நேரம் | நேரம், அல்போன்ஸ் புத்திரன், உதயநிதி ஸ்டாலின்

வெளியிடப்பட்ட நேரம்: 13:36 (14/05/2013)

கடைசி தொடர்பு:13:36 (14/05/2013)

நேரம்

நவீன், நஷ்ரின், நாசர், தம்பி ராமையா, ஜான் விஜய் மற்றும் பலர் நடிக்க அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'நேரம்'. ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகி இருக்கிறது.  ராஜேஷ் முருகசேசன் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.

இப்படத்தினை வின்னர் புல்ஸ் பிலிம்ஸ் தயாரிக்க, ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட இருக்கிறது.

'நேரம்' படத்தின் கதை : சென்னையில் Software Engineer ஆக பணிபுரியும் வெற்றி என்பவன், தன் வாழ்வில், நேரத்தினால் சந்திக்கும் இன்னல்களே இப்படத்தின் கதை.

வெற்றி ஓர் நல்ல வேலையில் இருக்கிறான். தன் தங்கைக்கும் ஓர் நல்ல இடத்தில் திருமணம், செய்து வைத்து, தன் காதலி 'வேணி'யை திருமணம் செய்ய அவள் பெற்றோரிடமும் சம்மதம் பெறுகிறான்.

வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக போய்க்கொண்டிருக்கும் தருணத்தில், அமெரிக்காவில் குண்டு வெடிக்கிறது. அதனால் வெற்றி தன் வேலையை இழக்கிறான். வேலை இல்லாத காரணத்தினால் வேணியின் தந்தை வேணிக்கு வேறோரு மாப்பிள்ளை பார்க்கிறார். இதற்கிடையில் தங்கை திருமணத்திற்காக வட்டிராஜாவிடம் கடன் வாங்கிய வெற்றி, வேலையை இழந்த காரணத்தினால் வட்டியை செலுத்த தவறுகிறான். வட்டி ராஜா வெற்றிக்கு கடைசி எச்சரிக்கை விடுகிறான். இப்பிரச்னையை சமாளித்து வெல்கிறானா? இல்லையா என்பது மீதி கதை.

இப்படம் தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது என்றால் அதற்கு காரணம் YOUTUBE இணையம் தான்.  "இப்பாடல் வரிகளுக்கு அர்த்தம் தேடாதீர்கள். இப்பாடல் வரிகளுக்கு அர்த்தம் கிடையாது" என்று கூறி 'PISTAH SUMA KIRA SOMARI JAMA KIRAYA' என்கிற பாடலை படத்தின் BLOOPERSயோடு YOUTUBE இணையத்தில் வெளியிட்டார்கள்.

அப்பாடல் ஒன்று தான் இப்படத்தின் எதிர்பார்ப்பினை இரட்டிப்பு ஆக்கியது. அப்பாடலை பார்த்த உதயநிதி ஸ்டாலின் இப்படத்தினைப் பார்த்துவிட்டு தனது ரெட் ஜெயிண்ட் நிறுவனத்தின் மூலம் வெளியிட தீர்மானித்து வாங்கிவிட்டார்.

வாங்கியது மட்டுமன்றி, தனது நெருங்கிய திரையுலக நண்பர்களுக்கு திரையிட்டு காண்பித்தார். படத்தினை பார்த்த சிவகார்த்திகேயன், செல்வராகவன் மற்றும் பல்வேறு திரையுலக பிரபலங்கள் தங்களது டிவிட்டர் இணையத்தில் பாராட்டி புகழ்ந்தார்கள்.

மலையாளத்தில் 10ம் தேதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்று இருக்கிறது. ரெட் ஜெயண்ட் நிறுவனம் தமிழில் சுமார் 200 திரையரங்குகளில் மே 17ம் தேதி வெளியிட திட்டமிட்டு இருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close