பிசாசு கேரக்டரில் பறந்து மிரட்டும் ஹீரோயின் !

'' நீண்ட நாட்களாகவே எனக்கு ஒரு ஹாரர் படம் இயக்க வேண்டும் என்று விருப்பம்.ரசிகர்களை வெறும் பயமுறுத்துவது மட்டுமே 'ஹாரர் ' படம் அல்ல என்பது என்னுடைய  கருத்து. ‘பிசாசு’ பயமுறுத்தும் விஷயம் மட்டும் இல்லை , மனதை வருடும் விஷயம் கூடத்தான்.

இந்தப் படத்துக்கான முக்கிய கதாபாத்திரங்கள் மட்டுமின்றி மற்ற சிறிய பாத்திரங்களுக்குக் கூட நான்கு மாதம் பயிற்சிக் கொடுத்து நடிக்க வைத்து உள்ளேன். மூத்த நடிகர் ராதாரவி மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

கதாநாயகி பிரயாகா கேரளாவைச் சேர்ந்த நடிகை.  நடன கலைகளில் வல்லவரான பிரயாகா 60 அடிக்கும் மேல் உயரத்திலிருந்து ஒரு இரவு முழுவதும் பிசாசாகப் பறந்து  நடித்த காட்சி பிரமிப்பூட்டும் எனவும் கூறியுள்ளார் மிஷ்கின். 

அர்ரோல் கொரெலி என்ற புதிய இசையமைப்பாளர் இப்படம் மூலம் அறிமுகமாக உள்ளார். ’பிசாசு’ படத்தின் உயிர் நாடி கிளைமாக்ஸ் காட்சிதான் என்பதால் பல்வேறு ஹாலிவுட் படங்களில் ஸ்டண்ட் இயக்குநராகப் பணியாற்றிய டோனி இந்த காட்சி அமைப்பில் பணிபுரிந்துள்ளார். 

புதுமுகங்களை வைத்துப் படமெடுத்தாலும் பட்ஜெட் பெரிது. அந்த சுதந்திரத்தை எனக்கு அளித்த எனது நண்பரும் தயாரிப்பாளருமான பாலாவுக்கு  கடமைப்பட்டு இருக்கிறேன்'' என்கிறார் மிஷ்கின்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!