதன்பின் நடக்கும் களேபரங்களும் கடவுள் சேட்டைகளும்தான் கதை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இனிவரும் துறுதுறு காதல் கதைகளில் எல்லாம் அசோக் செல்வனை நடிக்கவைக்கலாம் என்கிற அளவுக்குப் பக்காவாக செட் ஆகியிருக்கிறார். ஒருசில காட்சிகளில் கொஞ்சம் நாடகத்தனம் எட்டிப்பார்த்தாலும் இந்தக் காதலனை எல்லோரும் காதலிக்கவே செய்வார்கள். ரித்திகா சிங்கின் நடிப்பில் அவ்வளவு முதிர்ச்சி. கிண்டல், காதல், பிரிவு, ஏமாற்றம் என அத்தனை உணர்ச்சிகளையும் அநாயசமாகக் கடத்துகிறார். இப்படியொரு இரண்டாம் கதாநாயகிக்கான கதாபாத்திர வரைவு தமிழ் சினிமாவுக்குப் புதிது. கனமான அந்தக் கேரக்டரை கவனமாகத் தாங்கி வெரிகுட் வாங்குகிறார் வாணி போஜன். இரு நண்பர்களுக்கிடையே தள்ளாடுவது, வெறுப்பில் ஆழ்ந்து பார்ப்பவர்களைச் சிரிக்கவைப்பது என மிக மெச்சூர்ட் நண்பராகக் கலகலக்கவைக்கிறார் சிவ ஷா ரா. வாழ்த்துகள் ப்ரோ!

OH MY கடவுளே
OH MY கடவுளே

சின்னச்சின்ன ரியாக்‌ஷன்களால் அசரடிக்கிறார் விஜய் சேதுபதி. பார்க்கவும் செம க்யூட்! ரமேஷ் திலக் போன்ற அருமையான கலைஞனுக்கு கோலிவுட் இன்னும் எக்கச்சக்க வாய்ப்புகளைக் கொடுக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

லியான் ஜேம்ஸின் இசை படத்தின் பெரும் எனர்ஜி! ஆனால், ஒருசில இடங்களில் எங்கேயோ கேட்ட பரிச்சயம்! விது அயன்னாவின் ஒளிப்பதிவு மழைக்குப் பின்னான புல்வெளியாய் பளிச்சென இருக்கிறது. தினேஷ் மனோகரனின் ஆடை வடிவமைப்பு கதைக்கு செம பொருத்தம்.

OH MY கடவுளே
OH MY கடவுளே

பார்த்துப் பழகிய கதை, அடுத்தடுத்து யூகிக்க முடிந்த திரைக்கதை, சின்ன லாஜிக் ஓட்டை ஆகியவைதான் படத்தின் பலவீனம். ஆனால் நன்றாக எழுதப்பட்ட கதாபாத்திரங்களின் மூலம் அதை முடிந்தளவிற்கு சரிசெய்கிறார் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து. காதல் ஓவர்டோஸாகிவிடாமல், அழுகை போரடித்துவிடாமல், காமம் உறுத்தும் நகைச்சுவையாகவும் ஆகிவிடாமல் பேலன்ஸ் செய்யமுடிந்திருக்கிறது அவரால். இதனாலேயே ஒரு கலர்ஃபுல் பொழுதுபோக்குப் படமாய் மனதை நனைக்கிறது ‘ஓ மை கடவுளே!’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism