எதிர் நீச்சல்

சிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'எதிர் நீச்சல்'. புதுமுக இயக்குனர் செந்தில் இயக்கி இருக்கிறார். அனிருத் இசையமைத்து இருக்கிறார். '3' படத்தினைத் தொடர்ந்து தனுஷ் இப்படத்தினையும் தயாரித்து இருக்கிறார்.

'3' கூட்டணியில் வரும் படம் என்பதால் படம் தொடங்கும் போதே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்ப்பார்ப்பை இரட்டிப்பு ஆக்கியது படத்தின் இசை தான். அனைத்து பாடல்களுமே ஹிட்.

பல வருடங்களாக குழந்தை இல்லாமல் ஒரு கோவிலுக்கு சென்று வேண்டுகிறார்கள் சிவகார்த்திகேயனின் அம்மாவும், அப்பாவும். அப்படி வேண்டியதால் பிறக்கும் சிவகார்த்திகேயனுக்கு அந்த கோவிலில் உள்ள தெய்வத்தின் பெயரான ‘குஞ்சிதபாதம்’ என்ற பெயரையே வைக்கிறார்கள்.

ஆனால் சிவகார்த்திகேயன் வளர வளர அவருக்கு அந்தப் பெயர் பிடிக்காமல் போகிறது. ஸ்கூலில் படிக்கும் போது சக நண்பர்கள், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கிண்டலும்,கேலியும் செய்கிறார்கள், இதனால் தனது பெயரை வெளியில் சொல்ல வெட்கப்படும் அவர் எப்படியாவது தனது பெயரை மாற்றி விட வேண்டும் என்று நினைக்கும்போதெல்லாம் ஏதாவது அசம்பாவிதம் நடக்கிறது.

இதனால் பெயரை மாற்றினால் எங்கே தெய்வக்குத்தம் ஆகிவிடுமோ என்று பயந்து போய் அந்த எண்ணத்தை கை விடுகிறார். பிறகு கல்லூரிக்கு போகும்போது ஹீரோயின் ப்ரியா ஆனந்த்தின் ஃப்ரெண்ட்ஷிப் கிடைக்கிறது. அப்போது அவர் சிவகார்த்திகேயனிடன் பெயரை கேட்கும் போது குஞ்சிதபாதம் என்று சொன்னால் எங்கே அவள் நம்ம சீப்பாக நினைத்து விடுவாளோ..? என்று பயந்து ஹரீஸ் என்று பெயரை மாற்றிச் சொல்கிறார்.

அப்புறம் என்ன ஆனது... வாழ்க்கையில் எப்படி 'எதிர் நீச்சல்' போட்டு ஜெயிக்கிறார் என்பதே 'எதிர் நீச்சல்' படத்தின் கதை.

'எதிர் நீச்சல்' படத்திற்கு மிகவும் பலம் என்றால் அனிருத் இசையில் வெளியான பாடல்கள் தான். அதுவும் இசை வெளியாகும் முன்பே பாடல்கள் உருவான விதம் என்று YOUTUBE இணையத்தில் வெளியிட்டார்கள். அந்த வீடியோ பதிவு பயங்கர ஹிட்.

பாடல்கள் வெளியானவுடன் அனைத்து பாடல்களுமே YOUTUBE இணையத்தில் ஹாட் டாக். அனைத்து பாடல்களுமே 1,00,000 ஹிட்டுகளை தாண்டிவிட்டது. அதுமட்டுமன்றி நாயகன் வேறு சிவகார்த்திகேயன். இவரது டைமிங் காமெடிக்கு எப்போதும் ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கும். படத்தின் ஒப்பனிங்கிற்கு கேட்கவா வேண்டும். இப்படத்தின் ஒரு பாடலுக்கு தனுஷுடன் நயன்தாரா வேறு நடனமாடி இருக்கிறார்.

சிவகார்த்திகேயனுக்கு இருக்கும் ஒப்பனிங், தனுஷ் தயாரிப்பு, அனிருத் இசை என்று ஹிட் கூட்டணி இருப்பதால் படத்தின் ஒப்பனிங்கிற்கு பஞ்சமில்லை. படம் மே 1ம் தேதி வெளியாகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!