Published:Updated:

சினிமா விமர்சனம்: பஞ்சராக்ஷரம்

பஞ்சராக்ஷரம்
பிரீமியம் ஸ்டோரி
News
பஞ்சராக்ஷரம் ( பஞ்சராக்ஷரம் )

ஐந்து இளைஞர்கள், ஒரு பிரச்னையில் மாட்டிக்கொள்கிறார்கள் எனும் டிரேட்மார்க் ஹாலிவுட் க்ளிஷே கதைதான்.

பிக்கப்பட்ட ஒரு புத்தகம். அதைப் படித்துவிட்டு பிரச்னையில் சிக்கும் ஐந்து இளைஞர்கள். இதுதான், `பஞ்சராக்‌ஷரம்.’

சினிமா விமர்சனம்: பஞ்சராக்ஷரம்

டார்க் வெப் பற்றிக் கட்டுரை எழுதியதால் பிரச்னைக்குள்ளாகிப் பணியிலிருந்து விலகுகிறார் பத்திரிகையாளர் சமீரா. துஷ்யந்துக்குப் பயணம்தான் வாழ்க்கையின் இலக்கு. நல்ல வாய்ப்புக்காகக் காத்திருக்கும் கிடாரிஸ்ட் எய்தன். ஜீவிகாவுக்கு அன்பு காட்டுவதுதான் முழுநேர வேலை. அப்பாவின் பணத்தில் ஜாலியாகப் பொழுதைப் போக்கும் வெட்டி ஆபீஸர் தர்மா. இந்த ஐவரும், ஓர் இரவில் திடீரென நண்பர்களாகிறார்கள். துஷ்யந்தனுடன் இணைந்து மற்ற நால்வரும் நீண்ட பயணத்தைத் தொடங்குகிறார்கள். அந்தப் பயணத்தில், `பஞ்சாராக்‌ஷரம்’ எனும் புத்தகத்தைப் படிக்கிறார்கள். புத்தகத்தில் படித்த விஷயங்கள், நிஜ வாழ்க்கையில் அரங்கேறத் தொடங்க, கதை தொடங்குகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

துஷ்யந்தாக சந்தோஷ் பிரதாப், சமீராவாக மது ஷாலினி, எய்தனாக கோகுல் மூவரும் சரியான மீட்டரில் நடித்துக்கொடுத்திருக்கிறார்கள். தர்மாவாக நடித்த அஸ்வின் ஜெரோம், சில காட்சிகளில் கலகலக்க வைக்கிறார். ஜீவிகாவாக வரும் சனா அல்தாஃபின் நடிப்பில், குழந்தைத்தனம் கொஞ்சம் செயற்கைத்தனம். வில்லனாக நடித்திருக்கும் சீமானைப் பார்த்தால் பயம்கொள்ளும் தோற்றம். ஆனால் அது நடிப்பில் பிரதிபலிக்கவில்லை.

சினிமா விமர்சனம்: பஞ்சராக்ஷரம்

ஐந்து இளைஞர்கள், ஒரு பிரச்னையில் மாட்டிக்கொள்கிறார்கள் எனும் டிரேட்மார்க் ஹாலிவுட் க்ளிஷே கதைதான். அதை ஹாரர், அட்வென்சர், ஃபேன்டஸி எனப் பல ஜானர்களில் குழப்பியடித்துக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி வைரமுத்து. `ஒரு புத்தகத்தில் இருக்கும் விஷயங்கள் வாழ்க்கையிலும் நடந்தால்..?’ என்னும் ஐடியாவும் பழசு. ஆனால் வெவ்வேறு விதமான இளைஞர்கள் வாழ்க்கையில் இது எப்படி தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்று நிமிர்ந்து உட்கார்ந்தால், சில காட்சிகளில் மட்டும் சுவாரஸ்யம் கூட்டி, பல காட்சிகளில் விறுவிறுப்பு குறைந்து தொய்வடைகிறது படம். யுவாவின் ஒளிப்பதிவும், கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் பின்னணி இசையும் ஓகே ரகம். சித் ஸ்ரீராமின் குரலில் `தீராதே’ பாடல், அட்டகாசம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பஞ்சராக்‌ஷரம் புத்தகத்தைவிடப் பழைமையான ஒரு திரைக்கதை வடிவம், தொழில்நுட்பரீதியாக இன்னும் கைகூடியிருக்க வேண்டிய நேர்த்தி எனச் சில குறைகளும் படத்தில் இருக்கின்றன.

சினிமா விமர்சனம்: பஞ்சராக்ஷரம்

எல்லாம் நம் எண்ணப்படிதான் எனச் சொல்லவரும் படம், ஏன் சில இடங்களில் ஜாதகத்தையும் அமானுஷ்யத்தையும் நியாயப்படுத்துகின்றன என்கிற குழப்பமும் எஞ்சுகின்றன. அபாய சாகசங்களைச் செய்யும் ஒரே ஒரு வில்லன், அவருக்குத் துணையாக ஒரே ஒரு போலீஸ் என்பது சின்னப்புள்ளத்தனமாக இருக்கிறது. ஐவருக்கும் விதவிதமான ஆபத்துகள் வரும் என்று பார்த்தால், கடைசியில் பெண்கள் கடத்தல் என்னும் ஒரே புள்ளியில் தேங்குகிறது திரைக்கதை.

சுவாரஸ்யமான ஐடியா, சுவாரஸ்யமான படமாக மாறவில்லை.