தில்லு முல்லு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கே.பால்சந்தரின் இயக்கத்தில் 1981ல் வெளியாகி சக்கைப் போடு போட்ட படமே ’தில்லுமுல்லு’. சீரியஸ் லுக் ரஜினியை முழுக்க முழுக்க காமெடி ஆர்டிஸ்ட்டாக பயன்படுத்தியிருப்பார் பாலசந்தர். அதன் அக்மார்க் ரீமேக்கே இப்போது வெளியாக இருக்கும் தில்லுமுல்லு -2.

மிர்ச்சி சிவா ஹீரோவாக, மலையாளத்தில் ஹிட்டான ’தட்டத்து மரையத்து’ படத்தின் நாயகி இஷா தல்வார் ஹீரோயினாக, பிரகாஷ் ராஜ், கோவை சரளா, இளவரசு, சத்தியன், சூரி, சிறப்பு தோற்றத்தில் சந்தானம் என ஃபுல் கலக்கல் காமெடி பேக்கேஜில் உருவாகியிருக்கிறது படம்.

சுந்தர்.சி நடித்த ’ஐந்தாம் படை’, ’வீராப்பு’ படங்களை இயக்கிய இயக்குனர் பத்ரி இந்த படத்தையும் இயக்கியிருக்கிறார். சிவா, சந்தானம் நடித்த ‘கலகலப்பு’ படத்திற்கு இவர் தான் வசனம். அந்த பழக்கத்தில் சிவாவுடன் இவர் கைகோர்க்க, நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் பாலசந்தரின் ஆசியோடு உருவாகி இருக்கிறது தில்லுமுல்லு ரீமேக்.

ரஜினியின் ’தில்லுமுல்லு’ படத்திற்கு இசையமைத்த எம்.எஸ்.விஸ்வநாதனே இந்த படத்திற்கும் இசையமைக்க, நியூ லுக்கிற்காக அவருடன் இணைந்து படம் முழுக்க வேலை செய்திருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.

படத்தை வேந்தர் மூவிஸ் சார்பாக தயாரிப்பாளர் எஸ்.மதன் தயாரித்து வெளியிடுக்கிறார். முழுக்க முழுக்க காமெடி கதை என்பதால் படத்திற்கு ’யு’ சர்டிபிகேட் கொடுக்கப் பட்டுள்ளது.

ரஜினியின் ’தில்லுமுல்லு’வை முழுசாக உல்டா பண்ணியிருக்கிறார் இயக்குனர் பத்ரி, பழைய படத்தில் தேங்காய் சீனிவாசன் நடித்த கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் பட்டையை கிளப்ப, இதில் பிரகாஷ் ராஜ் ’’கிளாஸிக் மினரல் வாட்டர் கம்பெனியின்’ எம்.டியாக நடிக்கிறார்.

100% சுத்தம், உண்மையாக வாழ்பவர் பிரகாஷ்ராஜ், அவரிடம் 100% பொய்,பித்தலாட்டம் என  ஏமாற்றும் சிவா சென்றடைய அங்கே நடக்கும் கோல் மால் சிக்கல்களை திரைக்கதையாக்கி இருக்கிறார் இயக்குனர்.

ஃபுட்பாலுக்கு பதில் ஐ.பி.எல், பாட்டு வாத்தியாருக்கு பதில் கராத்தே மாஸ்டர், மீசைக்கு பதில் பூனைக் கண்  என 2013க்கு ஏற்றாற்போல ஏகப் பட்ட புதுமைகளை புகுத்தியிருக்கிறார்கள் படக்குழுவினர்.

படத்தின் ஆடியோ கேசட்டை ஜெனீவா நகரின் விக்டோரியா மகாலில் வெளியிட பழைய படத்தின் தில்லுமுல்லு தீம் சாங்கையும், ‘ராகங்கள் பதினாறு’ பாடலையும் ரீமேக்கியிருக்கிறார்கள் எம்.எஸ்.வி- யுவன்  கூட்டணி.

தில்லுமுல்லு பாடலில் எம்.எஸ்.வி- யுவன் கூட்டணி கெஸ்ட் அப்பியரன்ஸிலும் நடித்து, பாடி ஆட, யூட்யூபில் பெரிய அப்ளாஸை அள்ளியிருக்கிறது தில்லு முல்லு தீம் சாங்க்.

ரஜினி நடித்த தில்லுமுல்லுவும் ஹிந்தியில் வெளியாகி ஏக ஹிட்டடித்த ’கோல் மால்’ என்ற படத்தின் ரீமேக் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவா - பிரகாஷ்ராஜ் கூட்டணியின் தில்லுமுல்லு வரும் ஜூன் 14 தேதியில் இருந்து தியேட்டர்களில் ஆரம்பமாகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!