சேட்டை

ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி, ஹன்சிகா, அஞ்சலி, நாசர் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து இருக்கும் படம் 'சேட்டை'. கண்ணன் இயக்க, தமன் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தினை யு.டிவி நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கிறது.

இந்தியில் அமீர்கான் தயாரிப்பில் வெளிவந்து பெரும் வரவேற்பு பெற்ற 'Delhi Belly' படத்தின் தமிழ் ரீமேக் தான் 'சேட்டை'.  'Delhi Belly' படம் இளைஞர்கள் மட்டுமே பார்க்க கூடிய வகையில் வசன உச்சரிப்புகள் இருக்கும் என்பதால், இப்படத்தினை தமிழில் எப்படி ரீமேக் செய்வார்கள் என்ற கேள்வி முதலில் எழுந்தது.

ஆனால் இயக்குனர் கண்ணன் தமிழ் திரையுலகிற்கு ஏற்றவாறு திரைக்கதை மற்றும் வசனங்களில் மாற்றம் செய்து இருக்கிறார். இப்படத்தின் கதைக்களத்தினை எடுத்துக் கொண்டு கண்ணன் மற்றும் ஜான் மகேந்திரன் இருவரும் இணைந்து மாற்றி அமைத்து இருக்கிறார்கள்.

ஜ.கே (ஆர்யா), நடுப்பக்கம் நக்கி (சந்தானம்) மற்றும் சீனு (பிரேம்ஜி) மூவரும் ஒரே கம்பெனியில் வேலை பார்த்து ஒரே இடத்தில் வாழ்ந்து வருகிறார்கள். ஜ.கேவிற்கு ஒரு மாதத்தில் திருமணம் நடைபெற இருக்கிறது. ஜ.கேவிற்கு தனக்கு நிச்சயக்கப்பட்ட மது (ஹன்சிகா) அல்லது தோழி ஷக்தி (அஞ்சலி) இருவரில் யார் தன்க்கு பொருத்தம் என்ற குழப்பம்.

சீனு (பிரேம்ஜி) முதலில் தனது காதலியை கொல்வதா அல்லது தனக்கு மேல்பொறுப்பில் இருக்கும் சித்ரா லட்சுமணனை கொல்வதா என்று. நடுப்பக்கம் நக்கி (சந்தானம்) தெரு ஓரக்கடையில் சிக்கன் சாப்பிட்டுவிட்டு ஏற்படும் வயிற்றுப் போக்கால் அவரது பிரச்சனை ஒருபுறம். மூவரும் இணைந்து ஒரு பிரச்னையில் சந்திக்க என்பதை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையில் படமாக ஆக்கியிருக்கிறார்கள்.

முதன் முறையாக இப்படத்திற்கு வசனத்தில் உதவி செய்து இருக்கிறார் சந்தானம். படத்தின் டைட்டில் சந்தானத்தின் பெயரும் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. தமன் இசையில் பாடல்களும் இளைஞர்களில் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று இருக்கிறது. ‘அகலாதே அகலாதே’, ‘என்னத்த கண்டுடடி புதுசா’ உள்ளிட்ட பாடல்கள் இளைஞர்களின் ரிங் டோனாக இருந்து வருகிறது. ‘Delhi Belly’ படத்தில் பாடல்களே கிடையாது. ஆனால் ‘சேட்டை’ படத்தின் 5 பாடல்களை இணைத்து இருக்கிறார்கள்.

பாஸ் (எ) பாஸ்கரன் கூட்டணியான ஆர்யா, சந்தானம் கூட்டணியில் அடுத்து வெளிவரும் படம் என்பதால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படத்தினை தயாரித்து இருக்கும் யு.டிவி நிறுவனம் படத்தினை பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்து வருகிறது.

ஆர்யா நடிப்பில் வெளிவந்த படங்களில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் படம் ‘சேட்டை’ தான். காமெடிக்கு ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி கூட்டணி, கவர்ச்சி பதுமைக்கு ஹன்சிகா, அஞ்சலி என ஒரு அனைத்து தரப்பினைரையும் கவரும் விதத்தில் ஏப்ரல் 5ம் தேதி வெளிவர இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!