’ஐ’ பட முன்னோட்டம்!

இன்று இந்திய ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்கும் படம் ‘ஐ’. விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியாக உள்ள படம்.பொங்கல் சிறப்பாக திரைக்கு வரவிருப்பதாக இருந்து இப்போது இடைக்கால தடை என சில காரணங்களால் படம் வெளியாவதில் சற்றே சந்தேகம் எழுந்துள்ளது. எனினும் எப்போது வெளியானாலும் ஷங்கர் மற்றும் விக்ரமின் உழைப்பிற்காக காத்திருக்கிருக்கிறோம் என சமூக வலைகளில் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்புகளை வெளிபடுத்தி வருகின்றனர். இப்படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். 

இந்த படத்திற்காக விக்ரம் தனது முழு உழைப்பையும் கொடுத்துள்ளார். ஷங்கரின் பிரம்மாண்ட காட்சி அமைப்பும், மெனக்கெடலும் டீஸர் மற்றும் டிரெய்லரிலேயே இரு வருடங்களுக்கும் மேலான உழைப்பை எடுத்து காட்டும் அளவிற்கு பிரம்மிப்பை கொடுத்துள்ளது.  

தீபாவளி அன்றெ திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டு இறுதிகட்ட வேலைகள் முடிவடையாத காரணத்தால் படம் தள்ளிப்போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. விரைவில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது ’ஐ’ சுமார் 3000க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழகத்தில் மட்டும் 650க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படம் 3 மணி நேரம் 8 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக உருவாகி உள்ளதாம். இதற்கு முன்பு வெளியான ‘கத்தி’,’லிங்கா’ படங்களும் இதே பாணியில் 3மணி நேரம் இருந்து நீளம் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஷங்கர் படம் என்பதால் படத்தின் கதைக்களமும் , பிரம்மாண்டமும் 3 மணிநேரத்தை சமாளிக்கும் என எதிர்பார்ப்பார்க்கப்படுகிறது. 

எனினும் 3மணிநேரம் 8நிமிடங்கள் என்பது கண்டிப்பாக மிக நீளபடம் என்பதால் முதல் இரு தினங்களில் படத்தை பார்க்கும் பழக்கம் இருக்கும் ரசிகர்கள்தான் முழுமையாக படத்தை பார்க்கும் வாய்ப்பு இருக்கும். ஒருவேளை நீளம் கருதி ஓரிரு நாட்களில் படத்தை குறைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. இப்போதெல்லாம் எப்பேற்பட்ட படமாயினும் 2.30 மணிநேர படங்களையே நீளம் என மக்கள் கருதத் துவங்கியுள்ளனர். படத்தின் கதை, இதுவாக இருக்கும் அதுவாக இருக்கும் என பலரும் பலவாறு தெரிவித்தாலும் ஷங்கர் என்றால் மிகச் சாதரண கருப்பு பணம் என்ற கதையையே வித்யாச வித்யாசமான காட்சியமைப்பு, பிரம்மாண்டம் என மக்களை சீட்டில் கட்டி போடும் அளவிற்கு கை தேர்ந்தவர். எனவே இந்த படத்திற்கும் இப்போது வரை இதுதான் கதை என கணிக்க முடியாததாகவே இருக்கிறது.

ஒரு படத்திற்காக ரசிகர்கள் இரண்டு வருடங்களுக்கும் மேல் காத்திருந்தது மிகச்சில படங்களுக்காகவே இருக்கும். அதில் ‘ஐ’ நிச்சயம் இப்போது முதல் இடம் தான். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!