Published:Updated:

அசுரன், சைரா, ஜோக்கர்... எது, எந்த லெவல்? - விமர்சனக் குறிப்புகள்

விமர்சனம்
News
விமர்சனம்

மலையாளத்து வாடை அடிக்கும் வட்டாரமொழி ஒரு பலவீனம்தான். சிதம்பரம் கதாபாத்திரத்தைத் தன் சின்னத் தோள்களில் தூக்கிச் சுமந்திருக்கிறார் கென்.

'நிலம் எங்கள் உரிமை; கல்வி எங்கள் ஆயுதம்; சுயமரியாதை எங்கள் வேட்கை; அதிகாரத்தில் பங்கு எங்கள் கோரிக்கை' என, பொட்டில் அறைந்து அரசியல் பேசும் வெக்கைப் பரப்பு மனிதர்களின் வாழ்க்கையே 'அசுரன்.' சிவசாமியாக தனுஷ். தொடக்கக் காட்சிகளில் வயதுமுதிர்ந்தவராய் தனுஷை ஒப்புக்கொள்ள மறுக்கிறது மனம். ஆனால் போகப்போக தன் உடல்மொழியால் முதிர்ச்சியும் நிதானமும் கொண்ட தந்தையாய் மனதின்மீது ஏறி அமர்கிறார். மஞ்சு வாரியர்... காத்திருந்து கிடைத்த பெருமைக்குரிய அறிமுகம். மலையாளத்து வாடை அடிக்கும் வட்டாரமொழி ஒரு பலவீனம்தான். சிதம்பரம் கதாபாத்திரத்தைத் தன் சின்னத் தோள்களில் தூக்கிச் சுமந்திருக்கிறார் கென்.

அசுரன்
அசுரன்

நாவலைப் படமாக மாற்றுவது எல்லோருக்கும் கைவராத மாயக்கலை. அதில் தான் வித்தகன் என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்திருக்கிறார் வெற்றிமாறன். நாவலின் மையக்கரு சிதையாமல் அதை சுவாரஸ்யமான அரசியல் சினிமாவாக்கி, பஞ்சமி நில அரசியலை முன்வைத்து, தவிர்க்கமுடியாத படைப்பாக கண்முன் நிறுத்துகிறார். ஆனால், அதை முழுமையான படைப்பாகக் கருதமுடியாததற்கு முக்கிய காரணம் டப்பிங், ஒளிப்பதிவு, எடிட்டிங் ஆகியவற்றில் எக்கச்சக்கமாய் நிகழ்ந்திருக்கும் தொழில்நுட்பச் சொதப்பல்கள். கதைக்களமே வன்முறைக்களம் என்றாலும், நம் முகத்தில் ரத்தக்கறை அப்பும் அளவுக்கான வன்முறைக்காட்சிகள் அதிகம். --> ஆனந்த விகடன் அளித்த மதிப்பெண்களுடன் விரிவான விமர்சனத்துக்கு > சினிமா விமர்சனம்: அசுரன் https://cinema.vikatan.com/tamil-cinema/asuran-movie-review

*

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சைரா நரசிம்மா ரெட்டி
சைரா நரசிம்மா ரெட்டி

'1857' முதல் இந்திய சுதந்திரப் போருக்கு முன்பே இங்கு பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக அரசர்கள் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார்கள். அந்தக் கலகக்காரர்களில் ஒருவரான உய்யாலாவாடா நரசிம்மா ரெட்டியின் வரலாற்றை வீரமும் தெலுங்கு மசாலாவும் கலந்து சொல்லியிருக்கிறது சிரஞ்சீவியின் 'சைரா நரசிம்மா ரெட்டி.' படத்தில் வரும் ஒரு டஜன் ஸ்டார்களையும் பின்னுக்குத்தள்ளிக் கைத்தட்டல்களை மொத்தமாய் அள்ளுகிறார் சிரஞ்சீவி. 'எனக்கு வயசாயிடுச்சா, யார் சொன்னது?' என்பது போல், சண்டைக் காட்சிகள், மாஸ் வசனங்கள், எமோஷனல் காட்சிகள் என எல்லாவற்றிலும் தூள் கிளப்புகிறார் சிரஞ்சீவி. முதல் பாதியில் நகர மறுக்கும் கதை போகப்போக சைராவின் குதிரைபோல் வேகம் பிடிக்கிறது. ஆனால், வரலாற்றுடன் பொருந்தாத, நம்ப முடியாத சில காட்சிகள் ஆங்காங்கே ஸ்பீடு பிரேக்கர்போல் கதையுடன் ஒன்றவிடாமல் செய்கின்றன. > விரிவான பார்வையை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > பிரமாண்டமாய் ஒரு வரலாறு! https://cinema.vikatan.com/tamil-cinema/an-analysis-on-sye-raa-narasimha-reddy-movie

*

சூப்பர்ஹீரோ படங்களின் அடையாளங்களான 'வாவ்' கிராபிக்ஸ், அசத்தும் ஸ்டன்ட் கொரியோகிராபி, 3D டெப்த் என மாயாஜாலங்கள் அனைத்தையும் தவிர்த்த ஒரு வித்தியாசமான காமிக் புக் படமாக வந்திருக்கிறது இந்த 'ஜோக்கர்.' ஜோக்கர் என்றாலே பேட்மேனின் பரம எதிரி; கோதம் நகர மக்களைத் துன்புறுத்தி ரசிக்கும் சைக்கோ என்பதுதான் இதுவரையான பிம்பம். ஆனால், யார் இந்த ஜோக்கர், அவன் ஏன் இப்படி ஆனான் எனக் காரணம் சொல்லும் கதையாகத் திரையில் விரிகிறது 'ஜோக்கர்.' ஒரு மனிதனுக்குத் தேவையான குடும்பம், நண்பர்கள், நல்ல வேலை, சமூக அந்தஸ்து என அனைத்தையும் அவனுக்குக் கிடைக்காதவாறு செய்துவிட்டால், அந்த மனிதன்தான் இந்த சமுதாயமே அஞ்சி நடுங்கும் ஒருவனாக உருவெடுப்பான்.

ஜோக்கர்
ஜோக்கர்

இந்த ஒற்றை வரிக் கதையை எவ்வித சமரசமும் இல்லாமல், ஒவ்வொரு காட்சியையும் ஒருவித குரூர அழகியலுடன் அணுகி, அதில் தன் நாயகனின் மிரட்டல் நடிப்பைக் கலக்கவிட்டு மிரட்சி ஏற்படுத்துகிறார் 'ஹேங் ஓவர்' புகழ் இயக்குநர் டாட் ஃபிலிப்ஸ். மூத்த நடிகர் ராபர்ட் டி நீரோவைக்கூட ஓரங்கட்டிவிட்டு திரையை ஆக்கிரமிக்கும் அந்த அசாத்தியத் திறன்... இப்போதே ஆஸ்கர் விருதில் ஃபீனிக்ஸ் பெயரைப் பொறித்துவிடலாம். இவ்வளவு வன்முறை தேவையா, பிரச்னையான வாழ்க்கை என்றால் கொலைகாரனாக மாறவேண்டுமா போன்று தர்க்கரீதியாகவும், படம் பேசும் அரசியல் ரீதியாகவும் இந்த ஜோக்கரை விமர்சிக்கலாம்தான். ஆனால், ஒரு சைக்கோபாத்தின் கதையைத் தர்மப்படிதான் சொல்லிவிட முடியுமா? --> விரிவான பார்வையை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > உங்களுக்கு இது புரிய வாய்ப்பே இல்லை! https://cinema.vikatan.com/hollywood/an-analysis-on-joker-movie

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் சிறப்புக் கட்டுரைகள்! > ரூ.200 மதிப்பிலான் ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2mjxazv |